20 February 2016

'கை கழுவுறது ' நடி'கை'கள் மட்டும்தானா ?

 இப்படி வாழ்நாளை ஈடு கட்டலாமா :)          
                   ''தம் அடித்ததும் ,ஜோக் படிச்சு சிரிக்க ஆரம்பித்து விடுறீங்களே ,ஏன் ?''  
                 ''சிகரெட் குடிச்சா  ஆயுள்  குறையுமாம் ,சிரிச்சா ஆயுள் கூடுமாமே !''
கொசு ஏமாறாது ,நாமதான் ஏமாறுவோம் :)
             ''கொசு விரட்டி லிக்யூட் தீர்ந்து போச்சு  ,வார்னிங் லைட்டாவது  எரியட்டும்னு ஆன் பண்ணி வைச்சேன் !''
                   ''கொசு ஏமாந்து போச்சா ?''
                   ''என்னையா ஏமாத்துறேன்னு  இரண்டு மடங்கா பிடுங்கி எடுத்துருச்சி  !''
கணவன் குறட்டை விடும்போது கண்டுபிடிச்சது :)
              ''கரடி தூங்குறப்போ மனுசனை மாதிரியே குறட்டை விடும்னு இப்போதான்  கண்டுபிடிச்சு இருக்காங்க,உனக்கெப்படி முன்னாடியே தெரியும் ?''
           ''குறட்டை விடுறப்போ உங்களைப் பார்த்தா அப்படித்தானேங்க  இருக்கு !''
'கை கழுவுறது 'நடிகைகள் மட்டும்தானா :)
            ''ஹேண்ட் வாஷ் லிக்விட்  விளம்பரத்திற்கு அந்த நடிகைதான் பொருத்தம்னு ஏன் சொல்றே ?''
            ''கல்யாணம் கட்டிகிட்ட ஏழு பேரையும் 'கைகழுவின 'அனுபவம் அவங்களுக்கு இருக்கே !''
படிப்பு தானாய் வந்தால்தான் உண்டு :)
               படிப்பில் கோட்டை விடும் மகனிடம் ...
              அந்தக் காலத்தில் தெருவிளக்கில் படித்தேன் ...
              எனச்  சொல்ல  வந்த  தந்தையின்  வாயை அடைத்தது  ...
              'கரெண்ட் கட் ' !


20 comments:

 1. சிகரெட்...
  குறட்டை...
  கரண்ட் கட்....
  கை கழுவுறது...
  கொசு...
  எல்லாமே ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. ஐந்தையும் ரசித்த 'மனசு'குமார் ஜீக்கு ,ஆறாவதா.. ஒரு காரியம் (த ம வாக்கு ) செய்ய ஏன் 'மனசு' வர மாட்டேங்குதே !எப்பவும் இப்படித்தானா ,இல்லை ..இப்பத்தான் அப்படியா:)

   Delete
 2. ஆயு(ள்)த எழுத்து நீட்சீங்கிறது இதுதானோ...? பெண் புத்தி பின் புத்தின்னு யாரும் இனி சொல்லமாட்டாங்க...!

  நெத்தியில என்னாங்கறே பிளாஸ்திரி...? அது கொசுக்கடி...!

  சும்மா கரடி விடாதே...! நாங்கள்லாம் அரிச்சந்திரன் பரம்பரை... எங்க வம்சமே குறட்டை விடாது...! அரட்டைதான் அடிக்கும்...!

  அந்த நடிகைதான் ‘அனுபவம் பழைமை’ங்கிற படம் நடிச்சிக்கிட்டு இருக்காங்க...! நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்கன்னு சொன்ன இந்தப் பட டைரக்டர இந்த நடிகை கைகழுவலப் போறாதா பேசிக்கிறாங்க...! அடுத்த படத்துக்கு இந்த நடிகைய கைகழுவிட்டுட்டாராம்...!

