21 February 2016

அழகு முகம் அடையாளம் தெரியுமா :)

 குக்கரில் சாதம் வைக்கத்தான் அவருக்கு தெரியும்  :)           
                ''என்னங்க ,காட்டன் புடவையை  வாங்க வேண்டாம்னு  ஏன் சொல்றீங்க ?''
               ''அதுக்கு கஞ்சி போட ,நான்  எங்கே போறது ?''
வாலிபர்களின் 'கனவு ' வாகனம் வருவதே  தெரியலியாமே :)                                 
                   ''பெரியவரே ,உங்களுக்கு வந்திருக்கிறது அல்சர் ,இது எப்படி வருதுன்னு தெரியுமா ?''
                     '' எதிரில் வர்ற 'பல்சரே 'தெரிய மாட்டேங்குது 'அல்சர் 'வர்றது எப்படித் தெரியும் டாக்டர் ?''                     
               
மனைவி காதுக்கு மேட்சிங்கா வைரத் தோடு அமையுமா :)
         ''கடையிலே இருக்கிற எல்லா மாடல் தோடுகளைக் காட்டியும் ,உங்க மனைவிக்கு எதுவுமே பிடிக்கலே ...ஏதாவது  ஒரு மாடல் நல்லாயிருக்குன்னு நீங்களாவது எடுத்து சொல்லக்கூடாதா,சார் ?'' 
       ''அட நீங்க வேற ,நான் சொல்ற எதைத்தான் அவ காதுலே போட்டுக்கிட்டா ?''
ஊருக்கே தெரிந்த தலைவரின் 'இரகசியம் ':)
        ''எந்த டெஸ்ட்டும் பண்ணாமலே எனக்கு முதுகு வலி வர வாய்ப்பே இல்லைன்னு உறுதியாச் சொல்றீங்களே ,எப்படி டாக்டர் ?''
         ''ஆட்சிக்கு வர்ற எந்த கட்சிக்கும்  நீங்க தாவுறதாலே 'முதுகெலும்பு இல்லாதவர் 'ன்னு தெரிந்தது தானே ?''
அழகு முகம் அடையாளம் தெரியுமா :)
             முக நூலில் பார்த்த முகத்தைகூட 
             நேரில் பார்த்தால்  அடையாளம் தெரியவில்லை ...
             கடவுளே வந்தாலும் நம்மால் கண்டுகொள்ள முடியுமா ?

20 comments:

  1. சரியான காட்டான்னு நிருபிச்சிட்டியே... வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா... கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா...!

    டாக்டர்... ஒங்களுக்கு சைடுல ஒக்காந்து இருக்கேன்... நான் எதிரில் ஒக்காந்து இருக்கிற மாதிரியே பேசுறீங்களே...ரொம்ப திரில்லா இருக்கு டாக்டர்!

    அட நீங்க வேற... அவளுக்கு ஸ்பிக்கர் அவுட்...! எல்லாத்துக்கும் தலைய தலைய ஆட்டுவா... வேண்டான்னு சொல்றதா நினைச்சிடாதிங்க... காதுல விழலங்கிறா...! இவள் ஜாதகத்தில இன்னக்கி நகையாப் பாத்தா இவளுக்கு நாக தோஷம் கழியுமுன்னு எழுதியிருக்காம்... அதன் என்ன விடாப்பிடியா கூட்டிட்டு வந்தாள்...! சரி வீட்ல சும்மாதானே இருக்கோம் பாத்திட்டு போலமுன்னு வந்தோம்...!

    கேள்விக்குறி போல் முதுகு வளைந்து மந்திரியாகி உழைப்பது எதற்காக... இதுக்கு மேல முகுதுவலியா இந்த ஜென்மத்தில சான்ஸே இல்ல... எதுக்கு இந்த மாதிரி வளைஞ்சு குனிஞ்சு நெளிஞ்சு மானம் போக விழுந்து கிடக்கிறாங்க... மானம் ஒன்றே பெரிதென எண்ணி பிழைக்கும் நமக்காகத்தான்...!

    முக மூடிக் கொள்ளையர்கள்... ஆலிலை போலொரு நூழிலை ஆட... ஜாக்கிரதை...!

