20 January 2016

காதல் என்பது இரு கை ஓசை :)

 மதிப்பெண்ணும்   'முட்டை' தான் எடுப்பானா  :)

             ''கோழி முட்டையிட்டு அடை காத்து குஞ்சு பொறிக்கும்னு சொன்னா, என் பையன் நம்ப மாட்டேங்கிறான்டி  !''
         ''எப்படி நம்புவான் ?நாமதான் முட்டையை  வடைச் சட்டியில் பொறித்து சாப்பிடக் கொடுத்து  விடுகிறோமே !''

 மேனேஜர்  மேஜர் ஆகாதவரோ :)

        ''உங்க மேனேஜருக்கு நக்கல் ஜாஸ்தியா ,ஏன் ?''
        ''தலைக்கு மேலே வேலை இருக்குன்னு  ஒருநாள் லீவு கேட்டா ...ஹேர் கட் பண்ணிக்க பெர்மிசன் போதுமேங்கிறாரே !''

காதல் என்பது இரு கை ஓசை :)

                ''நீ காதலிக்கிற பொண்ணோட  விருப்பத்தை தெரிஞ்சுக்க ...ஒரு கையிலே ஓசை வராதுன்னு  சொல்லிப் பார்த்தீயா,என்னாச்சு ?''
           ''ஏன் வராதுன்னு  'பளார் 'ன்னு  கன்னத்திலே அறைஞ்சிட்டாளே !''

ஆஸ்திரேலியா ஜனத் தொகையை விட இவர்கள் அதிகம் :)                

              ''லஞ்சம் வாங்கிறவனை எல்லாம் பிடித்துக் கொண்டு போய் ஒரு தீவிலே விடணும்!''

                    ''அவ்வளவு பெரிய தீவுக்கு எங்கே போறது ?''

 • அழகு பிறக்கிறது , அழகு அற்றதில் இருந்து :)

 • பட்டாம் பூச்சியைப் பார்க்கையில் அதிசயமாய் இருக்கிறது ...

 • கூட்டுப் புழுவாய் அடைப்பட்டுக் கிடந்தது  இதுதானா ?
  pupa125.jpgஇதிலிருந்து  வந்ததா 

   Monarch (Danaus plexippus)இது?

  20 comments:

  1. Replies
   1. எந்த தீவிலே அவர்களை விடுவது என்று சொல்லுங்க ஜி :)

    Delete
  2. Replies
   1. பட்டாம் பூச்சியின் அழகைத்தானே :)

    Delete
  3. அப்ப பையன் கூமுட்டை இல்லேன்னு சொல்லு...!

   என்னதான் இருந்தாலும் மேனேஜர் இப்படிச் சொல்லி இருக்கக்கூடாது... ஒங்க தலைக்கு மேல முடி இல்லங்கிறத பாத்திருக்கனும்... அவருக்கு என்ன தலை போற வேலையோ...?

   அடிக்கிற கைதான் அணைக்கும்...! எதற்கும் ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான்...!

   லஞ்சம் வாங்கிறவனை எல்லாம் பிடித்துக் கொண்டு போய் தீயிலே விடணும்! சரிதானே...!

   சேற்றில்தானே செந்தாமரை பிறக்குது...!
   ‘பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட
   பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு...’

   த.ம.2

   ReplyDelete
   Replies
   1. இவ்வளவு விவரமான பையனை அப்படி சொல்லப் படாது :)

    உள்ளேயும் ஒன்னும் இல்லைன்னு நக்கல் வேண்டுமானால் பண்ணுவார் :)

    எப்படி ,அடிக்கிற கையை அணைத்தா:)

    அது சரி ,ஒழியட்டும் :)

    இப்படித்தான் சொல்றீங்க ,செந்தாமரையைப் பார்க்கவே முடியலே :)

    Delete
  4. ரசித்தேன் நண்பரே!
   த ம 3

   ReplyDelete
   Replies
   1. இயற்கையின் வினோதத்தைதானே :)

    Delete
  5. தலைக்கு மேல் வேலை! :))

   ரசித்தேன்.

   ReplyDelete
   Replies
   1. தலைக்கு மேல் வேலை,நம் எல்லோருக்கும் இருக்கத்தானே செய்கிறது :)

    Delete
  6. 01 ஆஹா இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசயமாக இருக்கே....
   02. வெவரமானவருதான் மேனேஜர்
   03. கடலில்தான் போடணும்.
   04. மனிதனும் இப்படித்தானே....

   ReplyDelete
   Replies
   1. என்னடி பாப்பா,முட்டையில் இருந்து குஞ்சு வந்தது என்று சொன்னது தப்பான்னு சந்திர பாபு ஸ்டைலில் பாடத் தோணுதே :)

    இல்லையென்றால் இவரையெல்லாம் வைத்துக் கொண்டு மாரடிக்க முடியுமா :)

    கொடுமைத் தாங்காமல் சுனாமியாய் மாறி தாக்கக் கூடும் :)

    அழகான பொண்ணுங்க சிலபேர் ,அம்மாகளைப் பார்த்தாலும் அப்படித்தான் இருக்கு :)

    Delete
  7. ரசித்தேன் அனைத்தையும்.

   ReplyDelete
   Replies
   1. அந்த பொண்ணு பளார்ன்னு அறைஞ்ச சத்தமும் உங்களுக்கு கேட்டிருக்குமே:)

    Delete
  8. சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! நன்றி!

   ReplyDelete
   Replies
   1. அப்படின்னா,என் நோக்கம் நிறைவேறிடுச்சு :)

    Delete
  9. கன்னத்தில் பளார் வாங்கியதால காதல் சக்சஸ் என்று சொல்ல..லாமா????

   ReplyDelete
   Replies
   1. அடிக்கிற கைதான் அணைக்கும் என்பது காதலுக்கு பொருந்துமா :)

    Delete