15 January 2016

மாட்டை அடக்கியவன் ,மனைவியை :)

வலையுலக உறவுகள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !
-----------------------------------------------------------------------------
இதற்கு  பரிகாரம் எதுவுமே இல்லை :)

                ''ஏழரைச் சனி முடியும் போது  நிச்சயம்  உங்களுக்கு கல்யாணமாயிடும் !''
                ''அப்படின்னா ,சனி வேற ரூபத்தில் வாழ்க்கை முழுதும் தொடர்ந்து வரும்னு சொல்றீங்களா ?''


மருமக  ,சுத்தச் சோம்பேறியா :)
                    ''உன் மருமக  சுத்தச் சோம்பேறியா  ,ஏன் ?''
                     ''அந்த காலத்தில் , உரல்லே மாவாட்டி வழிச்சி எடுத்தோம் ,அவ என்னடான்னா பாக்கெட் மாவைக் கூட வழிச்சி எடுக்க மாட்டேங்கிறாளே !''

மாட்டை அடக்கியவன் ,மனைவியை :)
             ''ஓடிப் போனது என் பெண்டாட்டி ,நீங்க ஏண்டா ஓவரா ஃபீல் பண்றீங்க ?''
                ''ஒரு காலத்தில் நீ மாடுகளை அடக்குவதில் சாம்பியன்,அதை நினைச்சுதான் !''


 1.           
 2. நல்ல வேளை ,புருஷன் பெயரை மாத்திக்கணும்னு சொல்லலே :)

           ''என் பெயர் ராஜசேகர் ... உன் பெயர் 'ரா .சசிபிரியா 'ங்கிறது சரிதானே ,அதை ஏன் 'R.சசிபிரியா 'ன்னு போட்டுக்கணும் ?''
              ''எல்லாரும் ராட்சசி பிரியான்னு கிண்டல் பண்றாங்களே !''
              ''அய்யய்யோ ,அதுவும் எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சா ?''

  1. பொங்கலும் கசக்குமா ,வாழ்த்தால் :)
       1. தமிழர் நம் நெஞ்சம் பூரித்தது ...

  2. பொங்கல் tvசிறப்பு நிகழ்ச்சியில் வந்த 
  3. வட இந்திய  நடிகையின் 
  4. 'போங்கள் வால்தால்'


 3.                                           

34 comments:

 1. இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஜி
  ---------------------------------------------  தித்திக்கும் தைப்பொங்கல் திருநாள் தன்னில்
  ...........தீந்தமிழர் வாழ்வெல்லாம் சிறக்க வையம்
  எத்திக்கும் ஒளிகொண்டே ஏழ்மை என்னும்
  ..........இல்லாமை போக்கிடவே சமமாய் மாந்தர்
  சத்தியத்தில் வளர்ந்தொளிர வேண்டும் நல்ல
  .........சாதிசனம் ஒற்றுமையைச் சேர்க்க வேண்டும்
  பத்தியுடன் செய்கருமம் பலித்துத் தொன்மைப்
  ........பழந்தமிழாய் வாழ்வினிக்க வாழ்த்து கின்றேன் !

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தைபொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !

  ReplyDelete
  Replies
  1. உங்களின் கவிதை வாழ்த்துக்கு மிக்க நன்றி :)

   Delete
 2. 2016 தைப்பொங்கல் நாளில்
  கோடி நன்மைகள் தேடி வர
  என்றும் நல்லதையே செய்யும்
  தங்களுக்கும்
  தங்கள் குடும்பத்தினருக்கும்
  உங்கள் யாழ்பாவாணனின்
  இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. கோடி நன்மைகள் பெற என்று சொல்லி ,மறைமுகமா பல நூறாண்டுகள் வாழ வாழ்த்தியதற்கு நன்றி :)

   Delete
 3. திருமணமானாலும் நிறையப் பெண்கள் அப்பாவின் இனிஷியலைத்தான் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் தலைவரே..

  வடநாட்டு வாழ்த்து ரசிக்க வைத்தது.

  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. இராட்சசி என்று வந்தால் வேறு என்னதான் செய்வார்கள் :)

   நாம பொங்கல் வைக்கிற மாதிரி அவர்கள் பானி பூரி வைப்பார்களா :)

   வாழ்த்துக்கு நன்றி ஜி :)

   Delete
 4. இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள் ஜி ...

  ReplyDelete
  Replies
  1. இனிய தமிழரே ,வாழ்த்துக்கு நன்றி ஜி :)

   Delete
 5. சனியன் பிடிச்சிருச்சு...!

  அவள்தான் சுத்த சோம்பேறியாச்சே... உரல!

