22 February 2016

சைட் அடிக்கவா மனைவி கூப்பிடுவா :)

மனைவியின் சொல்  எல்லாமே மண்டையில் ஏறுமா :)

        ''பசி மயக்கத்தில் காது கேட்காது என்பதெல்லாம் பொய்னு எப்படி சொல்றே ?''
        ''வெங்காயம் நறுக்குங்கங்கிறதை கேட்காத உங்க காதுக்கு  ,டிபன் ரெடின்னா 

மட்டும் நல்லாக் கேட்குதே !''                                                            
                                                                  
 பெயர்பொருத்தம் எல்லாருக்கும் இப்படி அமையாது :)
            ''பவித்ராங்கிற  பெயர் எனக்கு ரொம்ப பொருத்தமா ,ஏன் ?''
            ''பணத்தை வித்  ரா  பண்ணி முடிய மாட்டேங்குதே !''

சைட் அடிக்கவா மனைவி கூப்பிடுவா :)

              ''உங்க லேடீஸ் கிளப் பக்கம்  என்னை வரவே கூடானுன்னு சொல்லுவே ,இப்ப எதுக்கு கண்டிப்பா வரச் சொல்றே ?''
                ''சமையல் கலை நிபுணர் வந்து புது ஐட்டம் சமைக்க கற்றுக் 
கொடுக்கிறார்,அதுக்குத்தான் வரச் சொல்றேன் !''

மணப்பெண் இவள்னா திருமணமே வேண்டாம் :)
            ''என்னது ,கன்னிப்பேய் வந்திருக்கியா ?''
              ''நீங்கதானே உங்க பையனுக்கு 'அடக்கமான பெண் 'வேணும்னு 
விளம்பரம் பண்ணியிருந்தீங்க !''

அழையா விருந்தாளின்னா அவமதிப்புதான் :)
        ''பந்தியிலே சாப்பிட உட்கார்ந்தவரை எழுப்பி ,அடிச்சு விரட்டுறாங்களே ,ஏன் ?''
       ''வெறும் கையோட வந்து சாப்பிடுறதும் இல்லாம ,புது செருப்பு காலோட போறதே அவர் வழக்கமாம் !''

22 comments:

 1. எனக்கு இப்படிக் கண்ணக் கசக்கிற வேலையெல்லாம் பிடிக்காது... எதா இருந்தாலும் டிபன் சாப்பிட்ட பிறகு சொல்லு...! சாப்பிடும் பொழுது வேற எதையும் நெனைக்கக் கூடாது... ஒடம்புல ஒட்டாது... தெரியுமுல்ல...!

  பவித்ராங்கிற பெயர்... ரொம்ப ராங்குதான்...!

  ஆமா... என்னத்த சுட்டீங்க... ஒன்னும் சரியில்ல... நீங்களும் அதுல நிபுணர் ஆனா...இது மாதிரி நாலு பக்கம் போயி நாலு காசு சம்பாதிக்கலாமுல்ல...!

  அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
  ஆரிருள் உய்த்து விடும்.

  ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்
  வழுவல கால வகையி னானே.’ பழைய செருப்பு கழிதலும்... சாப்பாடு... புதியன உள்ளே புகுதலும்... வழுவல என்று நினைத்தேன்... வாழ்வியல் இலக்கணப்படி வாழவிட மாட்டீங்களா...!

  த.ம. 2

  ReplyDelete
  Replies
  1. வெங்காய சட்னியை வழிச்சுதின்ன மட்டும் தெரியும் ,உரிச்சு தர்றது மட்டும் கண்ணக் கசக்கிற வேலையாக்கும்:)

   பவித்ராங்குதானா :)

   உனக்கும் ஆக்கி கொட்டுறதும் இல்லாம ,இது வேறையா :)

   இது காரிருளைக் கிழித்து வந்த பேய் போலிருக்கே :)

   ஆகா ,இதுதான் வாழ்வியல் இலக்கணமா ,நல்லாயிருங்க:)

   Delete
 2. ரசித்தேன் நண்பரே
  த ம ஓட்டுப் போட்டுவிட்டேன் விழுந்ததா தெரியவில்லை

  ReplyDelete
  Replies
  1. ரசித்து போட்ட வோட்டு விழாமல் போகாது :)

   Delete
 3. Replies
  1. பவித்ராவையும் தானே :)

   Delete
 4. Replies
  1. இப்படி 'ஒன் வே'யில் காது செயல்படுவது சரிதானா:)

   Delete
 5. சிரிக்கவச்சுட்டே இருக்கும் வழக்கமான உங்களுக்கு நன்றிகள்

  ReplyDelete
  Replies
  1. இது வழக்கமா எல்லோரும் போடுற கமென்ட் தானே ,உங்க பாணி எங்கே :)

   Delete
 6. 01. சில நேரங்களில் இப்படித்தான்.
  02. ஸூப்பர் ஜி
  03. எல்லாம் காரணத்தோடுதான்.
  04. சொல்றதை சரியாக புரிஞ்சுக்கிறனும்
  05. அவரு வழக்கமாக செய்யிறதுதானே...

  ReplyDelete
  Replies
  1. அப்படின்னா ,ஆரம்ப நிலையில் இருக்கீங்க :)
   மனைவிக்கு செலவு செய்தால் குறைஞ்சா போயிடும் :)
   காரணம் இல்லாமல் எலி ......:)
   பொண்ணுன்னா அடங்கி நடக்கணும் ,அப்படித்தானா :)
   இல்லாத மனுஷன் தின்னுட்டு போறான் என்றாலும் ,திருடலாமா :)

   Delete
 7. பார்த்தேன் ரசித்தேன் சிரித்தேன்
  அன்பரே அருமை நகைச்சுவை

  சரியான சோ(ஜோ)க்காளிதான்

  ReplyDelete
  Replies
  1. பார்த்தேனுக்கு நன்றி :)

   Delete
 8. பார்த்தேன் ரசித்தேன் சிரித்தேன்
  அன்பரே அருமை நகைச்சுவை

  சரியான சோ(ஜோ)க்காளிதான்

  ReplyDelete
  Replies
  1. சிரித்தேனுக்கு நன்றி :)

   Delete
 9. பார்த்தேன் ரசித்தேன் சிரித்தேன்
  அன்பரே அருமை நகைச்சுவை

  சரியான சோ(ஜோ)க்காளிதான்

  ReplyDelete
  Replies
  1. ரசித்தேனுக்கும் நன்றி :)

   Delete
 10. பவித்ராவையும் ரசித்தோம், அடக்கமான பெண்ணையும் ரசித்தோம் ஜி!!!

  ReplyDelete
  Replies
  1. ரசிப்பதில் நமக்கு எந்த கஷ்டமும் இல்லையே :)

   Delete
 11. Replies
  1. பவித்ராவை ரசிக்க முடியுதா:)

   Delete