17 January 2016

சீக்கிரம் கல்யாணமாக இதையும் நம்புவார்களா :)

    (அன்பார்ந்த வலை உறவுகளே ...கருத்துரை  எழுதும் போது ,ரோபோ வந்தாலும் ,வழக்கம் போலவே கருத்தை இடுங்கள் !)          

               ''இப்போதெல்லாம் மணத்தக்காளி கீரை  கிடைக்கவே இல்லையே ,ஏன் ?''

                ''எவனோ ஒருத்தன் 'மணத்'தக்காளிக் கீரையை தினமும்  சாப்பிட்டா ,திருமணம் தள்ளிப் போகாதுன்னு ஆருடம் சொல்லி இருக்கானாமே!''

வண்டிய திருப்ப சிக்னல் கொடுத்தது தப்பா :)          

                   ''பஸ்  விபத்து ஆனதுக்கு டிரைவர் ஆன ,நான்தான் காரணம்னு  எப்படிச் சொல்றீங்க ,பாட்டி  ?''

               ''வெளியே கையை நீட்டாதீர்கள் என்று எழுதிப் போட்டுட்டு ,நீங்களே கையை அடிக்கடி வெளியே நீட்டினதை நானும் கவனிச்சுக்கிட்டு தானே வந்தேன் !''

கணவன் மனைவியிடம் இப்படிச் சொன்னா என்னாகும் :)

            ''ஏனுங்க முதலாளி ,உங்களுக்கே இது நியாயமா ?மாட்டுப் பொங்கல் அன்னைக்கி போய் புது டிரஸ் கொடுக்கிறீங்களே ?''
              ''நீதானே மாடா  உழைக்கிறேன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருந்தே ?''
 1. வடிவேலுவின் 'அவனா நீ ' இவருக்கும் பொருந்தும் !
                 ''இப்போதெல்லாம் தலைவர் 'நீயும் நானும் ஓரினம் 'னு  சொல்றதே இல்லையே ,ஏன் ?''
               ''ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்னு  தீர்ப்பு வந்திருச்சே  !''


  1. சாதனையும் ,வேதனையும் அவரவர் கையில் !
  2. இது நடந்தது சில ஆண்டுகளுக்கு முன்....அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிவந்த 1 3 காளைகளை அடக்கிய காவலர் வினோத் ராஜ் மோட்டார் சைக்கிள் பரிசை வென்றார் ...மேன் ஆப்  தி ஜல்லிக்கட்டு ஆன அவர் ...மோட்டார் சைக்கிளில் இனி சீறிக்கொண்டு பறக்காமல் இருக்கவேண்டும் !இந்த காவலர் செய்தது சாதனை என்றால் ...இன்னொரு காவலர்  கார்த்திக்ராஜா  தேடிக்கொண்டது வேதனை ...அதிக அளவு தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் ...23வயதிலேயே குடிக்கு அடிமையான அவர் கடிதத்தில்  எழுதியிருப்பது ...எனது சாவுக்கு யாரும் காரணமில்லை .குடி உறவையும் ,உயிரையும் கெடுக்கும் .எனது முடிவு மற்றவர்களுக்கு பாடமாக இருக்கட்டும் !குடிமகன்கள் பாடம் படிப்பார்களா ?
 1. இதுவும் பெரியார் பிறந்த மண்ணில்தான் :)
 2. வத்தலக்குண்டு  அருகில் உள்ள இரண்டு கோவில்களில் நடைபெற்று இருக்கும் வினோத நேர்த்திக்கடன் விழாவைப் பற்றி அறியும்போது ...
  சிரிக்கத்தான் தோன்றுகிறது ...
  நேர்த்திக்கடனாக கொண்டுவந்த லட்சம் வாழைப்பழங்களை படைத்து பூஜை செய்தபின் ...
  கூட்டத்தை நோக்கி வானத்தில் சூறை
  இட்டார்களாம் ...
  அதை வாயால் கவ்வியும் ,கையால் பிடித்தும் பக்தர்கள் சாப்பிட்டார்களாம்...
  பழம் சாப்பிட்டவர்கள் புண்ணியம் செய்தவர்கள் ...
  அவர்களுக்கு சொர்க்கலோகத்தில்  நிச்சயம் இடம் கிடைக்குமென்று தோன்றுகிறது !
  இதைவிட கொடுமை ...
  இன்னொரு கோவிலில் ...
  நேர்த்திக்கடனாய் வந்தது ...
  3 அடி முதல் 1 9 அடி நீளமுள்ள அரிவாள்களாம்...
  அதுவும் ஒன்றல்ல ,இரண்டல்ல ஐந்நூறாம்...
  நல்ல வேளை ,இதை அவர்கள் சூறை விடவில்லை ...
  இந்த அரிவாள்கள் எல்லாம் பூப்பறிக்க மட்டுமே பயன்படும் என்றே நம்பத் தோன்றுகிறது !
  ஹும் ...இந்தியா செவ்வாய்க்கு ராக்கெட் விடுகிறதாம் !

