2 February 2016

திரைப்படக் கதை மொக்கையானால் ...:)

  சரியாய் தானே சொல்லியிருக்காங்க பழமொழியை :)                        
                        ''பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்னு சொல்றாங்களே ,அது என்னைக்கு ?''
                        ''போலீசுக்கு மாமூல் தராத அன்னைக்குத்தான் !''
       

ஒரு நாய் குரைத்தால் .....:)
           ''நான் இங்கே நாய் மாதிரி கத்திக்கிட்டே இருக்கேன் ,பியூன் எங்கேயா போனான் ?''
              '' வாசல்லே வந்து  குரைச்சுக்கிட்டிருக்கிற நாய்களை விரட்ட போயிருக்கான் ,சார் !''

திரைப்படக் கதை மொக்கையானால் ...:)

           ''இடைவேளை  நேரத்தில்  கோன் ஐஸ் ,பாப் கார்ன்  எதுவுமே விற்க மாட்டேங்குது ,ஜிஞ்சர் ட்ரிங்க்ஸ் மட்டும் அதிகமா சேல்ஸ் ஆகுதே ,ஏன் ?''

          ''இந்த படத்தின் கதையை ஜீரணிக்கவே முடியலையாம் !''
 1. 'குடி'மகன்களுக்கு கருப்பு தினம்,நமக்கு நல்ல நாள் :)

              ''காந்தி ஜெயந்தி ,மகாவீரர் ஜெயந்தி ,வள்ளுவர் தினம் ,வள்ளலார் தினம் என்னைக்கு வருதுன்னு கேட்டா ,நொடியிலே சொல்றீங்களே ...அவங்க கொள்கை உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா ?''
 2.                 ''அட அது இல்லீங்க ,அன்னைக்கு எல்லாம்  டாஸ்மாக் கடை லீவாச்சே,முதல் நாளே சரக்கு வாங்கி ஸ்டாக் வச்சுக்கிறது என் வழக்கம்,அதான் !''
  1. ஜாக்கி சானைதான் எல்லோருக்கும் தெரியும் :)

  2.                  ''உங்க நண்பர் ஜானை ஏன் 'பாக்கி ஜான் 'னு சொல்றீங்க ?''
  3.              ''கடனோ ,கைமாத்தோ  வாங்கினா முழுசா திருப்பித் தர மாட்டாரே !''
 3.  

20 comments:

 1. 1. ஹா... ஹா... ஹா...

  2. ஹா.... ஹா.... ஹா...

  3. ஹா.... ஹா.... ஹா...

  4, அடப்பாவிங்களா...

  5. நல்ல டெர்ம்.

  ReplyDelete
  Replies
  1. அடப் பாவிங்களா ,அந்த நல்ல நாளில் கூட குடிக்காம இருக்க முடியாதா :)

   அப்படியே இருந்து பெயரைக் காப்பாற்றிக் கொள்ளட்டும்:)

   Delete
 2. மாமூல் வாங்கிற திருடனும் இன்னக்கி மாட்டிக்கிட்டாரு...! ஒங்களுக்குத் தெரியாம செல்லுல படம் பிடிச்சிட்டேனே...! இதோ ‘வாட்ஸ்அப்’ல போயிக்கிட்டு இருக்கு...! நீங்க எங்கேயோ போகப் போறீங்க...!

  ‘நாய்கள் ஜாக்கிரதை...’ போர்டு வச்சிட வேண்டியதுதான்...!

  குலோப்ஜாமுன் ஜீரணியோட வச்சிட வேண்டியதான்னு சொல்ல வந்தா... இதுக்கு இஞ்சி திண்ணது... மாதிரி ஏன் முறைச்சு பாக்குறீங்க...!

  அவுங்களுக்கென்ன சொல்லிட்டுப் போயிட்டாங்க... ஒரு நாள் மதுவிலக்க அமல்படுத்தினா... அவஸ்தபடுறது எங்களுக்குத்தானே தெரியும்... அன்னைக்கு அரசாங்கத்துக்கு எவ்வளவு நட்டம்...?

  நா என்னங்க பண்ணறது... ஜான் ஏறுனா முழம் வழுக்குது...! இனி ஜாக்கியத் திருடியாவது என் பாக்கிய திருப்பித் தரப் பாக்கிறேன்...! அந்த பாக்கியமாவது கிட்டுமான்னு பாப்போம்...!

