21 January 2016

'உண்டானதால் ' புருஷன் மேல் உண்டான பிரியம் :)

  இதைப் படித்ததும் 'அவர் 'நினைவுக்கு வந்திருக்கணுமே:)            

               "திருட்டுப் பூஜாரின்னு  அவரை ஏன் அடிக்கிறீங்க ?''

               ''அம்மன் தரிசனம் செய்ய வந்த அம்மணிகளை தரிசனம் பண்ணிக் கொண்டு இருந்தாராமே !''

அப்பாவி கணவன்மார்களுக்கு இது ,சமர்ப்பணம் :)

               ''மேஜிக் நிபுணரைக் கட்டிகிட்டது வம்பாப்  போச்சா ,ஏண்டி ?''
              ''பூரிக் கட்டையை  அவர் மேல் எறிந்தால் ,அது பூமராங் மாதிரி திரும்ப வந்து என்னை அடிக்குதே !''

'உண்டானதால் ' புருஷன் மேல் உண்டான பிரியம்  :)

                ''எலியும் பூனையுமா இருந்தே ,இப்போ உண்டானபிறகு உன் போலீஸ் புருஷனை விழுந்து விழுந்து கவனிச்சுக்கிறீயே,ஏண்டி ?''
            '' வயித்திலே  இவ்வளவு  வெயிட்டை  சுமக்கிறது ,எவ்வளவு கஷ்டம்னு இப்போதானே எனக்கு தெரியுது !''

   1. 2013 ...இதே நாளில் ,ஜோக்காளியில் ....

  1. (JOKKAALI BLOG ன்) நிறத்திற்கு மனதை மாற்றும் சக்தி உண்டு !

            தினமலர் பேப்பர் படித்துக் கொண்டிருந்த ஜோக்காளி ,ஜல்லிக்கட்டு காளையை அடக்கி விட்டவரைப் போல் துள்ளிக் குதித்தார் .
   ''சௌதாமினி  ,சௌதாமினி  ,சீக்கிரம் இங்கே வாயேன் ''என்று தன் சகதர்ம பத்தினியை அழைத்தார் .
   ''என்னாச்சு உங்களுக்கு ?காவிரியில் தண்ணி வந்த மாதிரி உற்சாகம் கரை புரண்டு ஓடுது !''
   ''நீ சந்தோசமா இருக்கியா ,சொல்லு ?''
   ''நீங்க  தாலியைக் கட்டுன நாள்லே இருந்து அது எங்கே இருக்கு ?''
   ''இப்படி புலம்பிக் கிட்டே  திருமண வெள்ளி   விழா வையும்  கொண்டாடியாச்சு !அது கிடக்கட்டும் ,  உன்னை அறியாமலே நீ சந்தோசமா இருக்க ஒரு வழி இருக்கு  !''
   ''அது நான் எங்க அம்மா வீ ட்டுக்கு போற வழியாதான் இருக்கும் !''   
   ''அதுமட்டுமில்லை !ஈசியான இன்னொரு வழி   ,ஜோக்காளி ப்ளாக்கை நீ படிக்க கூட வேணாம் ,பார்த்துக் கிட்டு இருந்தாலே போதும் ,ஆட்டோமேடிக்ககா  உன் மனசிலே இனம் புரியாத சந்தோசம் உண்டாகும் !''
   ''நீங்க  ப்ளாக்கை ஆரம்பித்தப் பிறகு ,  கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிறவங்க எண்ணிக்கை கூடிஇருக்குதுன்னு 'லயோலா ' புள்ளி விபரம் சொல்லுதே !''
   ''சென்னையில் மட்டுமா ப்ளாக் தெரியுது ?ஆப்ரிக்கா பக்கம் சர்வதேச எல்லையில் ,சாட்டிலைட் ரீசிவர் மூலமா  கப்பலில் இருந்தும் பார்த்து ரசிக்கிறாங்கன்னு தெரியாதா உனக்கு?''
   ''அவங்க  கீழ்ப்பாக்கம் பக்கம் வரலேன்னு சொல்ல  வர்றிங்களா ?''
   ''ஆமா !''என்றார் ஜோக்காளி 'செவ்வாயில் 'தண்ணீர் கண்டுப் பிடித்த மாதிரி !
   ''எதுக்கும் ப்ளாக் விவூவர் மேப்பை  செக் பண்ணுங்க ,அப்பாவி மனுஷன் எவனாவது கடல்லே விழுந்து தற்கொலை பண்ணிக்கிட்டிருக்கப் போறான் !''
   ''ப்ளாக் எழுதுற நானே ,பவர் ஸ்டார்  ரேஞ்சுக்கு பல்லைக் காட்டிக் கிட்டு சந்தோசமா இருக்கேன் ,என் விவூவர்சைப்  பற்றி நீ ஒண்ணும் கவலைப் படாதே ,நல்லா  இருப்பாங்க !அது சரி ,உன்னோட  தைராய்ட் பிரச்சினை ரெகுலேட்  ஆகணுமா ?என் ப்ளாக்கைப் பாரு !''
   ''ஆசையா வாங்கின வைர நெக்லசை போட்டுக்க முடியலே ,கழுத்தை சுற்றி  இருக்கிற  ஃமப்பிலரை கழட்ட உதவும்னா ப்ளாக்கைப்  பார்க்கிறேன்  ,அப்படி என்ன அதிசயம் ப்ளாக்கிலே ?''
   ''சொல்றேன் ,அதுக்கு முன்னாலே இன்னொரு கேள்வி ,அடிக்கடி வரும்  தசை பிடிப்பு  ,சரியாப் போயிடுச்சா?''
   ''அப்படியேதான் இருக்கு ,அதுக்கும் உங்க ப்ளாக்கைப் பார்த்தா சரியாயுடுமா ?''
   ''கரெக்ட் !இன்னொரு முக்கிய விஷயம் ,ஜோக்காளி ப்ளாக்கை  ஆண்களை விட பெண்கள் பார்த்தா பலன் அதிகம் !''
   ''உங்க ஜொள்ளுப் புத்தியை  காட்டிட்டீங்களே!''
   ''சௌதாமினி ,தப்பா எடைப்  போடாதே !பெண்களுக்கு பீரியட்ஸ் தொந்தரவு கூட வராதுன்னு சொல்ல வந்தேன் !''
   ''ஜோக்காளி ப்ளாக்கிலே  இப்படி  அதிசய சக்தி இருக்கா ?''
   ''ப்ளாக்குக்கு இல்லே ,ப்ளாக்கில் அதிகமா இருக்கிற ஆரஞ்சு நிறத்திற்கு சக்தி இருக்குதாம் !இதை நான் சொல்லலே ,சென்னை அண்ணா இயன் முறை மருத்துவமனை விரியுரையாளர் திருமதி தீபா மேடம் தான் சொல்லி இருக்காங்க !''
   ''உங்களைத் தவிர யார் சொன்னாலும் சரியாத் தான் இருக்கும் !

