18 January 2016

சொல்லித் தெரிவதில்லை ,இதுவும் :)

அது முடியும் ,இது முடியுமா :) 
                 ''இன்னைக்கு ,கராத்தே கிளாஸ்லே  வெறும் கையினால் செங்கல்லை  ஒரே போடா போட்டு  , உடைக்கக் கத்துட்டேன் ,அப்பா !" 
              ''நல்லதா போச்சு ,இன்னைக்கு உங்கம்மா செய்திருக்கிற மைசூர் பாக்கை  உடைச்சுக் கொடு !''
                                                      Image result for மைசூர் பாக் கேக்


இன்னொரு பெண்டாட்டியை  தேடிக்குவாரோ  :)

                 ''இன்ஸ்பெக்டர் சார் ,100 பவுன் நகையோட என் பெண்டாட்டி காணாமப் போயிட்டா !''
                 ''சரி நான் என்ன செய்யணும் ?''
                 ''எப்படியாவது நகையை மட்டும் கண்டுபிடிச்சு கொடுங்க போதும் !''
நடிகைன்னாலே டைவர்ஸ்தானா :)

            ''உங்க பொண்ணுக்குத்தான் சினிமா சான்ஸ் இல்லாமே போச்சே ,கல்யாணமும் ஏன் தள்ளிப் போய்கிட்டே இருக்கு ?''
            ''வர்ற வரன் எல்லாமே ஆறு மாசமாவது கியாரண்டி தர முடியுமான்னு கேட்கிறாங்களே !''
 1. பிணவறை என்ன மணவறையா ,சந்தோசப்பட :)
            ''டாக்டர் ,ஆஸ்பத்திரி காம்பௌண்ட் உள்ளேயே வாக்கிங் போகச் சொன்னீங்க சரி ,பின் பக்கம் மார்ச்சுவரி  இருக்குன்னு சொல்ல வேண்டாமா ...பயந்தே போனேன் !''
            ''பயப்படாதீங்க ,உங்களுக்கு ஆப்பரேசன் முடிஞ்சதும் சரியாப் போகும் !''


சொல்லித் தெரிவதில்லை ...?
                             ''குடும்பப் பாங்கான வேடங்களில் மட்டுமே நடிப்பேன்னு சொன்ன ,அந்த நடிகை .இப்போ 'கிளாமர் 'லே கலக்குறாங்களே .எப்படி ?''
                       ''சான்ஸ்  கிடைக்காம  இருந்தப்போ  சினிமா 'கிராமர் 'படிச்சாங்களாமே !''

IPL கிரிக்கெட்டில் மட்டுமா சூதாட்டம் :)
சென்ற ஆண்டு ,ஆந்திராவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த ...
தடை செய்யப்பட்ட சேவல் பந்தயத்தில் ...
MLAக்கள் ,தொழில் அதிபர்கள் ,சினிமா பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து இருக்கிறார்கள் ...
அவர்களுக்கு எல்லாம் போலீஸ் பாதுகாப்பும் வழங்கப் பட்டுள்ளது ...
15ஏக்கர் பரப்பளவு பகுதியில் பிரமாண்டமாக நடைபெற்ற சேவல் பந்தயங்களில் ...
5 ௦ ௦ கோடி வரை பந்தயம் கட்டி சூதாட்டம் நடைப் பெற்று உள்ளதாம் ...
அங்கே பணம் விளையாடுகிறது என்றால் ...
இங்கே ,கரூர் அருகே நடந்த சேவல் 
சண்டையால்...
வேடிக்கை பார்க்க வந்த ஒருவரும் ,சேவல் ஜாக்கியாக களம் இறங்கியவரும் பலியாகி உள்ளனர் ...
பலியாக காரணம் ,சண்டையிடும் சேவலின் காலில் கட்டப் படும் கத்தியில் தடவப்படும் விஷம் தானாம்...
பாரம்பரிய விளையாட்டுக்கள் என்ற பெயரில் இப்போது வியாபாரம் கொடிகட்டி பறக்க ஆரம்பித்து உள்ளது வேதனைக்குரியதாகும் ! 

22 comments:

 1. ரசித்தேன்.

  விளையாட்டு வினையாவது என இதை சொல்வார்கள்!

  ReplyDelete
  Replies
  1. உங்க பெயரைப் பார்த்தாலே ,உங்க பனிமயமான வீடுதான் கண்ணில் தெரிகிறது :)

   சொன்னவர்கள் தீர்க்கதரிசிகளாச்சே:)

   Delete
 2. மகனின் படிப்பால் இப்படி ஒரு உபயோகம்!

  அடப்பாவி!

  ஆறு மாசம் போதுமாமா??

  அடப்பாவி!!

  கிராமரும் கிளாமரும்!

