27 January 2016

கணவனால் இளம்மனைவிக்கு உண்டான அவஸ்தை :)

 நல்ல வேளை,உங்களை வெட்டாம விட்டானே :)                        
                 ''திடீர்னு முருங்கைக் காய் வியாபாரத்தை நிறுத்திட்டீங்களே,ஏன் ?''
                   ''பக்கத்து வீட்டுக்காரன் மரத்தை வெட்டிட்டானே !''

 பையனுக்கு நூடுல்ஸ்னா  உயிரோ :)    
             ''உங்க  பையன் கவிஞராய் வருவான் போலிருக்கா ,எப்படிச்  சொல்றீங்க ?''
            ''பூக்களைப் பறிக்க கோடரி எதுக்குன்னு நான் பாடினா ,நூடுல்ஸ் உடைக்க சம்மட்டி எதுக்குன்னு  எதிர்ப் பாட்டு பாடுறானே !''கணவனால் இளம்மனைவிக்கு தினசரி அவஸ்தைதான் :)

                                 ''ராத்திரிப்பூரா  என்னவர் தொல்லைத் தாங்க முடியலேடி !''
                   

                        ''இப்பத்தானே கல்யாணம் ஆகியிருக்கு ...அலுத்துக்கிறீயே ?''
                        

                          '' அட நீ வேற ...அவரோட குறட்டைச் சத்தத்தால் என்னாலே 
               
                     தூங்கவே முடியலேன்னு சொல்ல வந்தேன் !''

 மயங்கிக் கிடந்தவன் முகத்தில் தண்ணீர் தெளித்தால் ....:)
              
                   ''மயக்கமாகி எழுந்தவனை எல்லோரும் ஏன் அடிக்கிறாங்க ?''
            
                ''ஒரு சோடா வாங்கிக் கொடுக்கக்கூட ,உங்கள்ளே யாருக்கும் 

               துப்பில்லையான்னு கேட்டானாம் !''


 • அவரவர் கஷ்டம் அவரவர்களுக்கு :)

    1. ஒற்றுமையாய் இருந்த என்னைப் பிரித்து 
     தலையிலே பலமாய்  அழுத்தி 
      குழியிலே  என்னைத் தள்ளி 
     அகலக்கால்  வைக்க விடாமல் 
     உள்புரமாய்  மடக்கி ...
      உன்   தேவையை  தீர்த்துக் கொண்டாயே ,
     நான்படும்   கஷ்டம்  உனக்கு புரியாதா ?
     எனக் கேட்ட 'ஸ்டாப்பிளர்  பின்னிடம் '
     முதிர் இளைஞன்  சொன்னான் ...
     வேலைக் கிடைக்கும் வரை  என் கஷ்டமே 
     எனக்குப்  பெரிது !
  27 comments:

  1. கம்பளிப் பூச்சி பயமோ!

   அடேடே கற்பனை வழுக்கிக் கொண்டு போகிறதே...

   அதற்குள் அரட்டை கூட இல்லாம குறட்டையா!

   துட்டு இல்லைன்னு பதில் சொல்லியிருக்கணும்!

   புதிய சிந்தனை!

   ReplyDelete
   Replies
   1. அதுகூட இல்லை ,பக்கத்து வீட்டுக்காரர் தொல்லைதான் :)

    நூடுல்ஸ் போலவா :)

    மோகம் முப்பது நாள்தானே :)

    பிறகெதுக்கு தண்ணி தெளிச்சீங்கன்னு கேட்பானே :)

    வேலை வெட்டி இருந்தால் வருமா :)

    Delete
  2. வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிடுச்சோ...! நல்ல வேளை...!

   அவனே நொந்து நூடுல்ஸ் ஆயிட்டான்... சம்மட்டி எதுக்கு... சுத்தியல் போதுமே... நெத்தியடி போங்கோ...!

   ‘குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டாருன்னு...’ அடிக்க வேண்டியதுதானே...! இதுக்காக டைவர்ஸ் எதும் பண்ணிடாதே... நான்தான் அவசரப்பட்டு டைவர்ஸ் வாங்கிட்டேன்... என்னவர் இப்ப அவஸ்தப்படுறதப் பார்க்க மனசு தாங்கல...!

   சோடாவுக்காக மயக்கம் போட்டா... காரியம் நடக்கலையே...! என்னா உலகம்டா...? பிச்சைகார உலகமாப்போச்சே...!

   ‘ஸ்டாப்பிளர் பின்’புத்தி பின் புத்திதான்... குத்திக் காட்டுறதே அதன் வேளை...! ‘வேலையில் இருப்பவர்களுக்கு சும்மா இருப்பதே சுகம்... வேலையில் இல்லாதவருக்கு சும்மா இருப்பதே சோகம்...’ நம்ம மேத்தா பாடி இருக்கிறது அதுக்கு எங்க தெரியப்போவுது...!

