24 February 2016

தமிழில் தொடர்கிறது மனைவியின் அர்ச்சனை :)

இது நிரந்தரக் கூட்டணி போலிருக்கே :)            
                   ''நாட்டிலே போலிச் சாமியார் பெருக யார் காரணம் ?''
                    ''போலீசும்,சாமியார்களும்தான் !''

மாமனார் தந்ததும் ,தராததும்:)
        ''புது மாப்பிள்ளை 'பைக்'கில் எழுதியிருப்பதைப் படித்தால் 'உள்குத்து 'இருக்கிற மாதிரித் தெரியுதா .எப்படி ?''
      ''என் மனைவி மட்டுமே ,மாமனார் எனக்கு தந்த பரிசுன்னு எழுதிப் போட்டிருக்காரே!''
தலைவர் 'ரம்மி 'யில் ஜெயிக்கும் ரகசியம் :)
            ''தலைவர் மரத்தடியில் ரம்மி விளையாடினா பணத்தை அள்ளுறார்,கிளப்பில் விளையாடவே மாட்டேங்கிறாரே ,ஏன் ?''
            ''சட்டைப்பையில் இருந்து சீட்டை எடுக்கிற வித்தை CCTV காமெரா மூலம் வெளியே தெரிஞ்சுடும்னுதான் !''

 சொல்வது எளிது ,செய்வது அரிது :)
      ''சிங்கத்தை வலையில் அடைப்போம் ,கொசுவுக்கு பயந்து வலையில் படுப்போம்ன்னு எழுதியவனை தேடிக்கிட்டு  இருக்கீயா ,ஏன் ?
       ''நான் வேணா கொசுவலை இல்லாம படுக்கிறேன் ,நீ சிங்கத்தைப் பிடித்துக் காண்பின்னு சொல்லத்தான் !''

தமிழில் தொடர்கிறது மனைவியின் அர்ச்சனை :)
'டியூப் லைட் 'என்றவளின் வாயை அடைக்க 
செலவு பாராமல் 'எலெக்ரானிக்  சோக் 'வாங்கி மாட்டினான் ...
சட்டென்று எரிந்தது டியூப் லைட்..
பட்டென்று கேட்டாள் ..
வாழை மட்டைக்கு எப்படி வந்தது இந்த ஐடியா ?

18 comments:

 1. அப்போ மக்கள் காரணமே இல்லையா!!

  :)))

  ஆஹா... மரத்திலும் ஒரு சிசிடிவி பொருத்துங்கப்பா...

  :)))

  என்ன புரிதல்!

  ReplyDelete
  Replies
  1. ஏமாறும் மக்கள் இரண்டாம் பட்சம்தான் :)
   வாங்கித் தரணும்னு சொல்லாமல் சொல்கிறாரோ :)
   எங்கெங்கு காணினும் cctv தானா :)
   சிங்கத்தை பிடித்து விடுவாரா :)
   அதானே ,தாம்பத்யம் :)

   Delete
 2. மனுசன மனுசன் சாப்பிடுறான்டா தம்பிப் பயலே - இது மாறுவதெப்போ வாழுவதெப்போ நம்மக் கவலே...! சாமி... யார்...? போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்... மாமியார்கள்...!

  எனக்கு ஒரே பொண்ணு... ஜாக்பாட் விழுந்தது மாதிரி ஒனக்கு கிடைச்சிருச்சு... நீ ஏன் எழுதமாட்டாய்...!

  தலைவரின் நேர்மைய யாரும் சோதிச்சுப் பார்க்கக்கூடாதில்ல... அதுக்காகத்தான்... மரம்தான்... மரம்தான்... எல்லாம் மரம்தான்... மனிதன் மறக்கக்கூடாதில்ல...!

  மொதல்ல... சிங்கத்தை வலையில் அடைச்சுக் காண்பி... நா பிடிச்சு காண்பிக்கிறேன்...! நா என்ன சிங்கம்ன்னா பயந்திடுவேனா...? நாங்க எல்லாம் சிங்கத்த அதன் குகையில சந்திச்சவங்க... சந்தி சிரிச்சுடும்... ஆமா...!

