11 February 2016

மனைவிக்கு புரியும்படி சொல்ல வேண்டாமா :)

 நல்ல வேளை,மச்சம் இங்கிருந்தது :)          
                   ''பல் வலின்னு வந்துட்டு,முதுகுலே இருக்கிற மச்சத்தை எதுக்கு காட்டுறீங்க ?''
                  ''டாக்டர் கிட்டே எதையும் மறைக்ககூடாதுன்னு  சொன்னாங்களே !''

 1. 'மானிட்டர் 'அடிமைகளா இவர்கள் :)
               ''என்னடி சொல்றே ,உன் வீட்டுக்காரருக்கும் ,பையனுக்கும் 'மானிட்டர் 'தோஷமா  ?''
                  '' மானிட்டர்  பாட்டிலைக்  குடிச்சுக்கிட்டு அவரும்   ,லேப்டாப் மானிட்டரை பார்த்துகிட்டு பையனும்  இருந்தா ,அதுதானே அர்த்தம் ?''
  மனைவிக்கு புரியும்படி சொல்ல வேண்டாமா :)
                   ''வாசல்லே எலக்ரீசியன்  வந்து 'எந்திரம் சிங்கிள் பேஸா ,
  திரீ பேஸான்னு 'கேட்கிறான் ...ஒண்ணுமே புரியலே ,நீ வரச் 
  சொன்னீயா ?''
             ''அட நீங்கதானேங்க,ஆர்டர் செய்த குபேர 'எந்திரம்' இன்னைக்கு 
  வந்தவுடனே மாட்டணும்னு சொன்னீங்க !''

  புலவர் பைத்தியமானது உண்மையா  :) 
                     ''உன் தாத்தாவுக்கு மாத்திரையால் 'சைடு எப்பெக்ட்'ஆயிடுச்சா ,என்ன  செய்றார் ?''
                       ''மாத்திரையைப் பார்த்து 'மாத்திரே ,நீயுமா என்னை ஏமாத்திறே 'ன்னு பைத்தியமா புலம்புறார் !''
                                                       
  ஸ்டெதஸ்கோப்புடன் இன்றும் சில 'DOG'டர்கள் :)
 2. பெண் நோயாளிகளை 'தொடக் ''கூச்சப்பட்டு ஸ்டெதஸ்கோப்பை கண்டு பிடித்தாரே ...
 3. அந்த  டாக்டரை  'தொட்டுக் 'கும்பிடத் தோன்றுகிறது ...
 4. இன்று ,வரம்பு மீறும் சில டாக்டர்களைப்  பார்க்கையில் !

16 comments:

 1. நல்லவேளை...!

  பாசமான அப்பா பிள்ளையா? வாசமான அப்பா பிள்ளையா!

  அம்புட்டு அப்பாவியா அவிங்க!

  புலம்பர்!

  ஹிஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. புரிஞ்சா சரி :)

   இப்போ பாசம் ,இன்னும் சில நாளில் வாசம் :)

   அவங்க பார்க்கிறது சீரியல் மட்டும்தானே :)

   ஆகா ,உங்க கற்பனை நயம் மெய்சிலிர்க்க வைக்கிறது :)

   சிரிச்சிட்டுப் போற விசயமா இது :)

   Delete
 2. பாஞ்சாலி அது என்ன மச்சமா... வச்சுக்கோ... ஒன்னோட திறந்த மனசுக்கு என்ன மாதிரி ஒரு நல்ல மாப்பிள அமைவாரு... ஒங்க மனசு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு...!

  அப்பவே.. அவரு... ஸ்கூல்ல மானிட்டரா இருந்தவருன்னு சொன்னப்பவே யோசிச்சு இருக்கனும்...! இந்த தோஷத்த கழிக்க ‘டீச்சர்’ இருக்கான்னு பாரு... நமக்கு டீச்சர்தான் லாயக்கு... இந்த மானிட்டர் தோஷம் வேண்டாம்...!

