25 February 2016

ஜாதகம் இதுக்குத்தான் உதவுது :)

அண்ணன் காட்டிய வழியம்மா :)           
              ''சொல்றதுக்கு சங்கடமா  இருக்கு ,உன் தங்கச்சியை நான் காதலிக்கிறேண்டா !''
             ''இதிலே வருத்தப்பட என்ன இருக்கு  ,உன்னை நண்பனாக்கிகிட்டதே  இப்படி நடக்கணும்னுதானே  !''
தர்ம அடிதான் இவங்களைத் திருத்தும் :)       
                     ''என்னம்மா சொல்றே ,பஸ்ஸிலே 'கையை  உள்ளேயும் நீட்டாதீர்கள் 'என்று எழுதிப் போடணுமா ,ஏன் ?''
                      ''என் பின்னாடி உட்கார்ந்து இருக்கிறவர் கை ஓவரா நீளுதே !''
கழுத்தை அறுப்பது மனைவி மட்டுமா  :)
             '' என் பெண்டாட்டி  ஓடிப்போவான்னு முன்னாடியே தெரிஞ்சு இருந்தா மஞ்சக் கயிறு கட்டி இருக்கவே மாட்டேன் !''
             ''வேறென்ன கயிறு கட்டி இருப்பே ?''
             ''மாஞ்சாக் கயிறு தான் !''
உப்பு தின்னா சூடு சொரணை வரணுமா :)
            ''நான் கட்சி  தாவுனதுக்காக .நிருபர்கள் என் தூத்துக்குடி மாவட்டத்தையே அசிங்கமாப் பேசுறாங்க !''
             ''ஏன் தலைவரே ?''
            ''உப்பு விளையுற ஊர்லே பிறந்துட்டு ,உப்பு போட்டு  சாப்பிடுற மாதிரி தெரியலேன்னு கேவலப் படுத்துறாங்க !''
ஜாதகம்  இதுக்குத்தான் உதவுது :)
  ஜாதகப் பொருத்தம் பார்க்கிறார்களோ இல்லையோ ...
 பெண் வீட்டாரிடம் இருந்து என்ன தேறும் என்பதைப் பார்த்து 
 நாகரீகமாய் சொல்லி விடுகிறார்கள் ...
 ஜாதகம் சேரவில்லை என்று !26 comments:

 1. அண்ணனாடா நீ! அடப்பாவி!

  காலும் நீளும்! அதற்கும் சேர்த்தே எழுதச் சொல்லுங்க...

  மாஞ்சா அவ்வளவு ஸ்டிராங்கா என்ன! ஒரு ப்ளேடு போதுமே!

  ஊருக்கே கெட்ட பேரா... அடப் பாவமே..

  ம்ம்ம்....

  ReplyDelete
  Replies
  1. நண்பனை ,மாப்பிள்ளை என்று விளிக்கும்போதே யோசித்து இருக்கணும் :)

   பொண்ணோட கை நீண்டால் ,இதெல்லாம் நீளுமா :)

   கழுத்தை அறுக்க மாஞ்சாதான் பெஸ்ட்:)

   கெட்ட பேர்ன்னு தூக்கிலேயா தொங்கப் போகிறார் :)

   இதுக்குதானா ஜாதகம் :)

   Delete
 2. இப்ப... சொல்றதுக்கு எனக்கு சங்கடமா இல்லைடா... உன் தங்கச்சியை நானும் காதலிக்கிறேண்டா !

  ‘கரம் சிரம் அகம் புறம் நீட்டாதீர்கள்...’ எழுத வேண்டும் போல இருக்கு... களவானிப் பயல... கையும் களவுமா பிடிக்க வேண்டியதுதான்...!

  மஞ்சக் கயிறாவாது மிச்சம்... கவலையவிடு... இன்னொரு கழுத்தப்பாரு...!

  தலைவரே...! உப்புத் திண்ணவன் தண்ணி குடிச்சாகனும்... நாமதான் தண்ணி கு(அ)டிச்சிட்டோமுல்ல...! அரசியல இதெல்லாம் சகஜம்தானே...!

  வருவது வரட்டும் என்பவனே நல்ல ரசிகன் அவன் இவனே இவன் அவனே... பாதகரைக் கண்டால் பயம் கொள்ளல் ஆகாது... ஜாதகர... மொத தகனம் செய்யனும்...!