  மாட்டிக்கிட்டான்டி மைனர் காளை...! அவள் மாட்டுப்பெண் இல்லையே...!

  ஆரவள்ளி...சூரவள்ளி...! அபூர்வ ரா(ச)சி...பிரியா...!

  போங்கள்... நீங்க ரொம்ப மேஷம்...! பொங்கள் வாத்துகூட சொள்ளள...!

  த.ம.4  ReplyDelete
  Replies
  1. கருப்பு மட்டுமா விடாது ,இதுவும்தான் :)

   சோம்பேறியில் எப்படி 'சுத்த' சோம்பேறி இருக்க முடியும் :)

   மைனர் காளைக்கு மேஜர் காரியம் செய்யத் தெரியாது போலிருக்கே :)

   தெய்வானை வள்ளி என்றால் சந்தோசமா இருப்பாரா :)

   பொங்க வைப்பதில் மறந்து விட்டேன் ,இப்போ சொல்லி விட்டேனே :)

   Delete
 6. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. செண்பகப் பூவின் மணம் வீசும் ,உங்கள் வாழ்த்துக்கு நன்றி:)

   Delete
 7. அய்யோ பாவம், மாட்டை அடக்கிய சாம்பியன் பொண்டாட்டியை அடக்க முடியவில்லையோ......

  ReplyDelete
  Replies
  1. பெண்டாட்டியை அடக்கலாம் , ஆசையைத் தீர்க்க முடியலையாம் ,அதான் இந்த சோக நிலைமை :)

   Delete
 8. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் மற்றும் தங்களின் வலை உறவு நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!! நண்பரே.......

  ReplyDelete
  Replies
  1. உங்களின் டூ இன் ஒன் வாழ்த்துக்கு நன்றி :)

   Delete
 9. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் மற்றும் தங்களின் வலை உறவு நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!! நண்பரே.......

  ReplyDelete
  Replies
  1. நான்தான் தப்பாய் சொல்லிட்டேனா ...உங்களின் த்ரீ இன் ஒன் வாழ்த்துக்கு நன்றி :)

   Delete
 10. அய்யோ பாவம், மாட்டை அடக்கிய சாம்பியன் பொண்டாட்டியை அடக்க முடியவில்லையோ......

  ReplyDelete
  Replies
  1. மாட்டை அடக்கி என்ன புண்ணியம் :)

   Delete
 11. பகவான்ஜீக்கு பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  மாட்டை அடக்கிய வீரதீர சாம்பியனை நினைச்சு :)

  ReplyDelete
  Replies
  1. இந்த நல்ல நேரத்திலே அவரை ஏன் நினைக்கிறீங்க ?வாழ்த்துக்கு நன்றி , வேகநரியாரே:)

   Delete
 12. 01. நியாமான கேள்விதானே..
  02. காலம் மாறுச்சா ? மருமகள் மாறினாளா ?
  03. ஹாஹாஹா இண்டும் ஒண்ணா ?
  04. பெயரில் இவ்வளவு பிரட்டினையா ? நல்ல வேளை எனக்கு அழகான பெயர்
  05. உண்மையான வார்த்தை ஜி

  ReplyDelete
  Replies
  1. சனி ,இடம் மாறுவதால் என்ன பயன் :)
   மாமியார்கள் எப்பவும் இப்படித்தான் :)
   இவனால் ஒன்றைத்தான் அடக்க முடிந்தது :)
   பெயரிலேயே கொல்றீங்களே ஜி :)
   தமிழில் டைட்டில் வேறு ....உள்ளம் பூரிக்குது :)

   Delete
 13. கருத்து போடுவது கஷ்டமாக இருக்கின்றது ஜி ரோபோட் எல்லாம் வருகின்றது

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் அந்த கூகுள் ஆண்டவரின் திருவிளையாடல்தான் ,அதுவாவே சரியாக போய்விடும் :)

   Delete
 14. இனிய பொங்கல் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் தளத்தில் ,பழுத்த இலையில் நீங்கள் படையலிட்ட பொங்கலைப் பார்த்து மகிழ்ந்தேன் ,நன்றி :)

   Delete
 15. அன்பினும் இனிய நண்பரே
  தங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்
  இணையில்லாத இன்பத் திருநாளாம்
  "தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. இணையில்லா இன்பத் திருநாள் வாழ்த்துக்கு நன்றி:)

   Delete
 16. அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. இனிய பொங்கல் வாழ்த்துக்கு நன்றி :)

   Delete
 17. வணக்கம்
  ஜி

  இரசித்தேன் வாழ்த்துக்கள்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.த.ம8
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. இனிய பொங்கல் வாழ்த்துக்கு நன்றி :)

   Delete