    த.ம.2


    ReplyDelete
    Replies
    1. காட்டானுக்குக் கூட கஞ்சி வடிக்கத் தெரிந்திருக்கும் !இவரு வஞ்சி கொண்டுவர்ற கஞ்சிக் குடிக்கத்தான் லாயக்கு :)

      அடடா ,இது முதலுக்கே மோசமாயிருக்கே :)

      இதை முதல்லேயே சொல்லித் தொலைச்சிருக்கலாமே ,சாவு கிராக்கி :)

      முதுகு வளையாதவர்கள் கட்சியில் இருக்க லாயக்கு இல்லாதவர்கள் என்றே சொல்லிட்டாங்கலாமே :)

      முகமூடிக் கொள்ளையர்கள் நல்லவர்கள் ,நாம் காட்டிக் கொடுத்து விடக்கூடாது என்பதற்கு நம்மை கொல்லாமல்
      விடுகிறார்கள் .தங்களை தற்காத்துக் கொண்டு :)

      Delete
  2. முக மூடிக் கொள்ளையர்கள்... ‘ஆலிலை போலொரு நூலிழை’ என்று ஆட வேண்டியவர்கள்... நூழிலை என்று ஆடித் தவறிவிட்டார்கள்... ஜாக்கிரதை...!

    ReplyDelete
    Replies
    1. ஆலிலை'கண்ணன்'களிடம் நூலிழைக் கன்னிகள் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்தால் சரி :)

      Delete
  3. Replies
    1. முக நூலில் தெரிந்த முகத்தையும் தானே :)

      Delete
  4. கடவுளே அவதாரம் என்ற பேருல அப்பப்ப முகத்த மாத்தும்போது..... நமக்கு எப்படி தெரியும்...

    ReplyDelete
    Replies
    1. அவ 'தாரம் ' எப்படி போனால் நமக்கென்ன என்று இருக்க வேண்டியதுதான் :)

      Delete
  5. 01. ஆமா அவன் கஷ்டம் அவனுக்கு..
    02. உண்மைதானே....
    03. கல்யாண் ஜூவல்லர்ஸில் வைரத்தோடு எடுத்துக் கொடுக்க சொல்லுங்களேன்.
    04. எல்லா அரசியல்வாதியுமா ?
    05. உண்மையான விடயம் ஜி

    ReplyDelete
    Replies
    1. அதானே ,மனைவியே புரிஞ்சுக்கலேன்னா எப்படி :)
      பல்சருக்கு போட்டியா ,சைனா குல்சர் வந்திருப்பதும் உண்மைதான் :)
      உங்களுக்கு எதுவும் கமிஷன் கிடைக்கும்னா எடுக்கச் சொல்றேன் :)
      ஒரு சிலர் விதிவிலக்கு :)
      என் G+ நண்பர்களை பல பேரை நேரடியாகத் தெரியவில்லையே :)

      Delete
  6. காதுல போட்டுக்கற ஜோக்கை சற்றே அதிகமாகவே ரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. வேற வழியில்லை ரசித்தாகணும்,நம்ம நிலைமை அப்படித்தானே இருக்கு :)

      Delete
  7. Replies
    1. பெண்டாட்டி புருசனைக் கஞ்சிக்கு அலைய விடலாமா :)

      Delete
  8. அல்சரும் பல்சரும் ஒன்றாக
    முடிந்து விட்டீரைய்யா....
    அருமையாக உள்ளது....

    ReplyDelete
    Replies
    1. இதைக் கேட்டதும் டாக்டருக்கு எப்படி இருந்திருக்கும் :)

      Delete
  9. எதையுமே காதுல போட்டுக்கமாட்டா ஹஹாஹ்ஹ ...

    த்ரிஷா ரொம்ப அழகாக இருக்கிறார் அதுவும் காட்டன் சாரியில் ஹிஹிஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. வாங்கித் தருவதை மட்டும் போட்டுக்கலாமா :)

      காட்டன் சாரி ,சிலரைத்தான் தேவதையாக்கும்..ஹிஹிஹி :)

      Delete
  10. ரசித்தேன்....

    காட்டன் சாரி அழகிகளுக்கானது...

    ReplyDelete
    Replies
    1. அழகிகள் உடுத்துவதா .உடுத்துவதால் அழகிகளா :)

      Delete