  பக்கத்து வீட்டுக் கற்பகம்தான் இந்த அய்டியா கொடுத்தா... அவளுக்குக் கற்பூர புத்தில்ல...கப்புன்னு பத்திக்கிடுச்சு... அவ வேற இப்ப கற்பமா இருக்காளாம்... அவள்தான் சொன்னாள்... எப்படி அவ அய்டியா...!

  த.ம. 2


  ReplyDelete
  Replies
  1. போலிச் சாமியார்களா ,போலீசு சாமியார்களா :)

   ஒரு கார் வாங்கிக் கொடுத்தா நம்புவாரா ,ஜாக்பாட் என்று :)

   தலைவருக்கு இந்த மரத்தடியில் தான் ஞானம் பிறக்கும் :)

   சேலத்தில் , குகை என்று ஒரு ஏரியா இருக்கே ,அங்கே நடந்த சர்க்கஸில் சிங்கத்தைப் பார்த்தீங்களா :)

   நல்ல ஐடியா ,சுகப் பிரசவம் ஆகட்டும் :)

   Delete
 3. அருமை
  தமிழ் மனம் காணவில்லையோ நண்பரே

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மணம் சில நாட்களாவே இப்படித்தான் ,இப்போது கூட பதிவுகள் ,கருத்துக்கள் எதுவும் அப்டேட் ஆகவில்லை !

   Delete
 4. எப்படி என்றாலும் திட்டு தான் ஜி...?

  ReplyDelete
  Replies
  1. வைய வைய வைரக்கல் ,திட்ட திட்ட 'திண்டுக்கல்' என்றிருக்க வேண்டியதுதான் என்று ,உங்களுக்கு நானா சொல்லித் தரணும்:)

   Delete
 5. வணக்கம்
  ஜி
  போலி சாமியர்கள்தான் அதிகம்...திருடுகளும் அதிகம்.
  உண்மையில் மனைவி மாமனார் தந்த சொத்துதானா? கடவுள் தந்த சொத்து இல்லையா?மற்றவைகளை இரசித்தேன் ஜி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. இந்த கொடுமை இல்லா நாடு எது ,அங்கே போவோமா :)

   நீங்க மொத்து மொத்துன்னு அடி வாங்கியதில்லை போலிருக்கே ,அதான் ..சொத்து என்கிறீர்கள் :)

   Delete
 6. 01. உண்மைதான் ஜி
  02. கண்டிப்பாக எதிர் பார்க்கும் குத்துதான்
  03. இதுதான் காரணமா ?
  04. ஸூப்பர் ஐயிடா.
  05. டியூப் இடம் மாறிப்போச்சே.

  ReplyDelete
  Replies
  1. இந்தக் கூட்டணி உடையும் நாளே ,திருநாள் :)
   காரை எதிர்ப்பார்க்கிறாரோ:)
   வேறென்ன இருக்க முடியும் :)
   ஐடியா கிழவி சொல்லமாட்டாளா :)
   நல்ல பாராட்டுதானே :)

   Delete
 7. ஜி மக்கள்தான் போலிச் சாமியார்கள் பிறக்கக் காரணம்..இல்லையா ஜி?

  தமிழ் அர்ச்சனையால் தமிழ் வளர்கிறதே ஜி! மனைவியைப் போற்றுவோம்....ஹிஹிஹி...அர்ச்சனையுடன் முடிந்துவிடும் இல்லை என்றால் மதுரைத் தமிழனைப் போல பூரிக்கட்டை அடியல்லவா கிடைக்கும்...

  ReplyDelete
  Replies
  1. இவர் போலீ(சு) சாமியார் :)

   அவர் , நம்ம அரசியல்வாதிகளை நையாண்டி செய்வதைப் பார்த்தால் ...வீட்டில் அடி வாங்குவது போதாதென்று நினைக்கிறார் போலிருக்கே :)

   Delete
 8. திஸ இஸ் வாழை மட்டை..????

  ReplyDelete
  Replies
  1. எஸ் ,வாழைமட்டை மீன்ஸ் இடியட் :)

   Delete
 9. அருமை.... ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. படத்தில் உள்ள சாமியார் செய்யும் செயலை ரசிக்க முடியுதா :)

   Delete