31 comments:

 1. மணத்தக்காளிக்கு இப்படியும் ஒரு மகத்துவமா?

  ReplyDelete
  Replies
  1. நம்மாளு பெயர் வந்த காரணமென்று எதைச் சொன்னாலும் நம்புவானே :)

   Delete
 2. ஜோக்ஸை ரசித்து, தகவல்களைப் படித்து அறிந்து தமிழ்மண வாக்கிட்டு...

  இன்றைக்கு விடைபெறுகிறேன்! நாளை சிந்திப்போம்! (இன்ஷா அல்லா)

  ReplyDelete
  Replies
  1. ரோபோலாம் வரலங்க....நாளை சிந்திப்போம் இல்லை, சந்திப்போம்!

   Delete
  2. ரோசக்கார ரோபோ போலிருக்கு,அழையாதார் வீட்டுக்கு வந்ததே தப்புன்னு போயிண்டே:)

   அதென்ன திடீர்னு இன்ஷா அல்லா?நாம் சந்திப்புக்கு கூகுள் ஆண்டவரின் தயவு போதுமே :)

   Delete
 3. திருமணம் ஆனவங்க மணத்தக்காளிக் கீரையே இல்லாம பண்றதாச் சொல்லிக்கிறாங்க...!

  எதிர்த்து வண்டி வருது... நின்னு பொறுமையா வாங்கன்னு கையை கீழே ஆட்டறதுக்குப் பதிலா... வண்டிய போகச்சொல்லி கைய மேல ஆட்டினா... மேல போகாம...?! எப்படியோ ஒரு கை பாத்திட்டாய்...!

  நீங்க மண்ணுங்க முதலாளி ...! பச்ச மண்ணுங்க... அதுவும் களிமண்ணுங்க...!

  ரெண்டுபேத்தையும் அமெரிக்காவில செட்டில் ஆகச் சொல்ல வேண்டியதுதான்...!

  ‘குடிமகனே... பெருங்குடிமகனே... நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு...’

  என்று காவலர் கதையை எப்படியாவது முடிப்பதிலேயே கவர்மெண்ட் கவனமா இருக்குதோ...?! அரசு அன்றே கொல்லும்...!

  ‘இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி... எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே... அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே...’ சொர்க்கம் லோகத்தில்தான் இருக்கு...!

  த.ம.2
  ReplyDelete
  Replies
  1. இரண்டாம் கல்யாணம் ஆயிடுமோன்னு பயமா :)

   நல்ல வேளையாக,கிழவியை மேலோக்கம் அனுப்பாமல் விட்டாரே :)

   பச்சை நிற களிமண்ணு இருக்கா :)

   செத்தாலும் அரசைக் குறைச் சொல்லலே ,தன்மானச் சிங்கம் :)

   குரங்கு மாதிரி பழத்தைப் கையால் தொடாமல் சாப்பிட்டால் சுவர்க்கம் இங்கேதான் :)


   அங்கே போய் அரசியல் பண்ண முடியாதே :)

   Delete
 4. Replies
  1. வாழைப் பழச் சூறை ,ரசிக்க முடியுதா :)

   Delete
 5. இப்படி தேவை தானா சொர்க்கம்...?

