26 January 2016

கை மாறிய காதலிக்கு கல்யாணம் :)


உபயம் என்று சொல்லி உபாயம் ஏதும் செய்கிறாரோ :)

                  ''கோவிலில் உள்ள எல்லா உண்டியல்களுக்கும்  பூட்டு வாங்கித் தர்றேன்னு தலைவர் சொன்னாலும் ஏன் வேண்டாங்கிறாங்க ?''

                ''டூப்ளிகேட் சாவிகளை ரெடி பண்ணிக்கிட்டு கொடுத்து விடுவாறோங்கிறது பயம்தான் !''
                                                                  Image result for டியூப் லைட் உபயம்

குடியரசு ஆனதன் பலன் அனுபவிக்கிறவங்க யார் :)

                       ''தலைவர்  அறிக்கை விடும் போது மப்புலே இருந்த மாதிரி தெரியுதுன்னு ஏன் சொல்றே ?''
             ''குடிஅரசு ஆனதின் முழுபலனை  நமது மாநில மக்கள்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லும்வண்ணம்,இன்று ஒவ்வொரு டாஸ்மாக் கடை வாசலிலும்  தேசீயக் கொடி ஏற்றவிருப்பதால் 'குடி 'மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு சொல்லி இருக்காரே !''

  1. கை மாறிய காதலிக்கு கல்யாணம் :)

                ''5 ஸ்டார் ஹோட்டல் ஏசி ஹாலில் அடுத்த வாரம் எனக்கு கல்யாணம் ,நீ அவசியம் ரணும்டா !''
        ''கவலையே படாதே ,வந்து விடுகிறேன்  ,(மனதுக்குள் )உனக்காக இல்லைன்னாலும் என் பழைய காதலிக்காக வந்து தானே ஆகணும் !''
      1. MDக்கு வந்த நல்ல எண்ணம் :)
      2.  ''மேனேஜர் ,நம்ம தொழிலாளிங்க யாரும் 'கையிலே வாங்கினேன் பையிலே போடலே காசு போன இடம் தெரியலே'ன்னு  பாடக்கூடாது ...!''
      3.  ''சம்பளத்தை இரண்டு மடங்கு ஆக்கப் போறீங்களா ,முதலாளி ?''
      4.  ''ஊஹும் ...சம்பளத்தைப் பாங்கிலே போட்டுருங்க !''

    1. காதலியின் ஆசையை நிறைவேற்றத் துடிக்கும் காதலன் :)
    2.      
    1.            ''டார்லிங் , 28  வயசுலே பிள்ளைப் பெத்துக்கிட்டா 

    2. நல்லதுன்னு டாக்டர்கள் சொல்றாங்க !''     
      1.           ''எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லே ,முதல்லே பெத்துக்க ...

      1. தாலியைக்கூட மெதுவா கட்டிக்கலாம் !''
          1. நல்ல ருசி 'ராட்டை ' மீன் :)


               
                    1.              புலால் மறுத்த காந்தீயவாதிகளும் 
                                   விரும்பியிருந்தால் உண்டு இருப்பாரோ ...           

                    2.  'ராட்டை ' மீனை ! 

                    3.                                 Image result for ராட்டை  மீன்
                    4.              
                    5.                                 Image result for ராட்டை


        1.                      
        2.                    

26 comments:

  1. 01. தலைவரைப்பத்தி ஏற்கனவே தெரிஞ்சதுதானே ?
    02. இதுவுமா... ?
    03. கண்டிப்பாக போகணும்
    04. பூவாவுக்கு ?
    05. யோசனை மஞ்சிவாடு
    06. விரும்பலாமே...

    ReplyDelete
    Replies
    1. தலைவரின் நாணயம் நாடறிந்ததாச்சே :)

      இங்கேயுமா :)

      எங்கிருந்தாலும் வாழ்கன்னு வாழ்த்திட்டு வரணுமோ :)

      பையிலே போட்டேன்னு ,காணலேன்னு சொல்ல மாட்டாங்க தானே :)

      அவன் காய்ஞ்ச மாடு ,மேய்ஞ்சுருவானே :)

      ராட்டைன்னா பிடிக்காமல் போகாதே :)

      Delete
  2. அனைத்தும் அருமை. பூட்டு மிக அதிகமாக.

