30 January 2016

நகையோட ,லோனும் கொடுத்தா வேண்டாம்னா இருக்கு ?

  போஸ்ட்மேனா இருந்த இவனோட அப்பனும் இப்படித்தான் :)                         
                  ''என்னடா சொல்றே ,சிஸ்டத்திலும் நான் செண்டிமெண்ட் பார்க்கிறேனா ?''
                    '' இன்பாக்ஸ் ,வெறும் பாக்ஸா இருக்கக் கூடாதுன்னு  எப்பவும்  டெலிட் செய்யும்போது ஒரு மெயிலை வைச்சுகிறீயே !''

மாமூல் தந்த தைரியமோ :)
            ''இருந்தாலும் கபாலிக்கு இவ்வளவு தைரியம் கூடாது ஏட்டையா !''  
            ''ஏன்  ?''
              ''நம்ம ஏரியாவில் எந்தெந்த வீடு பூட்டிக் கிடக்குன்னு போன்பண்ணிக் கேட்கிறானே !''

 நகையோட லோனும்  கொடுத்தா வேண்டாம்னா இருக்கு :)          
                    ''நீங்க கேட்ட ஜூவல் லோன் பணத்தை எதுக்கு நகைங்க மேலே வைச்சு தரச்சொல்றீங்க ?''

        ''நீங்கதானே நகைங்க மேலே லோன் தரப்படும்னு சொன்னீங்க ?''

 1. தலைப்பாகையை அலசிப் போட்ட மனைவி சொல்லி இருப்பாளா :)

             ''காக்கா ,கக்கா போட்டுகூட  பழமொழி உருவாகி இருக்கா ,எப்படி ?''
 2.            'தலைக்கு வந்தது தலைப்பாகையோடப் போச்சுங்கிறது , 
 3. வேற எப்படி வந்திருக்கும் ?''
 4. கவலைகள் ஓய்வதே இல்லை :)

   1. மாசக் கடைசியில் ...
    நடுத்தர வர்க்கத்தின்  கவலை ஒன்று கூடியது  ...
    காசும் குறைகிறது,
    நெட் ஸ்பீடும்  குறைகிறதே !  

20 comments:

 1. வச்சிக்கவா ஒன்ன மட்டும் மெயிலுக்குள்ள... சத்தியமா மெயிலுக்குள்ள வேற ஒன்னுமில்ல...!

  மாமூல் கொடுக்கிற தைரியத்தில கேக்கிறான்... எல்லாம் சூப்பர் ஸ்டார் ஆயிட்டோமுன்னு கபாலிக்கு நெனப்பு... !

  எப்படியும் முழுகப் போவுது... முக்காடு எதுக்கு... கடைசியா காசு மேல காசு வந்து சேருகிற நேரமிதுன்னு அதுகளும் தெரிஞ்சிக்கட்டும்...!

  காக்கா தலைக்கு வந்தது தலைப்பாடையில... போச்சு...! பாவம்...!

  ‘நெட்’ அத்துவிட்டு பெரிய நஷ்டத்த ஏற்படுத்துறாங்க... சுத்தி சுத்தி வந்தீங்க...!

  த.ம. 1

  ReplyDelete
  Replies
  1. ரகசியமா வச்சிக்க ஏதும் இருக்கா :)

   உரிமை எடுத்துக் கொள்வதில் தவறில்லையே :)

   முழுகாம இருந்தால் நல்லதுதானே :)

   பாவம் காக்காவா :)

   நெட்டை நொட்டைச் சொல்லக் கூடாதோ :)

   Delete
 2. Replies
  1. உறங்காத உண்மைகள் என்று சொல்லலாமா ஜி :)

   Delete


 3. ஹா....ஹா... ஹா... என்னவொரு செண்டிமெண்ட்! ஆனால் இன்பாக்ஸை சுத்தமாத் துடைக்கவே முடியலையே...

  புதுசா என்ன!

  ஆஹா... கிளம்பிட்டாங்கையா...!

  அப்படியும் இருக்குமோ...

  நம்ம நாடு இந்த விஷயத்தில் எப்பதான் முன்னேருமோ போங்க!

  ReplyDelete
  Replies
  1. மனம் இருந்தால் மார்க்கமுண்டு :)

   மாமூலா கேட்பதுதான் :)

   எப்படி புரிய வைக்கிறது :)

   அப்படித்தான் ,என் ஆராய்ச்சி முடிவு :)

   இரயில்வே ஸ்டேசனிலையே ப்ரீ வை பை இன்னும் வந்த பாடில்லை :)

   Delete
 4. கபாலிக்கு பயங்கர தைரியம் தான்...

  ReplyDelete
  Replies
  1. எப்படி வந்திருக்கும் இந்த தைரியம் :)

   Delete
 5. இன்பாக்ஸைதுடைப்பதே இல்லை ஏட்டையாவையும் கூட்டு சேர்க்கவா ஆட்டோ மீட்டருக்கு மேலே காசுபோலதலைப்பாகைக்கு இப்படியும் ஒரு யூசா?

  ReplyDelete
  Replies
  1. துடைத்தாலும் சேர்ந்து விடுகிறது :)
   நடைமுறையில் உள்ளது தானே :)
   இது நியாயமா :)
   தலைப்பாகைக்குப் பதிலா இப்போ ஹெல்மெட் :)

   Delete
 6. 01. வெறும் பெட்டியாக இருக்க கூடாதே...
  02. நண்பனிடம் கேட்பது தவறா ?
  03. சரிதானே...
  04. இது உண்மைதான் நானும் வரலாறு புக்ல படிச்சேன்
  05. ஸூப்பர் ஜி

  ReplyDelete
  Replies
  1. அதென்ன ,காசு வைக்கிற பெட்டியா :)
   அது சரி ,ஏட்டிக்கு எதிரி நண்பன் தானே :)
   ரொம்ப சரிதான் :)
   அதில் ,இதை கண்டு பிடித்தது யார் என்று பெயர் இருந்ததா :)
   மிடில்கிளாஸ் மாதவனின் கவலைத் தீருமா :)

   Delete
 7. 1) நல்லவேளை!.. மயிலு தப்பிச்சது..
  2) கலந்துரையாடலாக இருக்குமோ?..
  3) சொன்ன மாதிரி செஞ்சுடணும்..
  4) காக்காவுக்கு என்ன கஷ்ட காலமோ?..
  5) அதானே.. கவலைகள் பலவிதம்!..

  ReplyDelete
  Replies
  1. தப்பிச்சது ,கொடுத்து வச்ச மெயிலா :)
   நாடு முன்னேறத் தேவைதான் ,இந்த கலந்துரையாடல் :)
   அதானே ,கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டாமா :)
   அதுசரி ,காக்காவுக்கு எது நவீன (?)கட்டணக் கழிப்பறை :)
   அதில் ,இது நவீனவிதம் :)


   Delete
 8. நகை மேல் வச்சா நகை லோன்ன... நாமக்கட்டி மேல வச்சு லோன் தருவாங்களா...????

  ReplyDelete
  Replies
  1. நாடு வல்லரசு ஆனதும் ,உங்கள் கோரிக்கை நிறைவேறும் :)

   Delete
 9. நகைப்பணி தொடரட்டும்
  தம +

  ReplyDelete
  Replies
  1. நகை சம்பந்தமான நகைப்பணிதானே :)

   Delete
 10. இந்த முறை கொஞ்சம் நகைகள் கூட....
  இனிமை
  (வேதாவின் வலை)

  ReplyDelete
  Replies
  1. நகை கூட நகைச்சுவையைத் தருதே :)

   Delete