5 January 2016

தாலியைக் கழற்றினா கணவன் ஆயுள் குறையுமா :)


ஜோக்காளியை மீண்டும் தமிழ் மண முதல்வன் ஆக்கிய வலைப்பூ உறவுகளுக்கு  நன்றி !

பெரியவங்களை இப்படியா மதிப்பது :)                 
             '' கடைக்காரர் எடை போடும்போது எடை மெஷினையே ஏன் பார்த்துகிட்டே இருக்கார் ?''
              ''ஆளைப் பார்த்து எடை  போடக் கூடாதுன்னு  பெரியவங்க சொல்லி இருக்காங்களே !''
தாலியைக் கழற்றினா கணவன் ஆயுள் குறையுமா :)

           ''என்னங்க ,தூங்கும்போது உறுத்துதுன்னு  தாலியைக் கழட்டி வைக்கிறேன் ,அதுக்கென்ன இப்போ ?''
            '' என் ஆயுள் குறைஞ்சுடுமோன்னு  மனசு உறுத்துதே !''

அம்மா அப்பாவைவிட அதிகம் பிடித்தது :)

                ''என் பிள்ளைக்கு ஐஸ் கிரீம் வாங்கித் 

தர்றதை குறைச்சுக்கணும்னு ஏன் சொல்றே ?''


                ''உனக்கு அம்மா பிடிக்குமா ,அப்பா 


பிடிக்குமான்னு கேட்டா ,ஐஸ் கிரீம்தான் பிடிக்கும்னு 


சொல்றானே !'
 1. அதிகம் பேசுறது கணவனா ,மனைவியா :)
           ''செல்போன்லே  அளவுக்கு அதிகமா 

பேசுறதை நிறுத்து !''

            
           ''இப்ப நீங்கதான் ,அளவுக்கு அதிகமா 

பேசுறீங்க ,போதும் நிறுத்துங்க !''

எந்த காரியத்தையும் மனம் லயித்து 

செய்யணும் :)

விருந்து சாப்பிடும் போது மருந்தை 

நினைக்காதே !


மருந்து சாப்பிடும்போது குரங்கை 


நினைக்காதே !


குரங்கு வெளியில் இருந்தால் விரட்டி விடலாம் 


மனதில் இருந்தால் விரட்டுவதும் ,தடுப்பதும் 


நம் கையில்தான் !

26 comments:

 1. சரிதானே..

  சுயநலமும் மூட நம்பிக்கையும்!

  வம்பில்லாத பையன்!

  பதிலுக்கு பதில்!

  அருமையான தத்துவம்.

  ReplyDelete
  Replies
  1. கருமமே கண்ணாய் இருக்கிறவரோ:)

   பெண்ணியவாதிகள் தாலி என்பதே மூட நம்பிக்கை என்கிறார்களே :)

   கொடுத்து வச்ச பெற்றோர்கள் :)

   நேரிலே பேசிக்கிறது கூட குறைஞ்சு போச்சு ,செல் வந்த பின்னாடி :)

   புல்லரிக்குதா:)

   Delete
 2. கடைக்காரர இனி யாரும் “இவரு என்னையே பாக்கிறாரு”ன்னு சொல்லமாட்டாங்க...!

  நா கட்டினத் தாலி ஒனக்கு எப்பவுமே உறுத்தலத்தான் இருக்கு...! நா போறேன் போ...!

  ஐஸ் வைக்கத் தெரியல...!

  செல்லுல யார்ட்ட பேசுறேன் தெரியுமா...? நீங்க அடிக்கடி செல்லற சக்காளத்திக்கிட்ட...! ரொம்பத்தான் பேசாதீங்க...!

  குரங்கு வெளியில் இருந்தால் விரட்டி விடலாம்... ஆனால் போகாது...! நினைத்ததை முடிக்கும்...!

  த.ம.1

  ReplyDelete
  Replies
  1. எடை போடற நேரத்தைத் தவிர ,மற்ற நேரத்திலும் யோக்கியமா இருந்தா பரவாயில்லை :)

   அவசரப்படாதீங்க ,அப்படின்னா பகல்லேயும் கழட்டி வைச்சு இருப்பாங்களே :)

   நல்ல பிள்ளைதானே :)

   உனக்கென்ன அவளோட பேச்சு ,நான் பேசுறது போதாதா :)

   விரட்ட முடியாது ,வராமல் தடுக்க கூடவா முடியாது :)

   Delete
 3. வாங்குபவர் ஆணா பெண்ணா.தூங்கும் போது தாலி மட்டும்தான் உறுத்துதா?உண்மையைத்தானே பையன் சொல்கிறான் யார் நிறுத்துகிறார்கள்?நம்கையில்தான் என்று நிச்சயமாகச் சொல்ல முடியுமா?