  த.ம.2
  ReplyDelete
  Replies
  1. நட்புக்கு துரோகம் பண்றீயே பாவி :)

   கையும் காலும் கட்டிப் போட்டு அடித்தாலும்கூட திருந்த மாட்டானுங்களா :)

   லிவிங் டு கெதர் வாழ்ந்துட்டு போங்க :)

   இதையெல்லாம் யோசிச்சா ,அரசியல் பண்ண முடியுமா :)

   தகனம் செய்யணும்னு சொன்னா ..தலைக்கனம் பிடித்தவன்னு சொல்றாங்களே :)

   Delete
 3. Replies
  1. தர்ம அடிதான் இவங்களைத் திருத்தும் என்பதையும்தானே :)

   Delete
 4. Replies
  1. ஜாதகப் பொருத்தத்தை ரசிக்க முடியுதா :)

   Delete
 5. அடடா பகவான்ஜி .. சிரித்து சிரித்து ...எங்களை....

  ReplyDelete
  Replies
  1. நான் எங்கே சிரித்தேன் :)

   Delete
 6. நண்பரே உங்கள் ஜோக்குகளை ரசித்தேன். ஜாதகத்தைப் பற்றிய உங்கள் கணிப்பு சரிதான். பெண் வீட்டாரிடமிருந்து வரும் காசு,பணம், சீர்வரிசை சாதகமாக இருந்தால் ஜாதகம் ஓ.கே. என்று சொல்லுகிறார்கள். இல்லையேல் (பெண் வீட்டு ஜோசியர் பொருந்தும் என்று சொல்லி இருப்பார்) ஜாதகம் பாதகம்தான்.

  ReplyDelete
  Replies
  1. #ஜாதகத்தைப் பற்றிய கணிப்பு சரிதான் #
   சரியாக சொன்னீர்கள்:)

   Delete
 7. 01. எதையுமே ப்ளான் போட்டுத்தான் செய்யணும்.
  02. ஹாஹாஹா நல்ல அனுபவம் ஜி
  03. நல்ல யோசனை கொடுத்தீங்க ஜி புதிய தலைமுறைக்கு.
  04. நியாயம்தானே....
  05. ஆமாம் இப்படியும் சமாளிக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. ப்ளான், பணால் ஆகாமல் போனால் சரி :)
   பார்த்த அனுபவம் கூட இல்லை ,கேட்ட அனுபவம்தான் :)
   மஞ்சக்கயிர் ,மாஞ்சாக்கயிர் எதைக் கட்டுவது என்று எப்படி முடிவெடுக்கிறது :)
   அவருக்கு இந்த நியாயமாவது புரியுதே :)
   அதானே நடக்குது :)

   Delete
 8. ஜாதகம் ....அப்படித்தான் நடக்கின்றது...

  மஞ்சக் கயிறு மாஞ்சாக் கயிறு அஹஹஹ் ஏற்கனவே உங்கள் பதிவில் வாசித்திருந்தாலும் மீண்டும் நகைத்தோம்..

  கை ஓவரா நீளுதே.// .ஹஹஹ்ஹ

  ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. ஜாதகத்தை ,இப்படியும் சாதகமாகிக்கலாமா :)

   Delete
 9. ஜாதகம் ....அப்படித்தான் நடக்கின்றது...

  மஞ்சக் கயிறு மாஞ்சாக் கயிறு அஹஹஹ் ஏற்கனவே உங்கள் பதிவில் வாசித்திருந்தாலும் மீண்டும் நகைத்தோம்..

  கை ஓவரா நீளுதே.// .ஹஹஹ்ஹ

  ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. அந்த மஞ்சக்கயிரை இன்னுமா மறக்கலே :)

   Delete
 10. ஜாதகம் ....அப்படித்தான் நடக்கின்றது...

  மஞ்சக் கயிறு மாஞ்சாக் கயிறு அஹஹஹ் ஏற்கனவே உங்கள் பதிவில் வாசித்திருந்தாலும் மீண்டும் நகைத்தோம்..

  கை ஓவரா நீளுதே.// .ஹஹஹ்ஹ

  ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. தர்ம அடி கிடைக்கும் என்று தெரிந்தும், கை நீளுதுன்னா அடி வாங்கி வாங்கி அவனுக்கு மரத்துப் போயிருக்குமோ :)

   Delete
 11. Replies
  1. ஆனால், அதன் பயன்பாடு சரியில்லையே :)

   Delete
 12. வணக்கம்
  ஜி
  மஞ்சக் கயிறு..ஓடாமல் இருப்பவர்களுக்கு. ஓடிவிடுவாள் என்று தெரியுமாக இருந்தால் ..மாஞ்சாக்கயிறு...அப்புறம் நாம சிறைதான்.ஹி...ஹி..ஹி..
  ஜாதகம்.. எல்லாம் இப்படித்தான் ஜி நடக்குது.த.ம10

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மாஞ்சாக் கயிறில் ,பட்டம் விட்டாலும் தப்பு ,தாலி கட்டினாலும் தப்புதானா:)

   Delete
 13. ரசித்தேன்.... அனைத்தையும்.....

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் இருக்கும் நாட்டில் ,இப்படி கை நீண்டால் என்ன தண்டனைத் தருவார்கள் :)

   Delete