  குபேர 'எந்திரம்' வித்தவன் குபேரனாகி ‘ஆடி’யில போயிட்டு இருக்கான்... அத வாங்கின நம்ம வாழ்க்கை ஆட்டங்கண்டு ‘பிச்சைக்காரன்’ படம் பார்க்க வேண்டியதுதான்...!

  மாத்திரையில் கூட A மாத்திரை இருக்கா...?

  எனக்கொரு உண்மை தெரிஞ் சாகனும்...டாக்டர் நீங்க ஏன் ஸ்டெதஸ்கோப்பை எப்பவுமே எடுக்கிறதே இல்லையோ... நீங்க என்ன நாடி வைத்தியரா...? இல்ல நாடும் வைத்தியரா...?

  த.ம.3


  ReplyDelete
  Replies
  1. பல் வலி போய் திருகு வலி வந்திடும் போலிருக்கே :)

   டீச்சர்தான் லாயக்கா ? டி சரட்டைப் பிச்சிக்கணும் போலிருக்கே :)

   அவன் 'ஆடி'யிலே போறான்னா ,அவனுக்கு ஆடுற மாட்டிடம் ஆடிக் கறக்கத் தெரியுதே :)

   வயாகரா என்ன ஜெம்ஸ் மிட்டாயா :)

   நாடி வைத்தியரும் இல்லை ,நாட்டு வைத்தியரும் இல்லை ,ஜெயில் கம்பியை நாடும் வைத்தியர் :)   Delete
 3. Replies
  1. திரீ பேஸ் குபேர எந்திரம் உங்களுக்கு பிடிக்காதே :)

   Delete
 4. 01. நல்லவேளை மச்சம் முதுகோட போச்சு.
  02. எல்லாம் விஞ்ஞான வளர்ச்சிதான் காரணம்
  03. எல்லாம் சோசியம் படுத்தும்பாடு
  04.. அதைக் குணப்படுத்த ஒரு மாத்திரை கொடுக்கலாமே..
  05. அருமை ஜி

  ReplyDelete
  Replies
  1. மிச்ச மச்சம் எங்கேன்னு அவரே ஆராய்ச்சி பண்ணிக்கட்டும் ,நமக்கெதுக்கு :)
   சோம பானம் என்ன இன்று தோன்றியதா :)
   சோழந்தூர் சோசியருக்கு வந்த வாழ்வு :)
   கொடுக்கலாம் ,அவர் சாப்பிடணுமே :)
   முதலும் முடிவும் ஒண்ணுபோல் இருக்கே :)

   Delete
 5. மச்சம் - வரம்பு மீறும் டாக்டர்கள்,
  மாத்திரைப் புலம்பல்,..என்று ஒரே சிரிப்பு சகோதரா
  நல்ல நகைச் சுவையெனச் சொல்லவும் வேண்டுமா! அருமை....
  நன்றி.
  (வேதாவின் வலை)

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்தைப் பார்த்த பின்தான் தெரிகிறது ,இன்றைய பதிவில். மருத்துவமே மேலோங்கியிருக்கிறது :)

   Delete
 6. அதனால் தான் கண்டுப்பிடிச்ங்களா??,

  அது சரி பையன் வாசம் ஆகாமல் இருக்கட்டும்,,

  அனைத்தும் அருமை ஜீ,,,

  ReplyDelete
  Replies
  1. ரினே தியோஃபில் ஹையஸிந்த் லென்னே..இது ஸ்டெதாஸ்கோப்பை 1781ல் கண்டு பிடித்த பிரஞ்சு டாக்டரின் பெயர் ,அவர் அப்படித்தான் சொல்லி இருக்கிறார் :)

   எல்லோர் பிரார்த்தனையும் அதுவே :)

   Delete
 7. வணக்கம்
  ஜி
  முதலாவதும் இரண்டாவதும் மிக அருமையாக உள்ளது இரசித்தேன் ஜி.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மானிட்டர் உள்ளே போனால் ,பல்வலி மட்டுமல்ல.பல வலிகளும் பறந்து போகும் என்பது உண்மையா :)

   Delete
 8. Replies
  1. விவரமாய் இருந்தா தப்பா :)

   Delete