14 January 2016

பொண்ணோட அழகு உலகப்பிரசித்தம் போலிருக்கே :)

ஜோடி தேடும் தலைவர் :)

          ''செருப்பு வந்து விழுந்தும் கூட தலைவர் அலட்டிக்காமல் பேசுறாரே ,எப்படி ?''
         ''வலது கால் செருப்பு அருமையா இருக்கு ,இடது கால் செருப்பையும் வீசுங்க ,அதை மட்டும்  வச்சுக்கிட்டு என்ன செய்யப் போறீங்கன்னு கேட்கிறாரே !''


வீட்டுக்கு போனதும் இவருக்கு இருக்கு 'பொங்கல் ':)

               '' கண் ஆபரேசன்  செய்த  டாக்டர்  நீங்களே ,என் கணவரோட கண்கட்டை ஏன் பிரிக்க மாட்டேன்னு சொல்றீங்க ?''
                  ''முதல்லே யாரை  பார்க்க விரும்புறீங்கன்னு கேட்டதுக்கு 'நர்ஸ் நளினாவை 'ன்னு சொல்றாரே !''பொங்கல்னா இதுதான் பொங் 'கல் ' :)

             ''இதுவரைக்கும் நீ  இப்படி பொங்கல் வச்சு நான் சாப்பிட்டதே இல்லே !''
            ''அவ்வளவு டேஸ்ட்டா?''
            ''அட நீ வேற ...பொங்கல்லே  அவ்வளவு கல்லு கிடந்ததுன்னு சொல்ல வந்தேன் !''

ரொம்ப ரிஸ்க் எடுத்து வாங்கித் தந்த பொங்கல் புடவையோ :)

      ''நீ கட்டிக்கிட்டு இருக்கிற புதுப் புடவை சூப்பரா இருக்கே ,எங்கேடி  எடுத்தே ?''
         ''என் வீட்டுக்காரர் கிட்டேதான் கேட்கணும் ,ஜெயிலில் இருந்து வரட்டும் !''

 பொண்ணோட அழகு உலகப்பிரசித்தம் போலிருக்கே :)

             ''வாடிவாசல் வழியா வந்த மாடுகளை ஆர்வமா அடக்கினவங்க,தலைவரோட மாட்டை மட்டும் பிடிக்காம ஒதுங்கிட்டாங்களே...ஏன் ?''
               ''அடக்கிறவங்களுக்கு பரிசா தன் பெண்ணைக் கொடுக்கப் போறதா சொல்லி இருந்தாரே !''
  1. சொல்வது ஒன்று ,செய்வது ஒன்றுமாய் நம் அரசியல்வாதிகள் :)

 • உயர்நீதி மன்றத்தில்  தமிழில் 
  வாதாடக் கூடாது என்பதைக் கேட்டதும் 
  இரத்தம்  கொதித்தது ...
  காரணங்களை  கேட்டபோது  புரிந்தது .
  தமிழ் தமிழ் என முழங்கும் 
  தலைவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள்  என்று !
 • 24 comments:

  1. அவர் அந்தக் கட்சியின் செருப்புப் பேச்சாளரா இருப்பாரோ!

   நளினமான பதில்.

   பொங்கியதே கல் வெள்ளம்னு பாடிடலாம்!

   ஆஹா...அதுக்குத்தான் உள்ள வச்சிட்டாங்களா

   முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்கள்!

   புரிந்தால் சரி!

   ReplyDelete
   Replies
   1. இப்படியும் கட்சிக்கு நிதி திரட்டுகிறாரோ:)

    நளினமான பதில்தான் ,மனைவி அவரை நையப் புடைக்கப் போகிறாரே :)

    கரையாத கல் வெள்ளம்:)

    மனைவியின் சந்தோசமே முக்கியமென்று இவர் உள்ளே இருக்கிறார் :)

    மாட்டை அடக்கி தண்டனை யாரும் அனுபவிப்பார்களா :)

    அதற்குரிய வேலைகளை செய்தால் நல்லது :)

    Delete
  2. பொங் "கல்" இனிப்பு, இனிய உழவர் தின நாள் வாழ்த்துக்கள்.

   ReplyDelete
   Replies
   1. உள்ளத்தில் இருந்து கரையாமல் நீண்ட நாள் இருக்கும் உங்கள் வாழ்த்து :)

    Delete
  3. தந்தை பெரியார் தா‘சன்’னா இருப்பாரோ...?

   நர்ஸ் நளினாதான் கண்கண்ட தெய்வமா நெனைக்கிறேன்... ஏன்னா... என்ன அவுங்க... கண்போல பாத்துக்கிட்டாங்க... எ கண்ணுல்ல...!

