23 January 2016

புருஷன் குணம் அறிந்த புண்ணியவதி :)

புதுசா எந்த மாற்றமும் செய்யலே ,ஆனால் ....:)                                     

                  ''அந்த கரும்பு ஆலையில் ,சீனி  உற்பத்தி இந்த வருஷம் இரண்டு மடங்காமே ,என்ன காரணம் ?''

                       ''புதுசா பொறுப்பேற்ற சின்ன முதலாளியின் பிழிதிறன் தான் !''


செத்தவன் வாயில் தீர்த்தம் பட்டால் சொர்க்கம் :)

                 ''அந்த டாக்டரோட திறமை  ,பக்கத்து  பெட்டிக்கடைக் காரருக்கும் தெரிஞ்சுருக்கா ,எப்படி ?''  

                '' கோவில் வாசலில்  இருந்த கடையை , இந்த கிளினிக் பக்கத்தில் மாற்றியதும்   காசித் தீர்த்த சொம்பு  நல்லா விற்பனை ஆகிறதாம்  !''                     


புருஷன் குணம் அறிந்த புண்ணியவதி :)
                 ''அம்மா , பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் காலமாயிட்டார்னு  அப்பாகிட்டே சொன்னா ,அவரை  ஞாபகம் இல்லேன்னு  சொல்றார்மா !''
            ''அமலாவோட மாமனார்னு  சொல்லு ,கண்ணீரே வடிப்பாரு !''

                                                      Image result for nadigai amala


ஆம்லேட் தின்னும் ஆசையே போச்சு :)

             ''ஏம்பா சர்வர் ,ஆம்லேட் உடனே  கிடைக்காதா ?''

            ''ஆம்  'லேட் ' டாகும்  சார் !வலி ஒன்றுதான் !பேர்தான் வேறு வேறு :)

HEADACHE என ஆபீஸில் லீவ்
 சொல்ல   நினைத்தபோது ...
செல் அழைத்தது ..
'மண்டைக் குத்து வலி ,வேலைக்கு வர முடியாது '
ஒலித்தது  வேலைக்காரியின்  குரல் !

22 comments:

 1. வணக்கம்
  ஜி

  இரசித்தேன் வாழ்த்துக்கள் த.ம 1

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ஆம்லேட் சுவைதானே :)

   Delete
 2. இட மாற்றம் நல்ல பலனைக் கொடுத்திருக்கிறதே....

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. சமயோசித புத்தி கைகொடுக்காமல் போகுமா :)

   Delete
 3. சின்ன முதலாளியின் சின்னத் தனம் விழி பிதுங்குது...!

  கடைசி காலத்தில காசிக்குப் போக வேண்டியது இல்லாம பண்ணிட்டாரு... டாக்டர்...! யோகிகியன் வர்றான் சொம்பத் தூக்கி உள்ள வை...!

  அமலாவா... அமாலபாலோட... மாமனாருன்னு நல்லாக் கேளுடா...?!

  ஆம்லேட் 'லேட் ' ஆகிறதப்பாத்தா... அது வர்றதுக்குள்ள என் பேருக்கு முன்னாடி ‘லேட்டு’ன்னு போட்டுறுவாங்க போல இருக்கே...!

  எல்லாத்துக்குமே உள் குத்துதானோ...?

  த.ம.3  ReplyDelete
  Replies
  1. கரும்பை பிழிவது போல் தொழிலாளிங்களைப் பிழிந்து எடுக்கிறாரே :)

   இப்படின்னு தெரிந்தால் காசி சொம்பை கிளினிக் மெடிக்கல் ச்டோரிலேயே விற்கச் சொல்லி விடலாமே :)

   நம்ம தலைமுறை அமலாவேதான் :)

   வாய்க்கரிசி மாதிரி வாய்க்காம்பிலெட் ஆகி விடுமா :)

   திருப்பித் தாக்குதே இந்த குத்து :)

   Delete
 4. Replies
  1. சீனி மூட்டைதானே:)

   Delete
 5. Replies
  1. மண்டைக் குத்து வலியையுமா :)

   Delete
 6. சீக்கிரமே சர்வ் செய்துவிட்டால் அது ஆம்சீக்கிரமா!
  ரசித்தேன்.
  தம +1

  ReplyDelete
  Replies
  1. சர்வ் செய்ய முடியும் ,ஆம்லேட்டை நொடியிலே போட முடியுமா :)

   Delete
 7. 01. திறமை மேலும் வளரட்டும்
  02. டாக்டருக்கு கமிஷனும் உண்டோ...
  03. ஹாஹாஹா ஸூப்பர் ஜி
  04. ஸூப்பர் சொல்லடி
  05. பதிலுக்கு பதில்

  ReplyDelete
  Replies
  1. உழைப்பவர்களை இன்னும் கசக்கிப் பிழிய முடியுமா :)
   கொடுத்தால் வேண்டாம்னா சொல்லப் போறார் :)
   நாகார்ஜுனா ரொம்பப் பெருமைப் படுவாரோ :)
   கேட்டு அதிர்ந்து போயிருப்பாரா :)
   போட்டதுதானே முளைக்கும் :)


   Delete
 8. ரசித்தேன்! சிரித்தேன்! மகிழ்ந்தேன்! வாழ்த்துக்கள் ஜி!

  ReplyDelete
  Replies
  1. தேன்மயமான உங்க வாழ்த்துக்கு நன்றி ஜி :)

   Delete
 9. ஆகா... நல்ல புண்ணியவதியை கொடுத்து வைத்த பண்ணிய கோடி.....!!!!

  ReplyDelete
  Replies
  1. இதுக்கு கோடியா கொடுத்து வச்சிருக்கணும் :)

   Delete
 10. Replies
  1. மீண்டும் ரசிக்க அழைக்கிறேன் ,குமார் ஜி :)

   Delete
 11. ஆம்லேட் தான் .

  அனைத்தையும் ரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. லேட் ஆனாலும் டேஸ்ட் சூப்பர்தானே :)

   Delete