    ReplyDelete
    Replies
    1. தானம் பண்றவர் ஏன் பூட்டு வாங்க பணத்தைக் கொடுக்கக்கூடாது:)

      Delete
  3. இதில் இப்படி ஒன்று இருக்கோ!

    சிரிப்பிக்கிறார்!

    அடப்பாவமே..

    ஜோக் இல்லை, நல்ல ஐடியா.

    அடப்பாவி!

    இப்படியும் ஒரு மீனா!

    ReplyDelete
    Replies
    1. தலைவருக்குத் தெரியாததா :)

      மிட்டாய்க்கு பதில் கட்டிங் இலவசமாய் தருவார்களோ :)

      பாவி மகளே :)

      அரசு ஊழியர்களுக்கு அமுலாகி விட்டதே :)

      காத்துக் கிடக்கான் போலிருக்கே :)

      சாப்பிட்டவங்ககிட்டே கேட்டுப் பாருங்க :)

      Delete
  4. Replies
    1. ராட்டை ருசி உங்களுக்குத் தெரியுமா ஜி :)

      Delete
  5. குடி அரசு, கிச்சு...கிச்சு...

    ReplyDelete
  6. வரவர தலைவர எல்லோருமே புரிஞ்சிக்கிராங்க...! உண்டி(யல்) கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே...!

    யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்... எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி வேறொன்றும் அறியேன்...!

    கைமாறு கருதாவன் இவனன்றோ...!

    ‘டாஸ்மாக்’ பேங்கு மொதல்ல திறக்கச் சொல்லனும்...! ரெண்டு வேலை எதுக்கு...? என்னங்க நா சொல்லறது சரிதானே...!

    28 வயசுலே பிள்ளைப் பெத்துக்கிட்டாலும் சரி... இல்ல தத்து எடுத்துக்கிட்டாலும் சரி...! பெற்றால்தான் பிள்ளையா...?

    வஞ்சிர மீனை வறுத்து வச்சிட்டு... நாக்கில எச்சில் ஊற ராட்டை சுத்த வேண்டியதுதான்...! காந்தியவாதின்னு நிருபிச்சிட்டீங்க...!

    த.ம. 3    ReplyDelete
    Replies
    1. உண்டி உடைத்தோரை என்ன சொல்றது :)

      டாஸ்மாக் வாசல் வாசகமா இது :)

      அதனால்தான் முன்னாள் காதலன் ஆகிப் போனான் :)

      வரவிலே செலவைக் கழித்துக் கொண்டாலும் od அடையுமா :)

      தத்து கடைசி சான்ஸ் ஆச்சே :)

      ராட்டைச் சுற்ற ,உடம்பிலே வலு வேண்டாமா :)

      Delete
  7. குடியரசு தின நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. வெளி நாட்டில் இருந்து சொன்ன வாழ்த்துக்கு நன்றி :)

      Delete
  8. அனைத்தும் அருமை..... பாராட்டுகள்....

    ReplyDelete
    Replies
    1. மண்ணின் மைந்தனா , ஜாலியா இருக்கீங்க போலிருக்கே :)

      Delete
  9. அடடா... கைக்கு கிடைத்தது வாய்க்கு கிடைக்காமல் போய்விட்டதோ..கை மாறிய காதலி....

    ReplyDelete
    Replies
    1. கிடைச்ச வரைக்கும் லாபம்தானே :)

      Delete
  10. சிறந்த பகிர்வு

    இந்தியாவின் 67வது குடியரசு நாள் வாழ்த்துகள்!

    மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும் பற்றி அறிந்திட......
    http://www.ypvnpubs.com/2016/01/blog-post_26.html

    ReplyDelete
    Replies
    1. அண்டைய நாட்டில் இருந்து வாழ்த்தியமைக்கு நன்றி :)

      Delete
  11. அருமையான ஜோக்ஸ்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இந்த ராட்டை காந்தீய ராட்டை இல்லை ,தீய ராட்டை ,அப்படித்தானே :)

      Delete
  12. ராட்டை
    +
    அனைத்தும்
    கலக்கல்!

    ReplyDelete
    Replies
    1. இந்த தலைமுறைக்கு ராட்டை என்றால் தெரியுமா ,ஜி :)

      Delete
  13. வணக்கம்
    ஜி

    இரசித்தேன் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அந்த காதலனின் பதிலையும்தானே :)

      Delete