6 January 2016

மனைவிக்கு பின் கணவன் இருந்தால் :)

நேற்று ,ஜோக்காளியை 'தமிழ் மண ஒரு நாள் முதல்வன் 'ஆக்கிய வலைப்பூ உறவுகளுக்கு  நன்றி !

ஃபாஸ்ட் ஃபுட் ஏழைகள்  உணவா :)
                    ''நின்னுகிட்டு  ஃபாஸ்ட் ஃபுட்  சாப்பிட்டா ,உங்க தாத்தாவுக்குப்  பிடிக்காதா ,ஏன் ?''
                    ''அவர் ,ஏழு தலைமுறை உட்கார்ந்து சாப்பிடும்  அளவுக்கு சொத்தைக் கொடுத்துட்டு போயிருக்காரே !''

 வீடு பிடிக்காட்டி இப்படியுமா சொல்றது :)         
               
            ''நீங்க சொல்ற வாடகையிலே  இந்த  வீடுதான் கிடைக்கும்  ,உங்களுக்கு  பிடிக்குதா?''

        ''வீடா இது? பேசாம to let க்கு   பதிலா  toilet  னு போர்டுலே எழுதச் சொல்லுங்க !''   


இது கிட்ட பார்வையா ,கெட்ட பார்வையா :)

                 ''டெஸ்ட் எதுவும் பண்ணாமலே எனக்கு 

கிட்டப் பார்வை நல்லா இருக்குன்னு எப்படி 

கண்டுபிடிச்சீங்க  டாக்டர் ?''
             

             ''நர்ஸ் போற பக்கமெல்லாம்  உங்க பார்வை 

போறதை வைச்சுத்தான்!'' 

                                               
போதையில் மிதக்கலாம் (?) தியானத்தில் மிதக்க முடியுமா :)
                ''இன்ஸ்பெக்டர் சார் , என் வீட்டுக்காரரை காணலே ,கண்டுபிடிச்சு கொடுங்கன்னு மனு கொடுத்தா ஏன் வாங்க மறுக்கிறீங்க ?''
                         ''மொட்டை மாடியில் தியானம் பண்ணிக்கிட்டு இருந்தவர் ,அந்தரத்தில் பறந்து  போனதாச்  சொல்றீங்களே !''

 1. செத்த பிறகாவது நிம்மதியா இருக்க விடுங்க!
 2.                  ''தற்கொலைப் பண்ணிகிட்ட              
 3. சாந்தியோட  புருசன் லெட்டர்லே என்ன எழுதி 
 4. இருக்கிறார் ?''
 5.                      ''என் ஆத்மாகூட  சாந்தி 
 6. அடையணும்னு  யாரும் வேண்டிக்காதீங்கன்னு 
 7. தான் !''

 8. போட்டோவில்,மனைவிக்கு பின் கணவன் ...

 9. தம்பதிகள் போட்டோவிற்கு 
 10. 'டைட்டில் 'வைக்கும் போட்டி ...
 11. பரிசை வென்றது ..

 12.    'புயலுக்கு  பின் அமைதி '

 • 22 comments:

  1. 01. இவரு படுத்துக்கிட்டே சாப்பிடலாமே..
   02. இதுவும் தேவைதானே ஜி
   03. அவசரக் குடுக்கை நிதானமாக பார்த்திருக்கணும்
   04. பேயா...
   05. ஏற்கனவே சாந்தி கூட அடைஞ்சவன்தானே....
   06. ஸூப்பர்

   ReplyDelete
   Replies
   1. சாப்பிடலாம் ,தொண்டையில் இறங்குமா :)
    வீட்டில் டாய்லெட் இருக்கலாம் :)
    அடுத்தவங்களுக்குத் தெரியாம பார்த்திருக்கணுமா:)
    ஏன் சித்தரா இருக்கக்கூடாதா :)
    அதுவே ஏழேழு ஜென்மத்துக்கும் போதுமோ :)
    அமைதி நிரந்தரம் தானா :)

    Delete
  2. எல்லா ஜோக்ஸையும் கன்னா பின்னானு ரசிச்சேன் பாஸ்! தமிழ்மணம் நாங்கள் மீண்டும் நான்குக்கும், நீங்கள் இரண்டுக்கும் வந்துடுச்சு பாஸ்! ஒரே நாள் சந்தோஷம்!

   தம +1

   ReplyDelete
   Replies
   1. இதில் சூதுவாது ஏதும் இருக்குமா ,ஒரே நாளில் எப்படி மாறும் :)

    Delete
   2. ஜி சோலந்தூர் சோஸியர் சோனைமுத்துவிடம் குறி பார்ப்போமா ?

    Delete
   3. குறி பார்ப்பதெல்லாம் தற்குறிகளின் வேலையாச்சே :)

    Delete
  3. ‘சொத்தைத் தாத்தா’ எங்கிருந்தாலும் வாழ்க...!

   ஒரு எழுத்தில பெரிசா ஒன்னும் வித்தியாசம் பாக்காதீங்க...!