   பொங்கல்ன்னு சொன்னாலே கல் இருக்கிறப்ப... நீங்க எங்க கல்லக் காணாமுன்னு கேக்கக் கூடாதில்ல...!

   அடி கள்ளி...! ஒ வீட்டுக்காரரு ஜெயில்ல இருந்து வெளிய வந்தா... நா ஒ வீட்டுகுள்ள இருக்க முடியாதிங்கிறத மறந்து பேசாதே...!

   தலைவரோட பொண்ண அடக்க முடியாதுல்ல... அதான் அடங்கிப் போயிட்டேன்...!

   தமிழ்... இரத்தம் கொதித்தது ...! அப்ப கொதி வந்தவுடன் இறக்கி வைச்சிட வேண்டியதுதான்...!

   த.ம.3
   ReplyDelete
   Replies
   1. வாரிசு இல்லாத பெரியாருக்கு இப்படியும் வாரிசா :)

    உருப்படியா இவர் வீடு போய் சேருவாரா :)

    இல்லாட்டி சந்தோசம் ,இருந்தா அதைவிட சந்தோசம்:)

    இப்படி வேற உள்குத்தா:)

    அந்த பயம் இருக்கட்டும் :)

    அதுக்கு முன்னாலே ,எரிவதை பிடுங்கினேன் ,கொதிப்பு அடங்கிப் போச்சே :)

    Delete
  4. Replies
   1. ஜோடியைத் தானே ஜி :)

    Delete
  5. பொங்கல் வாழ்த்துக்கள்...

   ReplyDelete
   Replies
   1. ஒன்று சொன்னாலும் நன்று சொன்னீர்கள் ,நன்றி :)

    Delete
  6. பொன்னு அழுகு தான் யாருமே மாட்டை பிடிக்கலையோ.....????

   ReplyDelete
   Replies
   1. அழகுமில்லை ,அழுகுமில்லை ...அழுக்கு:)

    Delete
  7. ஓட்டு போட்டா..விளம்பரங்களா வருது நண்பரே ..... அதனால் ஓட்டு போட முடியவில்லை... மன்னிக்கவும் பிறகு முயற்சிக்கிறேன் நண்பரே....

   ReplyDelete
   Replies
   1. உங்கள் முயற்சியில் வெற்றி பெற்று விட்டீர்களே ,நன்றி :)

    Delete
  8. ஹாஹாஹா! அட்டகாசமான நகைச்சுவைகள்! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

   ReplyDelete
   Replies
   1. முதலாவது ,நகைச்சுவை என்றாலும் உண்மையாச்சே :)

    Delete
  9. 01. பிழைக்கத் தெரிந்தவர்
   02. இது தப்புதான்
   03. பெயரிலேயே கல் இருந்தால் இப்படித்தான்.
   04. உண்மை மட்டுமே பேசுவாளோ..
   05. தலைவரோட பொண்ணு மாடாக்கும்.
   06. உண்மையான கருத்து

   ReplyDelete
   Replies
   1. எதிர்ப்பை இப்படியல்லவா எதிர்கொள்ள வேண்டும் :)
    அதனால்தானே டாக்டர் கொந்தளிக்கிறார்:)
    திண்டுக்கல் புகழ் பிரியாணியில் கல் வந்தாலும் தப்பில்லைதானே :)
    ஆனால் ,காட்டிக் கொடுக்க மாட்டாளே :)
    மாட்டைக்கூட அடக்கி விடலாம் :)
    அரசியல்வாதிகளிடம் அதற்கான உண்மையான முயற்சி இல்லையென்பதே உண்மை :)

    Delete
  10. பொங்கல் ஸ்பெஷல் அனைத்தும் ரசித்தோம்...பொங்"கல்" உட்பட...ஹ்ஹ

   பொங்கல் நல்வாழ்த்துகள்!

   ReplyDelete
   Replies
   1. பொங்கல்,பொங்'கள்' ஆகாமல் போச்சே :)

    Delete
  11. This comment has been removed by the author.

   ReplyDelete
   Replies
   1. என்னாச்சு ,ரூபன் ஜி :)

    Delete
  12. வணக்கம்
   ஜி
   செருப்பு நகைச்சுவை..சூப்பர்.. பொங்கலவைத்து நகைச்சுவையில் பொங்கவைத்துள்ளீர்கள்....த.ம7
   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்-2016

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   ReplyDelete
   Replies
   1. குறைகள் எல்லாம் தீர்ந்திடுமே என்று உங்களால் நம்ப முடிகிறது ,என்னால் சிரிப்பு பொங்கவைக்கத்தானே முடியுது :)

    Delete