      நன்றி ..தினமலர்  16.01.13
28 comments:

 1. தினமலர் 16.01.13 பதிவு
  சிறப்பான பகிர்வு

  யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01 (மின்நூல்)
  http://www.ypvnpubs.com/2016/01/01.html

  ReplyDelete
  Replies
  1. பென்டாஸ்டிக் நிறத்தை பண்டார நிறம் என்று சொல்வதுதான் எனக்கு பிடிக்கலே :)

   Delete
 2. ஷில்பாவம்!

  அனைத்தையும் ரசித்தேன்.

  முதலிடத்துக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. கொடுத்து வைத்த பூசாரியோ :)

   முதலிடம் வந்த விஷயமே,இப்போதுதான் அறிந்து கொண்டேன் ,காலையில் வலைப்பக்கம் வர முடியவில்லை ,வாழ்த்துக்கு நன்றி :)

   Delete
 3. கோயில் கொடியவரின் கூடாரமாக மாறிவிட்டதே...! அம்மன் தரிசனத்துக்கு போன அம்பாளைத் தரிசித்த திருட்டுப்பூசாரி... சாரி...!

  அப்ப சீக்கிரமே நீங்களும் மேஜிக் நிபுணரா ஆயிடுவீங்கங்க...!

  ஒன்னோட பாடு பரவாயில்ல... பத்து மாசத்தில இறக்கி வச்சிடுவாய்...!

  ஆரஞ்சு நிறத்தோடு... அருமையான சிரிப்போடு... அஞ்சா நெஞ்சோடு... ‘அஞ்சாத சிங்கம் என் காளை... பஞ்சா பறக்கவிடும் ஆளை...’ன்னு தங்கள் தளம் இன்று போல் என்றும் வாழ்க...! வாழ்த்துகள்...!