   தூரத்தில டாக்டர் மேடம் மெதுவா அசைஞ்சு அசைஞ்சு வர்றாங்க டாக்டர்...!

   அவர் பறந்து போனாறோ...? என்ன மறந்து போனாறோ...?

   எல்லோர் வாழ்விலும் தேடிடும் பாக்கியம் சாந்தி...!

   பூ ஒன்று புயலானது...!

   த.ம.2

   ReplyDelete
   Replies
   1. சொத்து தந்த தாத்தாவை இப்படியா சொல்வீர்கள் :)

    வித்தியாசம் எழுத்திலே இருந்தா பரவாயில்லையே:)

    தூரப் பார்வையும் ஓகே தானா :)

    மறந்து போன மூக்குப் பொடி டப்பியை எடுக்க வருவாரா :)

    அது இல்லாம பண்ணி விட்டானே வம்புப் பையன் :)

    புயல் மீண்டும் பூவாகுமா

    Delete
  4. Replies
   1. ஒரு நாள் முதல்வனைதானே :)

    Delete
  5. ஒருநாள் முதல்வர் செய்த சாதனைகளை மறக்கக்கூடாது....!!!

   ReplyDelete
   Replies
   1. நிரந்தர பதவி ஆசை இல்லாவிட்டால் தான் சாதனைகள் செய்ய முடியும்,அப்படித்தானே :)

    Delete
  6. ஏன் முதல்வன் பதவி போயிடுத்தா. ஃபாஸ்ட் ஃபூட் சாப்பிடத் தடையில்லை நின்று கொண்டு சாப்பிடக் கூடாது என்றுதானே கூறுகிறார் ஒரு எழுத்து விட்டுப் போயிருந்திருக்கும்நர்ஸ் கிட்ட வச்ந்தால் பார்த்துத்தானே ஆகவேண்டும் மனு கொடுத்தவர் போதையில் இருந்திருக்கலாம் சாந்தியின் ஆத்மா முன்னமே படித்ததுபுயல் அமைதி ரசித்தேன்

   ReplyDelete
   Replies
   1. பதவி என்றாலே அப்படித்தான் போலிருக்கு :)
    நிறைய ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் டேபிள் சேரே இல்லையே:)
    தரகர்தான் தவறுதலா காண்பிச்சிட்டாரோ:)
    இவர் போனாலும் பார்க்கிறாரே :)
    போதையில் இருந்தால் அடுத்தவர் பறப்பது போல் தோன்றுமா :)
    மறக்க முடியாத ஆத்மா போலிருக்கு :)
    அமைதியை ரசிப்பாதோர் யார் :)

    Delete
  7. ஜி தமிழ் மணம் நேற்று பலரையும் குழப்பி விட்டது முதலிடத்தில் இருந்தவரை நேற்று 26 வது இடத்துக்கு கொண்டு போய் இன்று மீண்டும் முதலிடத்துக்கு கொண்டு வந்து விட்டது ஏதோ கோளாறு இருக்கிறது.

   ReplyDelete
   Replies
   1. தமிழ்மணம் மர்மங்கள் விலகுமா என்று நண்பர் முரளிதரன் ஜி இன்று ஒரு பதிவு போட்டிருந்தார் .
    # தமிழ் வலைப்பதிவுகளின் தர வரிசை (Traffic Rank) கடந்த மூன்று மாதங்களில் ஒவ்வொரு பதிவும் பெறும் பார்வைகளை (ஹிட்ஸ்) முதன்மையாகக் கொண்டு வெளியிடப்படுகிறது. மறுமொழிகள், வாசகர் பரிந்துரை வாக்குகள் போன்றவையும் ஒரு காரணியாக இருக்கும்# இது தமிழ்மண தர வரிசைக்கான காரணிகள் எதையும் விமர்சனம் தளம் பெறுவதாக தெரியவில்லை ,அந்த தளத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் வெளிப்படையான கேட்ஜெட்டும் இல்லை .எப்படித்தான் அது முதலிடத்தில் இருக்கிறதோ ?இதுவும் மர்மமாய்தான் இருக்கிறது :)

    Delete
  8. வாழ்த்துக்கள் நண்பரே

   ReplyDelete
   Replies
   1. உங்கள் வாழ்த்தை அட்வான்ஸ் வாழ்த்தாக எடுத்துக் கொள்கிறேன் :)

    Delete
  9. சிறப்பான சிரிப்புக்கள்! சிரித்து மகிழ்ந்தேன்! நன்றி!

   ReplyDelete
   Replies
   1. உங்களின் மகிழ்வே எனக்கும் மகிழ்ச்சி :)
    தமிழ்மணத்தில் விடுபட்ட உங்கள் தளம் விரைவில் சேர்க்கப் பட வேண்டும் என்பதே என் விருப்பம் !

    Delete
  10. அனைத்தும் சுவைத்தேன்!

   ReplyDelete
   Replies
   1. புயலுக்கு பிந்திய அமைதியையும் தானே :)

    Delete