   த.ம3

   ReplyDelete
   Replies
   1. வேதாளம் ,பக்கத்து வீட்டிலேதான் குடியிருக்கு :)

    சுத்தி தூக்கவாவது வலு இருக்கா ,நொந்து நூடுல்ஸ் ஆனவனுக்கு :)

    ஆமா ,முழிச்சுகிட்டு இருந்தவங்க எல்லாம் கோட்டையைப் பிடிச்சாங்களா :)

    நம்மைப் போலத்தான் இருக்கும் உலகமும் :)

    ஆபீஸ் ஸ்டாப்பிளர் பின் குறையேதும் சொல்லாது ,ஏன்னா ,அதைப் பயன்படுத்துவதே இல்லையே :)

    Delete
  3. எதிர்ப்பாட்டு உட்பட அனைத்தும் அருமை ஜி...

   ReplyDelete
   Replies
   1. பாட்டு அருமைன்னு ,வலைச்சித்தர் நீங்களே சொன்ன பிறகு எனக்கென்ன கவலை :)

    Delete
  4. Replies
   1. முருங்கைக் காய் அருமைதானே :)

    Delete
  5. ஸ்டேப்ளர் பஞ்ச், நிதர்சனம்.

   ReplyDelete
   Replies
   1. இந்த நிதர்சனம் ,என்று மாறுமோ :)

    Delete
  6. 1) முருங்கைக் காய் மரத்தை வெட்றதாவது!.. வெவரம் தெரியாத ஆளாயிருப்பான் போல இருக்கு!?..
   2) நூடுல்ஸ் உடைக்க சம்மட்டி.. வெந்ததா!.. வேகாததா?..
   3) குறட்டைச் சத்தம் - கோர்ட்டுக்குப் போகாம இருந்தா சரி..
   4) சோடாவுக்காக மயக்கம் போட்டு விழுந்தான் போல இருக்கு!..
   5) அவரவர் கஷ்டம் அவரவர்க்கு.. சரிதான்!..

   ReplyDelete
   Replies
   1. பக்கத்துக்கு வீட்டுக்காரன் தொல்லை தாங்கமுடியாம தூரோட வெட்டிட்டாரே :)
    வெந்தது என்றால் கைமா போடா உத்தேசமா :)
    நீதிபதியே ,சகிச்சுக்கிட்டு வாழ்த்து கிட்டிருக்காராமே :)
    நல்ல வேளை, பொவொண்டோ கேட்காமல் போனான் :)
    எந்த கஷ்டமும் ,நஷ்டம் தராது என்று மனதைத் தேற்றிக்கொள்ளணும்:)

    நீண்ட நாளுக்குப் பின் கருத்து தந்தமைக்கு நன்றி ஜி :)

    Delete
  7. அய்யொ பாவம் புதுமண தம்பதிக்கு குறட்டை சத்தம் ஆகாதே

   ReplyDelete
   Replies
   1. அதுக்காக ,தூக்க மாத்திரையா போட்டுக்க முடியும் :)

    Delete
  8. 01. இவ்வளவு நாளா இப்படித்தான் வியாபாரமா ?
   02. ஆஹா.... ஜி ஏதும் உள்குத்து இல்லையே...
   03. நான்கூட.......
   04. உண்மைதானே.... கேள்விதான் கொஞ்சம் காரம்.
   05. அடடே சிந்தனை அருமை ஜி

   ReplyDelete
   Replies
   1. ரோட்டுலே திரியுற கழுதைப் பாலைப் பிழிந்து கூட காசாக்கிடுவார் அவர் :)
    முகமது அலி ரசிகன் நான் ....நேரா குத்து விடத்தான் தெரியும் :)
    பல்பு வாங்கிட்டேன் ..அதுதானே :)
    இருக்கத்தானே செய்யும் ?டிராமாவில் கிளைமாக்ஸ் இப்படியானால் :)
    ஸ்டாப்பிளர்கூட அரசு அலுவலகத்தில் இருக்க நினைக்குமோ :)

    Delete
  9. Replies
   1. எது நன்று ,குறட்டையினால் மனைவி படும் கஷ்டமா :)

    Delete
  10. நூடுல்ஸ் உடைக்க சம்மட்டி எதற்கு? நல்ல கேள்வி...

   அனைத்தும் ரசித்தேன்.

   ReplyDelete
   Replies
   1. பயபிள்ளே அவனே நொறுக்குவானே:)

    Delete
  11. சிரிப்போ சிரிப்பு என்று சிரிக்க வைத்தன இன்றைய ஜோக்ஸ்! வாழ்த்துக்கள்!

   ReplyDelete
   Replies
   1. முருங்கையில் தொடங்கிய பதிவாச்சே :)

    Delete
  12. வணக்கம்
   ஜி

   இரசித்தேன் அருமை ஜி.த.ம 12

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   ReplyDelete
   Replies
   1. ஸ்டாப்பிளர் பின்னையும்தானே:)

    Delete
  13. அதானே நூடுல்ஸ் உடைக்க சம்மட்டி எதற்கு ஹஹஹஹஹ்

   அனைத்தும் ரசித்தோம் ஜி. அது சரி பூக்களைப் பறிக்க கோடரி எதற்கு..கில்லர்ஜி கண்டுக்கலையா இத....ஹஹஹஹ

   ReplyDelete
   Replies
   1. கில்லர்ஜி கண்ணில் படாமல் அதெப்படி போகும் ..அதான் உள்குத்தான்னு கேட்டு விட்டாரே :)

    Delete
  14. முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் முருங்கைக் காய்

   ReplyDelete