  ReplyDelete
  Replies
  1. எதை எதை பக்தியாக நினைப்பார்களோ ,தெரியவில்லை :)

   Delete
 6. முதலில் சிரிக்க வைத்தீர்கள். அடுத்து சிந்திக்க வைத்திருக்கிறீர்கள்.
  த ம 6

  ReplyDelete
  Replies
  1. சிந்திக்காமல் வந்தால் சிரிப்பு ,சிந்திக்க வைத்தால் அது சிரிப்புக்குரிய விஷயமில்லைன்னு தோணுதே :)

   Delete
 7. சிரித்து ரசித்தேன்.
  செவ்வாய்க்கு ராக்கெட் விட்டாலும் செவ்வாய்க் கிழமை விடமாட்டோம் நாள் பாப்போம் இல்ல

  ReplyDelete
  Replies
  1. செவ்வாய் தோஷம் கழிய செவ்வாய் கிரகத்துக்குப் போனாலும் நாம திருந்தவே மாட்டோம் :)

   Delete
 8. மனத்தக்காளி அல்சரை போக்கும் மகா மருத்துவம் ஆச்சே.... அதுக்கா வந்த சோதனை.....

  ReplyDelete
  Replies
  1. அவனவனுக்கு வலி வந்தால்தானே அதோட பலன் தெரியும் :)

   Delete
 9. இரண்டாவது அயிட்டத்தை வாயில் கவ்வ சொல்லணும் ஜி
  உடனே பரலோக ப்ராப்தி கிடைக்குமே
  தம +
  நிகில் குறித்து சில செய்திகள்

  ReplyDelete
  Replies
  1. அதானே ,நல்ல ஐடியாவா இருக்கே :)

   நிகிலை ,சிறிய வயதில் இருந்தே அறிந்தவன் என்பதால் மிகவும் வேதனைப் பட்டேன் !
   நிகில் பவுண்டேசன் மூலமாய் நல்லதோர் சேவையைத் தொடர்ந்து வரும் நண்பர் .சோம .நாகலிங்கம் ,திருமதி .மலர்க்கொடி நாகலிங்கம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் !

   Delete
 10. பாட்டியின் கவனிப்பு ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. பாட்டிக்கு கண்ணு ரொம்ப கூர்மைதான் :)

   Delete
 11. 01. ஆஹா இவ்வளவு நாளா இது தெரியாமல் இருந்திட்டேனே...
  02. நியாயமான வார்த்தை
  03. இனிமேல் சொல்லவே மாட்டான்
  04. இதை அங்கேயா ? கொண்டு போறதூ....
  05. கடிதத்திலாவது நல்லது செய்தவருக்கு அஞ்சலி செய்வோம்.
  06. அடடே பூவைப் பறிக்கக் அரிவாள் எதற்கு ?

  ReplyDelete
  Replies
  1. முதல் கல்யாணத்துக்கு மட்டும்தான் இது பலன் அளிக்குமென்று கேள்வி :)

   ஓட்டுனரே என்றாலும் தப்பு தப்புதானே :)

   நல்ல வேளை.புண்ணாக்கு கொடுக்காம போனாரே :)

   நல்ல தலைவர்தான் :)

   அஞ்சாமல் இன்னும் குடிப்போர் விழித்துக் கொள்வார்களா:)

   உங்களோட லட்சியத் தலைப்புக்கு வந்து விட்டேனா :)

   Delete
 12. அனைத்தும் ரசித்தோம் ஜி!

  ReplyDelete
  Replies
  1. பாட்டியின் சொல்லைத் தட்டாமல் ரசிக்க முடியுதா :)

   Delete
 13. அட! மணத்தக்காளிக்கு அடிச்சிருச்சு யோகம்னு சொல்லுங்க! சிறப்பான நகைச்சுவை பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. சமீப காலமா ,நிலவேம்புக்கு அடித்த யோகம் மாதிரியா :)

   Delete
 14. குடிமகன்கள் பாடம் படிக்கத்தானே வேண்டும்!
  காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. காலம் ஒருநாள் மாறும் ,கவலைகள் யாவும் தீருமா :)

   Delete
 15. கீரைக்கு வந்த ரோதனை.சிரிப்புதான் ஜீ!

  ReplyDelete
  Replies
  1. அதை ,தனி மரம் நீங்க சொல்றதே சரி :)

   Delete