28 January 2016

காதலுக்கு எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க:)

காசைக் கறக்க வழியா ,இந்த வலியும் :)          
          '' தலைவர் மாலை எல்லாம் வேண்டாம்னு சொல்றாரே , அவ்வளவு தன்னடக்கமா ?''
            ''அடநீங்க வேற ,அவருக்கு கடுமையா  கழுத்து வலிங்க !'
மாமியாருக்கு 'முதல் மரியாதை ' செய்யும்  மருமகள் :)
               ''புதுசா வாங்கின கேமரா செல்போனில்  ,முதலில் எங்க அம்மாவைப் போட்டோ  எடுத்து வைத்துக்கச் சொல்றீயே ,அம்புட்டு பாசமா ?''
           ''அட நீங்க வேற ,திருஷ்டி கழியும்னு சொல்ல வந்தேன் !''

முதுமை கஷ்டம்தான் ,அதுக்காக இதை பயன்படுத்தலாமா :)

     ''டாக்டர் ,கஞ்சா அடிமைகளுக்கு முதுமை வராதுன்னு 
எப்படி சொல்றீங்க ?''
            ''கொஞ்ச வயசுலேயே போய் சேர்ந்துடுவாங்களே !''

 1. காதலுக்கு எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா :)

              ''தினமும் நாய் துணையோடு வாக்கிங் வர்ற பொண்ணைக்  
 2. காதலிக்க, நீயும் ஒரு நாயோட போனீயே ,காதல் வந்ததா ?''
 3.                  ''ஓ ,வந்ததே ...ரெண்டு நாய்ங்களுக்கும் !'' 

22 comments:

 1. கடைசி இரண்டையும் சற்றே அதிகமாக ரசித்து தம வாக்கிட்டேன்!!!

  ReplyDelete
  Replies
  1. அந்த நாய்ங்க காதலுக்கு இவங்க ரெண்டு பேரும் தூது வந்தார்கள் போலிருக்கே :)

   Delete
 2. எப்படினாலும் கடைசியில போடத்தானே போறீங்க...!

  திருஷ்டி சுத்திப் போட வேண்டியதில்லல்ல...!

  மக்கள் தொகையக் கட்டுப்படுத்த இதச் செய்யலாமே...!

  ரெண்டுகால் நாய்களுக்கு அதனால் மோதல்தான் வந்ததா...! மோதலில் தொடங்கி காதலில் முடிவது சகஜம்தானே...!

  த.ம. 2

  ReplyDelete
  Replies
  1. அப்போ அவர் அதை தூக்க வேண்டியிருக்காதே ,அவரைத் தூக்க நாலு பேர் வேண்டியிருக்குமே :)

   நீங்க மருமக சைடு போலிருக்கே :)

   ரேசன்லே தேயிலைக்குப் பதிலா இதை தலையில் கட்டி விடலாமா :)

   நாய்ங்க காதல் முறியவே இல்லைன்னு சொன்னாங்க:)

   Delete
 3. கஞ்சா.... :(((

  நாய்களுக்கு வந்த காதல்! :)))

  அனைத்தும் ரசித்தேன். த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. சாவுக்கு அஞ்சாத கஞ்சாச் சிங்கமாச்சே அவர் :)

   இந்த காதலை எந்த நாயும் பிரிக்க முடியாதில்லே :)

   Delete
 4. Replies
  1. பூ மாலையை சுமக்க முடியாதவர் எப்படி ஆட்சிப் பொறுப்பை எப்படி சுமப்பாரோ :)

   Delete
 5. Replies
  1. முதல் மரியாதையைதானே :)

   Delete
 6. 1) கழுத்து வலி.. அப்படின்னாலும் வசூல் வேட்டையை விடக்கூடாது!..
  2) அந்தப் பொண்ணோட அண்ணன் - இதே மாதிரி திருஷ்டி கழித்ததாகக் கேள்வி!..
  3) கஞ்சா இல்லேன்னாலும் - இப்போதெல்லாம் சீக்கிரமே டிக்கெட் தயார்!..
  4) காதலுக்கு மரியாதை!..

  ReplyDelete
  Replies
  1. மாலைக்குப் பதிலாய் பணத்தைக் கேட்டிருப்பாரோ :)

   அந்த கேள்வியின் பதில் இப்போ புரியுது :)

   டாஸ்மாக் இருக்க கவலை எதுக்கு :)

   நாலு பொறை பிஸ்கட் வாங்கிப் போட்டு வாழ்த்துவோமா :)

   Delete
 7. ரெண்டும் ஆண் நாயாக இருந்திருந்தால் காதல் கந்தலாகி இருந்திருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. அது சரி ,ஓரினச் சேர்க்கை ,ஆறறிவுள்ள மனிதனுக்கு மட்டுமே உரிய தனிப் பெருமையாச்சே :)

   Delete
 8. ஹாஹாஹா! நோட்டு மாலை போட்டிருந்தா கழுத்துவலி குறைஞ்சு போயிருக்குமே? 2. திருஷ்டி இப்படியெல்லாம் கழிக்கிறார்களா? 3. உண்மையை சொல்லியிருக்கீங்க! 4. ஹிஹி! ஆடி மாசமோ?

  ReplyDelete
  Replies
  1. நோட்டு மாலைதான் குறிப்பாலே உணர்த்துகிறாரோ :)
   மருமகளிடம் கேட்டுப் பாருங்க :)
   கஞ்சாமல் ..சீச்சீ...அஞ்சாமல் சொன்ன உண்மை இது :)
   மனுஷனுக்கு வருஷம் முழுவதும் ஆடிதான்,இந்த விஷயத்தில்:)

   Delete
 9. 01. அதுக்குப் பதிலான செலவை கேட்காமல் இருந்தால் சரி
  02. அவசியம் செய்ய வேண்டியதுதான்
  03. இவரு விஞ்ஞானியாகி இருக்KALAM
  04. இதுதான் நாய்க்காதலோ ?

  ReplyDelete
  Replies
  1. அவர் ஏன் கேட்கிறார் ,அவருக்குப் போகத்தானே .....:)
   தாய்ப் பாசம் விடுமா :)
   மருத்துவ உலகம் ஒரு ஞானியை இழந்து இருக்குமே :)
   வீட்டு நாய்ங்க இப்போதானே வெளியே வருது :)

   Delete
 10. Replies
  1. காதல் வந்ததே நன்று தானே அய்யா :)

   Delete
 11. கஞ்சா.....

  நாய்களின் காதலை ரசித்தோம் ஜி....

  ReplyDelete
  Replies
  1. காலமெல்லாம் காதல் வாழ்க என்று வாழ்த்துவோமே :)

   Delete