  ReplyDelete
  Replies
  1. இவருமே முன்னமே கராத்தே கற்றிருக்கலாம் :)

   ரொம்பத்தான் பாசம், நகைமீது :)

   மினிமம் கியாரண்டி போதாதா :)

   இந்த பாவி டாக்டர்தானே :)

   கிராமருக்கு உதவினது ,எந்த கைடோ:)

   Delete
 3. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. நான்தான் தெரியாமல் நீக்கி விட்டேன் ,அதான் ,அடுத்த வரியில் சரி செய்துள்ளேன் ,மன்னியுங்கள் ஜி :)

   Delete
 4. manavai jamesMon Jan 18, 06:44:00 am

  வெறும் கை இங்கே... அந்த சுத்தியல அங்கேயே விட்டுவிட்டு வந்திட்டேனே...! வெறும் கை முழம் போடுமா...?

  ஏய்யா வயித்தெறிச்சல தூண்டுறாய்...! எ பொண்டாட்டி 200 பவுனோட எவனோடவோ ஓடிப்போயிட்டா...!

  ஆறு மாசமுன்னு நடிகை கியாரண்டி தர வேண்டியதுதானே...!

  பயப்படாதிங்க... எல்லாம் போக வேண்டியதானே...! என்ன கொஞ்சம் முன்ன பின்னே...!

  புரியாதத புரிஞ்சிக்கிட்டாங்க...! சீக்கிரம் பெரிய மனுசியா ஆயிடுவாங்க...!

  சேவல் கொடியோன்...! கருப்புக் கொடி ஏத்த வேண்டியதுதான்...!

  த.ம.3

  ReplyDelete
  Replies
  1. வெறும் கை என்பது மூடத்தனம் ,பத்து விரல்கள் என்பது மூலதனம் ..என்பது நினைவுக்கு வருதே :)

   200 கூட தொலையுது ,எவன் கூடவோ என்பதுதான் உதைக்குது :)

   ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்தானே :)

   இருந்தாலும் பேய் பயம் விட மாட்டேங்குதே :)

   இருட்டில்தான் ,ஒளிமயமான எதிர்காலம் பிறக்குமா :)

   அந்த கருப்பு கொடியோன் பாவமில்லையா :)   Delete
 5. ஹஹ்ஹ மைசூர்பாகு உடைக்க கராத்தே!!! சரிதான்..

  ஹும் என்னத்த சொல்ல...

  ஹஹஹ் கிளாமர்...சினிமா க்ராமர்...

  ReplyDelete
  Replies
  1. அவரோட யோகம் செய்து தர மனைவியும் ,உடைத்துத் தர பையனும் இருக்காங்களே :)

   கிளாமர் ,கிராமர் பொருத்தம் தானே :)

   Delete
 6. Replies
  1. மைசூர் பாக் சுவையாய் இருந்ததா :)

   Delete
 7. Replies
  1. மைசூர் பாக் செய்ய ,உங்களுக்கு சொல்லித் தரவே வேண்டியதில்லை ,நீங்கதான் சமையல் ராணியாச்சே :)

   Delete
 8. அட்டகாசமான ஜோக்ஸ்! பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. சேவல் சண்டை அட்டகாசம் என்றாலும் கூடாதுதானே :)

   Delete
 9. குப்புற விழுந்தாரும் மீசையிலே மண் ஒட்டவேயில்லை என்பது மாதிரி இருக்கிறது... சொல்லி தெரிவதில்லை இதுவும்....

  ReplyDelete
  Replies
  1. நரம்பு இல்லாத நாக்குதானே ,எப்படியும் பேசும் :)

   Delete
 10. 01. ரெண்டும் ஒண்ணா ?
  02. இவனுக்கு வேண்டியது மட்டும் சொல்லி இருக்கான்.
  03. பிரிண்டிங் ப்ரெஸ்ஸுல அடிச்சு கொடுக்க வேண்டியதுதானே...
  04. ஒத்திகையா ?
  05. அனுபவப்படிப்பு
  06. பாரம்பரியம் செத்து விட்டது கேவலமான விசயம்தான் ஜி

  ReplyDelete
  Replies
  1. கடினத் தன்மையில் அப்படித்தான் இருக்காம் :)
   இவனோட ஆசை நிறைவேறுமா:)
   ஆறுமாச அருமை புருஷன் என்றா :)
   செத்து செத்து விளையாடுகிறாரோ:)
   இது போல வருமா :)
   பைசாவுக்கு முன்னால் பாரம்பரியமாவது ,ஒண்ணாவது :)

   Delete
 11. மைசூர்பாக்குச் சுவையாக இருந்தது.

  தொடர்கிறேன்.

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. இன்னும் ரொம்ப நாளைக்கு சுவையாய் இருக்கும் :)

   Delete