  ReplyDelete
  Replies
  1. யாராய் இருந்தாலும் ரேசனில் சீனி என்றால்,கிலோவுக்கு ஐம்பது கிராம் குறையத்தானே செய்கிறது :)

   வேறென்ன உறுத்தும்னு சொல்றீங்க :)

   பால் ஐஸ் வடியும் அறியாத பருவமாச்சே ,அவனுக்கு :)

   முடியாதுன்னு முடிவே பண்ணீட்டிங்களா :)

   Delete
 4. முதல்வனே.. வனே.. வனே.. வனே...
  தமிழ்மண முதல்வனே... !

  வாழ்த்துக்கள் நண்பரே

  "...மனதில் இருந்தால் விரட்டுவதும் ,தடுப்பதும் ..."

  நம் கையில்தான் !

  " அதுவும் அந்த குரங்கைவிரட்ட கோலும் உதவாது ! "

  நன்றி
  சாமானியன்

  ReplyDelete
  Replies
  1. அந்த பாடலைப் பாடிய ஹீரோ போலவே ,நானும் ஒரு நாள் முதல்வனாகி விட்டேன் :)

   Delete
 5. முதலில் மனமார்ந்த வாழ்த்துகள் ஜி என்றும் நீரே முதல்வராக இருக்கக் கடவது.

  01. வியாபாரத்துல இது வேறயா ?
  02. அப்படிப்பார்த்தால் எல்லா நடிகையும் விதவையாகத்தான் இருக்கணும்.
  03. குழந்தைக்கு பிடிச்சதைத்தானே சொல்ல முடியும்.
  04. அதானே.. இதுக்குப்போயி இவ்வளவு பேசலாமா ?
  05. உண்மை கருத்து ஜி.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கள் நன்றி சொல்லும் முன்பே பழைய இடத்துக்கு வந்து விட்டதே ,என்ன குழப்பமோ தமிழ் மணத்தில்:)

   அவர் கண்ணுக்குத் தெரியவில்லையே ,அலைபாய விடக்கூடாது என்று :)
   நடிகைகள் மட்டும்தான் இப்படி செய்வார்களா :)
   பெத்தவங்க புரிஞ்சிகிட்டா சரி :)
   இது செல் சண்டையா ,சொல் சண்டையா :)
   உங்களால் விரட்ட முடியுதா :)

   Delete
 6. ஹாஹாஹா! அனைத்தும் வெடிச்சிரிப்பு! முதல்வனானாதிற்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஒரு நாள் முதல்வனாக்கி விட்டார்களே :)

   Delete
 7. Replies
  1. மனம் லயித்து ரசீத்தீர்களா :)

   Delete
 8. Replies
  1. வாழ்த்துக்கு நன்றி :)

   Delete
 9. என்றும் தாங்கள் முதல்வராக இருக்க வாழ்த்துக்கள்ஜி ........

  ReplyDelete
  Replies
  1. ஜனநாயக நாட்டில் நிரந்தர முதல்வனாக இருக்க முடியாதே ஜி :)

   Delete
 10. முதலிடம் பிடித்ததற்கு வாழத்துகள் நண்பரே,
  த ம 8

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் முதலிடம் பிடிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை :)

   Delete
 11. நேற்றுவரை தங்கள் வலையின் மறுமொழி, மதிப்பெண் பட்டைள் இன்று வந்துவிட்டது!போட்டாச்சி இரண்டும்!

  ReplyDelete
  Replies
  1. மாற்றம் வந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே அய்யா :)

   Delete
 12. விருந்து சாப்பிடும் போது மருந்தை

  நினைக்காதே !

  மருந்து சாப்பிடும்போது குரங்கை

  நினைக்காதே !

  புதிதாக உள்ளது சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. வளைத்து கட்டி சாப்பிட்டு எக்ஸ்ட்ராவா ஒரு மாத்திரை போட்டுக்க நினைப்பவர்கள் பெருகி விட்டார்களே ,முரளிதரன் ஜி :)

   Delete
 13. எடை போடுறதில் நீங்க பெரிய ஆள் தான் பாஸ்:)ஒரு தொடர்பதிவில் உங்கள் பங்களிப்பை வேண்டுகிறேன். படித்துபாருங்க http://makizhnirai.blogspot.com/2016/01/travel-with-my-friends.html

  ReplyDelete
  Replies
  1. பயண அனுபவங்களை எடை போட சிறிது தாமதமாகும்,பரவாயில்லையா:)

   Delete