  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. வீரதீர விருதுக்கு பெயர் போய்கிட்டு இருக்கோ :)

   ஆபிஸ் வாசலையுமா :)

   ஜீரணிக்க அதான் சிறந்தது :)

   நாங்க தள்ளாடனும்,இல்லேன்னா ,அரசு தள்ளாடிடும்:)

   பாக்கி ஜான் ,ஜாக்கித் திருடன் ஜான் ஆகப் போறாரோ :)

   Delete
 3. கடந்த பல நாட்களாக
  இணைய இணைப்பின் ஒத்துழையாமையால்
  தங்களின் பல பதிவுகளைப் பார்க்காமல்
  விட்டிருப்பேன் எனஎண்ணுகின்றேன்
  இனி தொடர்வேன் நண்பரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. ஹைய்யா ,இனி துன்பமில்லை ,துயரமில்லை:)

   Delete
 4. ஆம் சரியாத்தான் சொல்லி இருக்காங்க பழமொழியை....:)))).. பழமொழி பலதுக்கும் பொருந்துகிறதே....!

  ஒரு நாய் குரைத்தால் பல நாய்கள் குரைக்கத்தானே செய்யும்:))

  :)))))

  கலி....

  பாக்கி ஜான்னு சொல்லியாவது பாக்கியை வசூலித்தாரா....?

  தம +1

  ReplyDelete
  Replies
  1. பழமொழி சொன்னவர்கள்கூட ,இப்படி பொருந்தும் என்று நினைத்து பார்த்திருக்க வாய்ப்பில்லை :)

   அதுங்களுக்கும் வேலை வேணுமில்லே :)

   ஜீரணிக்க முடியுதா :)

   முற்றிப் போயிடுச்சு :)

   தலைகீழா நின்னாலும் முடியாதே :)

   Delete
 5. பாக்கி ஜான்... :)))

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. உங்க ஆபீசிலும் ஒரு பாக்கி ஜான் இருப்பாரே :)

   Delete
 6. அதிகமான் காசுகொடுத்து படத்துக்கு போனா... இப்படித்தான் இஜிரணம் எல்லாம் வந்து சேரும்...

  ReplyDelete
  Replies
  1. டென்ட் கொட்டகையில் கூட டிக்கெட் விலைக் கூடிப்போச்சே :)

   Delete
 7. ஜிரணம் ஆகாத படம்,,, நல்லா யோசிக்கிறீங்க ஜீ,,

  ReplyDelete
  Replies
  1. கிளைமாக்ஸ் புரியாமல் ஜிஞ்சர் தின்ன மங்கி மாதிரி முழித்தது ,வேறு கதை :)

   Delete
 8. மாமூல் தராத திருடன் அகப் (பிடி)படுவான் மிகச்சரி.உள்ளே நாய் மாதிரிக் குரைப்பவரை யார் விரட்ட? அடாத மொக்கையானாலும் விடாது படம் பார்ப்போர் தயவில் ஜின்செர் ட்ரிங்க்ஸ் நல்ல விற்பனை என்ன ஜெயந்தி ஆனால் என்ன குடிமகனுக்குத் தெரியும் ஸ்டாக் வைத்துக் கொள்ள.ஜாக்கி ஜான் பாக்கி ஜான் நல்ல ஒப்பீடு

  ReplyDelete
  Replies
  1. போலீஸ் ஸ்டேஷன்லே எழுதி போட்டு விடலாமா :)
   அதுவா ,குரைப்பை குறைத்துக் கொள்ளும் :)
   இதைதான் ,தென்னையில் தேள் கொட்டினால்......:)
   இப்படியாவது காந்தி ஞாபகம் இருக்கே :)
   கொடுத்து ஏமாந்த அனுபவம் :)

   Delete
 9. 01. இந்தப் பழமொழி இவங்களுக்குத்தானா ?
  02. ரெண்டும் ஒண்ணா ?
  03. இதுதான் படம்
  04. நினைவில் நிற்பதே பெருமைதான்.
  05. கடன்காரனா ?

  ReplyDelete
  Replies
  1. அவங்களுக்குதானே பொருத்தமாயிருக்கு,இதிலே ஏன் வருத்தமாயிருக்கு :)
   கால் மட்டுமே வித்தியாசம் :)
   பப்படம் :)
   அதுவும் குடிகாரனுக்கு :)
   அரைகுறைக் கடன்காரன் :)

   Delete
 10. ஹஹ்ஹ...
  ஹஹஹ
  ஜிஞ்சர் ட்ரிங்க் ஜீரணிக்க ஹஹஹ் செம..
  பாவிங்க திருந்த மாட்டாங்க
  பாக்கிஜான் ஹஹஹ் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. அந்த டிரிங்க் ஓகே தானே :)
   திருந்த நினைச்சாலும் அரசு விடாது :)
   உங்களுக்கு ஏதும் அவர் தரவேண்டியிருக்கா :)

   Delete