  அந்தக் காலத்தில படிச்சாத்தான் பாஸ்... இப்பல்லாம் காலம் மாறிப்போச்சு... படிக்கலைன்னாலும் பாஸ்... எதுக்கு இந்த வெட்டி வேலை...!

  த.ம.1
  ReplyDelete
  Replies
  1. ரசிக்க வைக்கும் படம் என்பதால் அது போட்டுள்ளேனே தவிர ,நீங்க சொல்ற ஆயுத நீட்சி ஆணுக்கு அதிகம் பொருந்தும் :)

   பழி வாங்கிருச்சோ கொசு :)

   மனைவி தூங்கும் போது ஜூட் விடுற அரிச்சந்திர பரம்பரையாச்சே:)

   ஒரு படம் முடிவதற்குள் அலுத்து போச்சா :)

   பாஸ் போடத்தான் நிறைய 'தன்னுரிமை' பல்கலைக்கழகங்கள் இருக்கே :)

   Delete
 3. Replies
  1. நல்ல வேளை,இன்னிக்கு ஆஜர் ஆயிட்டீங்க ..வாத்தியார் நீங்களே இரண்டு நாளா ஆப்சென்ட் :)

   Delete
 4. 01. அப்படீனாக்க இனி சிகரெட்டோட உங்க தளத்துக்கு வரலாம்
  02. வல்லவனுக்கு வல்லவன்
  03. அப்ப மனுசன் கரடியிருந்தும் வந்திருப்பானோ ?
  04. ஜாதகம் பார்க்காமல் கல்யாணம் செய்தால் இப்படித்தான்
  05. கரண்டும் சதியா ?

  ReplyDelete
  Replies
  1. ஆயுளை ஏன் மைனஸ் பண்ணிக்க நினைக்கிறீங்க :)

   கொசுவாரை பகைத்துக் கொண்டால் டங்குவார் அறுந்துடும் :)

   சிவ பூஜையில் கரடியாய் வேண்டுமானால் கத்தியிருப்பார் :)

   ஜாதகத்தில் எல்லாமே சாதகமாய் இருக்குமா :)

   இது தேர்தல் நேரம் ,'சதி'ராட்டம் போடவில்லை :)

   Delete
 5. கை கழுவும் விளம்பரத்தில் இத்தனை ரகசியமா....நானும் தான் உங்கள் தளத்துக்கு வந்து அடிக்கடி சிரிக்கணும்...

  ReplyDelete
  Replies
  1. அத்தனையும் ஊருக்கே தெரிந்த ரகசியம் :)
   சிரித்தால் மட்டும் போதும் ,ஆயுள் பிளஸ் ஆகும் :)

   Delete
 6. சிரித்தேன் ..
  வாக்கிட்டேன் ...

  ReplyDelete
  Replies
  1. இரண்டுமே நல்ல காரியம்தான் :)

   Delete
 7. சாப்பிட்டபுின்புதான் கை கழுவாங்கன்னு... தெரியும்...??? நடிகை எப்படியொ....

  ReplyDelete
  Replies
  1. சாப்பிடும் முன் கை கழுவுவதும் சுகாதாரமான பழக்கமாச்சே :)

   Delete
 8. கரண்ட் கட் ஆ... நீங்கள் என்ன மாற்றுக் கட்சியா?
  தமிழ்நாடு இப்ப மின்மிகை மாநிலம் தெரியுமில்ல..சட்டமன்ற வரவுசெலவு அறிக்கை பார்க்கலயா....??!!

  ReplyDelete
  Replies
  1. தேர்தல் நெருங்கினால் மின் மிகையாகும் ,பிறகு மின்பகையாகும் :)

   Delete
 9. Replies
  1. மண்டை ஓடு படத்தையும்தானே :)

   Delete
 10. கை கழுவிய அனுபவம் - :)))

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. இன்றைய என் பதிவை நீங்க கைகழுவி விடாதீங்க ஜி :)

   Delete