  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. இது அம்மனுக்கே அடுக்குமா :)

   மனைவியும் மேஜிக் நிபுணி ஆகிவிட்டால்,எப்படி சமாளிப்பது :)

   ஆயுள் பந்தம் இதுவும்தானா :)

   உங்களின் வாழ்த்து பலித்து விட்டது ,மீண்டும் த ம முதல்வன் ஆகிவிட்டேனே ,நன்றி :)

   Delete
 4. Replies
  1. ஆரஞ்சு நிறம் சுகம்தானே :)

   Delete
 5. Replies
  1. அந்த தொப்பை வயிறைத்தானே :)

   Delete
 6. ரசித்தேன் ஐயா....முதலிடம் தொடரட்டும்....தம +1

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஆதரவு இருக்க எனக்கென்ன கவலை :)நன்றி !

   Delete
 7. முதலிடத்திற்கு வாழ்த்துகள்!!!! தொடரட்டும் தங்கள் இடம்... எல்லாம் ரசித்தோம் அந்த இறுதி 2013 ரசித்தோம்...சூப்பர் அது சரி நாங்க இந்த ஆரஞ்சு நிறத்தை வேற மாதிரி??!!!! இல்ல நினைச்சோம்..ஹிஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. என் தொடர் முயற்சிக்கு நீங்கள் தந்த ஆதரவால் இது சாத்தியமானது,நன்றி :)
   ஆரஞ்சு நிறத்தையா ,நல்ல ஆராய்ந்து பார்த்து சொல்லுங்க ஜி :)

   Delete
 8. அனைத்தையும் ரசித்தேன். தமிழ்மணத்தில் முதலிடம் கிடைத்ததற்கு வாழ்த்துகள்! நண்பரே!
  த ம 6

  ReplyDelete
  Replies
  1. நான் முதலில் ஜோக்காளியின் 602 வது நாளில் த ம முதலிடதுக்கு வந்தேன் ,இது செகண்ட் இன்னிங்க்ஸ்!
   குறுகிய காலத்தில் ஏழாவது இடத்துக்கு வந்திருக்கும் நீங்கள்தான் அடுத்த த ம முதல்வன் ஆவீர்கள் என்று நம்புகிறேன் :)நன்றி !

   Delete
 9. பூமராங் ஆக மாறும் பூரிக்கட்டை... ஹாஹா......

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. கணவன்மார்கள் அவசியம் ,இந்த மேஜிக் கற்றுக் கொண்டால் நல்லது ,இல்லையா ஜி :)

   Delete
 10. 01. ஹாஹாஹா ஸூப்பர் ஜி இந்த புகைப்படத்தை நான் ஏற்கனவே 2010-ல் ஒரு பதிவில் கொடுத்துள்ளேன்
  02. சில பெண்களுக்கு உதவும் விடயமே..
  03. அனுபவம் பேசுது
  04. ஹாஹா ஸூப்பர், டாக்டர் ஜி

  நள்ளிரவில் மட்டுமே முதல்வராக இருந்த தாங்கள் இனி தொடர்ந்து இருக்க வாழ்த்துகள் ஜி

  ReplyDelete
  Replies
  1. அந்தப் பதிவைத் தேடித் படிக்கிறேன் ஜி :)

   பெரும்பாலான ஆண்களுக்கு உதவும் :)

   அவ்வ்வ்வ்,எனக்கா ,தொப்பையா :)

   சாதா டாக்டரில்லே,கலர்புல் டாக்டர் :)

   சரியாக ஐந்தாம் தேதி நடந்த கூத்து,அந்த கூத்து இன்று நிஜமாகி விட்டது !

   ஐந்தாம் இடத்துக்கு வந்து விட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஜி :)

   Delete
 11. வாழ்த்துக்கள்! அருமையான ஜோக்ஸ்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. உங்களின் மகிழ்ச்சியில் இந்த அதிகாலை நேரத்தில் பங்கு கொள்கிறேன் ,நன்றி சுரேஷ் ஜி :)

   Delete
 12. வாழ்த்துக்கள் நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. இந்த இடத்துக்கு வர நானும் கரகாட்டம் ஆடாத குறைதான் :)

   Delete
 13. நகைப்பணி தொடரட்டும்
  தம +

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் தொடர்ந்து தரும் ஊக்கத்துக்கு உற்சாகத்துடன் தொடர்கிறேன் மது ஜி :)

   Delete
 14. அப்புறம் புள்ள பொறந்த பிறவு.... அதை சனியனே...ன்னு திட்டுவது நடக்குமில்ல.....

  ReplyDelete
  Replies
  1. சின்னச் சனியனேன்னு என்று வேண்டுமானால் திட்டலாம் :)

   Delete