7 January 2016

நடிகை ஸ்ரீதேவியை அழகியென்று கூறக் காரணம் :)

 விந்தையான உலகம் இது :)

               ''என்ன சார் சொல்றீங்க ,இந்த உலகத்தை புரிஞ்சிக்கவே முடியலியா ?'' 
                 ''கஷ்டப் பட்டு நடக்கும் போது யாரும் லிப்ட் தர மாட்டேங்கிறாங்க,இஷ்டப் பட்டு வாக்கிங்  போனா ,வலிய வந்து லிப்ட் தர்றாங்களே !''

ஆமை புகுந்த வீடும் ,அ . மீனா  புகுந்த வீடும் உருப்படாதா :)               

                  ''மீனாங்கிற என்  மகளோடப் பெயரை மாத்தினாதான், அவளுக்கு புகுந்தவீட்டுக்குப் போற யோகம் வருமா ,ஏன் ?''
                ''உங்கப் பெயர் ஆனாவிலே ஆரம்பிக்கிறனாலே அபசகுனமா நினைக்கிறாங்களே !''தரகர் சொன்னதும் பொய்யே பொய்யே :)

                ''பொண்ணுக்கு  காது சரியா கேட்காதுன்னு ஏன் முன்னாடியே சொல்லலே?
               ''எள்ளுன்னா எண்ணெயா நிற்பானு  சொன்னேனே!''

நடிகை ஸ்ரீதேவியை அழகியென்று கூறக் காரணம் :)

முந்தைய தலைமுறையினருக்கு கனவுக் கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவியை  ...
அழகி  என்று சொன்னால் யாருக்கும் மாற்று அபிப்பிராயம் இருக்கமுடியாது  ...
இந்தியாவின்  கனவுக்கன்னியான அவரைப் பற்றி ...
நம் இந்திய எந்த மாநில கல்விக்கூட புத்தகங்களிலும் குறிப்பு இருக்கமுடியாது  ...
தமிழின விரோத சிங்கள அரசு ...
சிங்கள மாணவர்களுக்காக வெளியிட்டுள்ள ஏழாம் தரத்திற்கான பாடப் புத்தகத்தில் ...
'தமிழச்சி ஆனாலும் ஸ்ரீதேவி அழகானவள் 'என்று குறிப்பிட்டு உள்ளதாம் ...
இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது ...
அழகு என்பது ஜாதி ,மதம்,இனம் .மொழி கடந்து ரசிக்கப் படுவது என்றாலும் ...
இதை இந்த நேரத்தில் சிங்கள அரசு பதின்ம வயதினருக்கான பாடப் புத்தகத்தில் ... சொல்லவேண்டிய காரணம் என்னவாக இருக்கும் ?
அதுவும் தமிழச்சி என்று இனத்தைக் கூறிக் கொக்கரிப்பதாகவே தெரிகிறது !

 1. நாட்டுலே இப்படியும் சில ஆராய்ச்சியாளர்கள் இருக்காங்க :)


பாம்புச் சட்டை  என்ன பிராண்ட் ,என்ன சைஸ் என்று 
ஆராய்பவன்தான் ...
மயிர் பிளக்கும்  ஆராய்ச்சியாளன் !

24 comments:

 1. இல்லாதவனுக்கு சாப்பாடு கிடைக்கலை...! இருக்கிறவன எதுவும் சாப்பிடக்கூடாதிங்கிறாரு மருத்துவரு...! விந்தையான உலகம் இது...!

  மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா...தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா! ஒனக்குன்னு ஒருத்தன் இனிமேலா பிறக்கப் போறான்...! குணம் குப்பையிலே... பணம் பந்தியிலே...!

  எள்ளுன்னா எண்ணெயா நிற்பான்னு சொன்னது சரி...! நல்ல எண்ணெயா நிற்பாங்களான்னு அதச் சொல்லலையே...!

  செந்தூரப்பூவே செந்தூரப்பூவே சில்லென்ற காற்றே...என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே? நீ கொஞ்சம் சொல்லாயோ என்று கேட்டுத் தெரிந்து வடநாட்டிற்குப் போன 'தமிழச்சி ஆனாலும் ஸ்ரீதேவி அழகானவள் ' என்பது ‘ஆனாலும்...’ இழிவு சிறப்பும்மை... இலங்கையின் இழிவைக் காட்டுகிறது!

  பாம்பின் சட்டை பாம்பறியும்...!

