3 January 2016

வரப் போற மனைவி எப்படி இருக்கணும் :)

இனி இவர் 'புவ்வா 'வுக்கு லாட்டரிதான் அடிக்கணும் :)
                   ''என்னங்க ,என்னை எதுக்கு லாரி எடை போடும் இடத்துக்கு கூட்டி வந்து இருக்கீங்க ?''
                   ''நீதானே  எடைப் பார்த்துக்கணும்னு சொன்னே !''
பட  உதவிக்கு நன்றி >>>http://tamil.thehindu.com/
                       

வரப் போற மனைவி எப்படி இருக்கணும் :)

             ''அம்மா ,எனக்கு வரப் போற 

பொண்ணுக்கு ,ஐஸ்வர்யா கண் ,அனுஷ்கா உயரம் 


,நயன்தாரா கலர் ,நஷ்ரியா …''

           
           ''போதும் நிறுத்துடா ,இப்படிப்பட்ட 

பொண்ணை எங்கே தேடுறது ?''
              

               ''தேடவே வேண்டாம் ,பக்கத்து வீட்டிலேயே 

நான் பார்த்து வச்சிருக்கேனே  !''
 1.   கஞ்சாவைக் கூட அஞ்சாமல் விற்கும் நிலை வந்தால் ...?      


 தமிழர்கள் ஆகிய நாம் பெருமைப்படும் படியான ஒரு சரித்திரச் சாதனை புத்தாண்டில் நிகழ்ந்து உள்ளது ...
புது வருசத்தைக் கொண்டாட தமிழ்'குடிமகன் /ள் டாஸ்மாக்கில் செலவிட்ட தொகை 25௦ கோடியாம் ...
வெள்ளையன்கூட அவன் புத்தாண்டுப் பிறப்பை இவ்வளவு 


செலவு செய்து கொண்டாடி இருப்பானாவென்று தெரியவில்லை .
இந்த புதுமை இங்கே நடக்கும் சமயத்தில் ...
அமெரிக்க மாகாணம் கொலராடோவில் இன்னொரு புதுமை அரங்கேறி உள்ளது ...
கஞ்சா பயிரிடவும்,விற்பனை செய்யவும் அரசாங்கமே அனுமதித்து உள்ளது ...
மலேசியா ,சிங்கப்பூரில் கஞ்சா வைத்து இருந்தாலே மரண தண்டனை ...ஆனால் கொலராடோவில் மக்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமை ஆகாமல் இருக்க சட்ட திட்டம் வகுத்து இருக்கிறார்களாம் ...
1 8 வயதானவர்களுக்கு தினசரி 28 கிராம் மட்டுமே விற்க அனுமதியாம் ...
போதைக்கு அடிமையானவர்கள்  மனமும் உடலும் கெட்டு,நிறைய பொய்பேசுவதாகவும் ,திருட்டு ,கொள்ளை ,பாலியல் வன்முறை ,சமூக விரோத காரியங்கள் செய்வதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன ...
ஆனால் ,ஆள்பவர்களுக்கு கஜானா நிரம்பினால் போதும் போலிருக்கிறது ...
கொலராடோ வழிகாட்டி விட்டது ...
அடுத்த படியாக அமெரிக்காவில் உள்ள மற்ற மாகாணங்களும் இதை பின்பற்றும் ...
அமெரிக்கச் சீரழிவுக் கலாச்சாரம் இங்கேயும்  பரவும்  காலம் வெகு தூரத்தில் இல்லை ...
தெருவுக்கு தெரு அரசாங்கமே கஞ்சாக் கடைகளைத் திறந்து மக்களை  வாழ வைக்கப் போகிறது  !


மாமியார் வீட்டில் இருந்த அனுபவம் :)
                       ''வீட்டோடு இருக்க விரும்பும்  வரன் தேவைன்னு சொன்னது தப்பாப் போச்சு!'
                 ''ஏன்?'
             ''வருசத்திலே பாதி நாள் 'மாமியார் 'வீட்டுலே தான்  இருக்கேன்னு  கொள்ளைக்காரன் வந்து நிற்கிறானே!''
                                                    
இதென்ன அபத்தம் :)
தனக்கு இரையாகும் சுறா மீனைக் கூட 
வலைப் போட்டு பிடிக்கும் மனித இனம் ..
கொசுவுக்குப் பயந்து 
வலையிலே சிறையிட்டுக் கொள்கிறதே ,என்ன நியாயம்?
24 comments:

 1. இந்த எடை மேடை தாங்குமான்னு யோசிக்காதே...! பயப்படாம ஒ வலது காலை எடுத்து வை...!

  காதலுக்கு கண் இல்லேங்கிற நிருபிச்சிட்டியேடா...!

  பாரே ரொம்பக் கெட்டுப் போச்சு...!

  மகளின் மனதைக் கொள்ளையடித்தவன்தானே...!

  கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதில்ல...!

  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. எது சேதமானாலும் கிளைம் பண்ணிக்குவார் ,தைரியமா காலை வை :)

   அதானே ,அம்மா கண்ணுலே இதெல்லாம் படவில்லையே :)

   என்னத்தைச் சொல்ல ,பாலைக் கூவி விற்க வேண்டியிருக்கு ,கள்ளு இருக்கிற இடத்திலே விற்றுத் தீர்ந்திடுதே :)

   அப்படின்னா வருஷம் முழுவதும் மாமியார் வீடுதான் :)

   அதிகாரத்தில் உள்ளவர்கள் காரம் குறைய நடவடிக்கை எடுத்தால் நல்லது :)

   Delete
 2. வணக்கம் பகவானே!

  அனைத்துமே ரசனை.


  இறுதியில் உள்ள பஞ்ச் மிகவும் அருமை.