  த.ம.1


  ReplyDelete
  Replies
  1. இருப்பவன் தரவும் மாட்டேங்கிறான் ,பசிட்டவும் விடவும் மாட்டேங்கிறானே:)

   அமீனாவுக்கும் ஒரு நாயகன் வந்துதானே ஆகணும்:)

   விளக்கெண்ணையா நிற்காமல் போனால் சரி :)

   இழிவு சிறப்பும்மை...நான் சொல்ல விரும்பிய உண்மையும் அதுதான் :)

   அதன் சைசையும் அதுதான் அறியும் :)

   Delete
 2. அனைத்தையும் ரசித்தேன், சிரித்தேன் ஜி!

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் தெரியுமே ,அந்த மயிர் பிளக்கும் ஆராய்ச்சியாளன் யாரென்று :)

   Delete
 3. Replies
  1. வாக்கிங் போகையில் வண்டியில் ஏறிக்குங்க என்று யாராவது அழைத்தால் எரிச்சல் வருமா வராதா ஜி :)

   Delete
 4. ந டி கை ஸ்ரீ தே வி அழகீயா....???? :

  ReplyDelete
  Replies
  1. கூகுள் ஆண்டவருக்கு அடுக்காது உங்க கேள்வி,அதனால்தான் இதை மூன்றாவது முயற்சியில் சொல்ல முடிந்து இருக்கிறது :)

   Delete
 5. அனைத்தும் அருமை,

  பாம்பு சட்டை கலர் செலக்கஷன் நீங்களா?

  ReplyDelete
  Replies
  1. இல்லை ,ஸ்டிச்சிங் மட்டுமே நான் :)

   Delete
 6. கிடைத்தபோது பயன் படுத்த வேண்டியதுதானே வாக்கிங் பின்னே போய்க் கொள்ளலாம் இதையெல்லாம் நம்பினால் பெயரை மாற்றி விட வேண்டியதுதான் தரகர் சொன்னது மெய்யே மெய்யே.ஆமாம் ஸ்ரீதேவி தமிழச்சியா . இருந்தாலும் இதையெல்லாம் கூறி எல்லோருக்கும் தெரியப்படுத்த வேண்டுமா?நீங்கள் எந்தவகை

  ReplyDelete
  Replies
  1. இப்படி எல்லாம் தொந்தரவு வரும் என்றுதான் வீட்டிலே 'த்ரெட் மில் 'சாதனத்தில் நடக்கிறார்களோ :)
   அப்பன் பெயரையா ,பெண்ணின் பெயரையா :)
   தரகருக்கு தானாய் வருவதும் பொய்யே பொய்யே :)
   அய்யா நான் தெரிவிக்கவில்லை ,சிங்கள அரசு தெரிவிக்கிறது :)
   ஹிஹி ,உங்களுக்கும் தெரியுமே :)

   Delete
 7. 01. இது குழப்பமான உலகம்தான் ஜி
  02. நடிகை மீனாவை என்ன செய்வது
  03. எதையுமே விலாவாரியாகவா சொல்லமுடியும்
  04. இது பாராட்டுவதாக தெரியவில்லையே ஏதோ உள்குத்து மாதிரிதான் இருக்கின்றது ஜி
  05. விஞ்ஞானிதான்.

  ReplyDelete
  Replies
  1. நாம் இருக்கிற உலகம் வேறு எப்படி இருக்கும் ஜி :)
   புருஷன் பெயரின் முதல் எழுத்தைப் போட்டுக்க சொல்வோம் :)
   விலாவாரியா சொன்னா எத்தனை பேருக்கு கல்யாணமாகும் :)
   ஆனாலும் என்பது இன விரோத வார்த்தைதானே :)
   விசித்திர விஞ்ஞானியா :)

   Delete
 8. அனைத்தும் ரசித்தோம் ஜி..

  ReplyDelete
  Replies
  1. கில்லர்ஜிக்கு சொன்ன நம்பர் ஒன் மறுமொழியை சேர்த்து ரசீங்க ஜி :)

   Delete
 9. Replies
  1. அழகி ஸ்ரீ தேவியையும் தானே :)

   Delete
 10. பகவான்ஜீ இந்தியாவில் உள்ள எல்லா மாநில கல்வி பாடபுத்தகங்களிலும் அழகிய தமிழிச்சி ஸ்ரீதேவி என்ற குறிப்பை கொண்டு வந்திடுவார் போல் தெரிகிறதே :)

  ReplyDelete
  Replies
  1. தெரிவதென்ன ,ஸ்ரீதேவி என்றால் நீண்ட நாளாய் வராத நரிகூட வேகமாய் வருதே :)

   Delete
 11. Replies
  1. தரகர் சொன்னதையுமா :)

   Delete