  தொடர்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அரசே ,கஞ்சா விற்க அனுமதிப்பதை ரசிக்க முடியுதா ,ஜி :)

   Delete
 3. லாரி எடை போடும் இடம் -----
  ''நீதானே எடைப் பார்த்துக்கணும்னு சொன்னே !''oH! my god!.....

  பக்கத்து வீட்டிலேயே AAha!.....
  _____________
  கொசுவுக்குப் பயந்து
  வலையிலே சிறையிட்டுக் கொள்கிறதே ,என்ன நியாயம்? // அது சரி!...எங்கே இதெல்லாம் போய் யோசிக்கிறீங்க!...
  அருமை ரசித்து மகிழ்ந்தேன்.....sakothara....'
  (வேதாவின் வலை)

  ReplyDelete
  Replies
  1. இதையெல்லாம் ரூம் போட்டா யோசிக்க முடியும் :)

   Delete
 4. மனைவியின் எடையைப் பார்க்கவா எடை மெஷினைச் சோதிக்கவா.அம்மா பார்க்காத பெண்ணா.இந்தப் பழக்கங்கள் பீர் (peer) ப்ரெஷரால் வருபவை. இந்தியாவின் பீர் அமெரிக்காவா வீட்டோடு இருக்கும் வரன் இன்னொரு விதக் கொள்ளைகாரன் அல்லவாஇருக்கும் அபத்தங்களில் இதுவும் ஒன்று

  ReplyDelete
  Replies
  1. மெஷினுக்கு வந்த சோதனையா :)
   அவங்க மருமகள் என்று நினைத்துப் பார்க்கலையே :)
   ஏண்டா வற்புறுத்திக் கொடுத்தோம்னு, இப்போ வருத்தப்பட்டு என்ன செய்வார் :)
   பீரைத் தாண்டி கஞ்சாவுக்கு முன்னேறி விட்டது அமெரிக்கா :)
   அனுமதிக்கப் பட்ட கொள்ளைக்காரனோ :)
   ஒன்று மட்டுமல்ல ,அபத்தத்தில் முதலாவதும் கூட :)

   Delete
 5. 01. இனி சோத்துக்கு... ?
  02. பிட்டை சரியாப்போட்டான்.
  03. நாசமாப்போச்சு.
  04. சரிதானே...
  05. இது குழப்பமாகத்தான் இருக்கு ஜி

  ReplyDelete
  Replies
  1. எடை போடுபவர் வீட்டில்தான் சாப்பிடணும்:)
   போட்டு வாங்குவதில் கெட்டிக்காரன் :)
   கோளாறாகி போச்சு கொலராடோ :)
   மேளம் கொட்டிவிட வேண்டியதுதானா :)
   குழப்பம் தீர என்ன வழி,குழப்பமா இருக்கே:)

   Delete
 6. அனைத்தும் ரசித்தேன்.....

  ReplyDelete
  Replies
  1. கடைசியாக கேட்ட கேள்வியையும் தானே :)

   Delete
 7. Replies
  1. இப்படி வீட்டோட மாப்பிள்ளை கிடைப்பது ,அபூர்வம்தானே :)

   Delete
 8. ரசித்து சிரித்தேன்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. சிரித்தது ,பையன் இவ்வளவு விவரமாய் இருக்கிறானே என்று நினைத்துதானே :)

   Delete
 9. கொசுச்சிறை
  கொள்ளைக்கார்ன்...
  பக்கத்து வீட்டுப் பெண்...
  டாஸ் மார்க் லாபம்...
  எடை மிஷின் என எல்லாம் கலந்து கட்டி ஆடியிருக்கீங்க...
  ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. எப்படி கலந்து கட்டி அடிச்சாலும் ,உங்களிடம் இருந்து த ம வாக்கு ஒன்றை பெற முடியலியே குமார் ஜி :)

   Delete
 10. அனைத்தும் ரசித்தோம் ஜி...கடைசியில் செம பஞ்ச்...அந்த முதல் படம் மட்டும் பயமுறுத்துது ஜி!!ஹிஹிஹி

  ReplyDelete
  Replies
  1. உருளை மேல் இவ்வளவு அழகாக பாலன்ஸ் செய்வதை ரசிப்பதை விட்டு விட்டு ஏன் பயந்து சாகுறீங்க ஜி :)

   Delete
 11. தலைப்பையும் முதல் படத்தினையும் பார்த்து விட்டு உங்கள் ஆசையை தன சிம்பாலிக்கா சொல்கின்றீர்களோ என நினைத்து உள்ளே வந்தேன்!அந்தபெண் பக்கத்து விட்டுபெண் என புரிந்தும் கொண்டேன். ஹாஹா!

  கஞ்சாவுக்கு அஞ்சாத சிங்கங்கள்! கவலை தரும் செய்தி!  ReplyDelete
  Replies
  1. படத்தில் உள்ள பெண்ணின் மன உறுதியை ரசித்தேன் ,அவர் செய்து காட்டியிருக்கும் காரியத்தை செய்ய நம்மால் முடியாதே !பக்கத்து நாட்டு பெண்மணிக்கு வாழ்த்துக்கள் :)

   இதற்காக,அதிகம் கவலைப் படாதீர்கள் ,உடம்பு இளைத்து விடப் போகிறது :)

   Delete
 12. ஹாஹா! இதுக்கெல்லாம் கவலைப்பட்டால் கூட உடம்பு இளைக்கும்னால் நான் இன்னும் நிரம்ப விடயத்துக்கு கவலைப்பட தயாராக்கும்.

  ReplyDelete
  Replies
  1. அப்படிஎன்றால் ,படத்தில் உள்ள பெண்மணியின் சைஸுக்கு நீங்கள் இருப்பீர்கள் போலிருக்கே :)

   Delete