3 February 2016

இடுப்பு அளவை பார்த்து வேலை தரணுமோ :)

 சம நிலை என்பது ,சமதளம்னு நினைச்சிட்டார் போலிருக்கு :)                     

              ''உலகம் சமநிலை பெற வேண்டும், உயர்வு தாழ்விலா நிலை வேண்டும்னு சொல்றது உனக்கு  தப்பா தோணுதா ,ஏன் ?''

               ''இப்படி இருக்கும் போதே சுனாமி ,வெள்ளம்னு வருதே ,சமமா இருந்தா என்னாகும் ?''

 பசங்க பேச்சு ,பெருசுங்களுக்கு புரியலே :)     
                 ''என்னங்க ,சமையலறை பல்பு  எரியலே ,வேற  வாங்கியாங்க !''
              ''நேற்று ரிலீசான படத்துக்குப் போய் 'பல்பு 'வாங்கிட்டேன்னு பையன் சொன்னான் ,அவன்கிட்டே கேட்டுப் பார்க்கிறேன் !''இடுப்பு அளவை பார்த்து வேலை தரணுமோ :)
           ''போலீஸ்காரங்க தொந்தியைக் கரைக்க ஐடியாவா ,என்னது ?''
              ''வேலைக்கு சேரும்போது இருந்த இடுப்பு அளவு கூடினா 
 'இன்கிரிமென்ட் கட்'ன்னு சொல்லிட வேண்டியது தான் !''
           
முதல் மனைவியா ,இரண்டாவது மனைவியா:) 
 1.   ''மனைவிக்கு எத்தனை  சுழி 'ன 'போடணும்னு கேட்டது தப்பாப் போச்சா ,  ஏன் ?''
 2.            ''முதல் மனைவியா ,இரண்டாவது  மனைவியான்னு கேட்கிறாரே !''
               
 3. நிற வேற்றுமை இதிலுமா :)
 4. நம்ம ஊர் சாமிகள் எல்லாம் கருங்கல்லில்  கருப்பாக ...

 5. வடநாட்டில் சலவைக் கல்லில் வெளுப்பாக ...
 6. காலண்டர் ,சினிமாவில் 'ஈஸ்ட்மன் 'கலர் கலராக ...
 7. உண்மையில்  சாமி எந்த நிறம் ?
                

28 comments:

 1. வாழ்கை இங்கே யாருக்கும் சொந்தமில்லையே! வந்தவனும் வருபவனும்.. நிலைப்பதிலையே! ஏன்... நீயும் நானும் நூறு வருஷம் இருபதில்ல பாரு... ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள... இருக்கும் போது சமந்தா... சாரி சமத்தா வாழ வேண்டியதுதான்...!

  நீங்க சரியான பல்புங்கிறத நிருபிச்சிட்டீங்க...!

  குறுக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே... அந்த பெண் போலிஸ் தானே...! அவசியம் இன்கிரிமென்ட் கட் பண்ணனும்...!

  தலையில யாருக்கு ரெட்டச்சுழி இருக்குன்னு பாருங்க... எல்லாம் என் தலையெழுத்து...!

  கறுப்பில்ல வெளுப்பும் இல்லே...கனவுக்கு உருவமில்லே...கடலுக்குள் பிரிவும் இல்லை...கடவுளில் பேதமில்லை... படைத்தவன் சேர்த்து தந்தான்... மதத்தவன் பிரித்து வைத்தான்... சாமியின் நிறம் பகவானுக்குத்தான் தெரியும்... உண்மையில் சாமி இருந்தால்தானே நிறத்தைச் சொல்ல முடியும் சாமி... இந்த ஆசாமி சொல்றது சரியா சாமி...!

  த.ம.2.  ReplyDelete
  Replies
  1. சமந்தா நினைப்பு கூட கூடாதா :)

   சரி ,நீங்க டியூப் லைட்டா இருந்துட்டு போங்க :)

   இப்படியொரு கோணம் இருக்கோ :)

   ரெட்டச்சுழி இருந்தாலும் சிலருக்குத் தானே யோகம் :)

   சரியாய் சொன்னீங்க சாமி :)

   Delete
 2. மனிதனால் தாங்க முடியாமல் தண்ணீர் தங்கிப்போகும்!

  ஆஹா... அப்போ என்னிடம் எத்தனை இருக்கு தெரியுமா!

  இன்னமுமா இன்க்ரிமெண்டை நம்பி அவங்க இருக்காங்கன்னு நம்புறீங்க?

  ஹா... ஹா... ஹா...

  சாமிக்கு நிறமேது?

  ReplyDelete
  Replies
  1. உலகமே ஆலப்புழா ஆகிடும் :)

   ஒண்ணுக்கு ரெண்டு இலவசம்னு விக்க வேண்டியதுதானே :)

   அதானே தினம் தினம் இன்கிரிமென்ட் தானே :)

   அதிக பட்சம் ரெண்டுதானே :)

   சாமியே ஏதுன்னு மணவையார் கேட்கிறாரே :)

   Delete
 3. Replies
  1. உண்மையில் சாமி எந்த நிறம் என்பதையும்தானே :)

   Delete
 4. சமமாயிருந்தா...வந்துட்டு போயிகிட்டு இருக்கும்...

  இடுப்பளவு பார்த்து வேலை கொடுத்தால் நல்லாத்தான் இருக்கும்...ஆனா...வயதாக வயதாக சற்று உடல் அளவு மாறும் அதற்கு தகுந்தால் போல் தான் மற்ற வேண்டும்....இடுப்பளவை...

  ஹி.....

  நமக்கு பிடித்தது போல் வடித்து வணங்க வேண்டியது தான்....  ReplyDelete
  Replies
  1. இமய மலை ,கடலின் அடி ஆழம் ..சமடலமா ...நினைத்தே பார்க்க முடியலையே :)

   அதுக்கொரு இன்டெக்ஸ் வைச்சுகிட்டா போச்சு :)

   இதனாலும் இரு மனைவிக்குள் சண்டை வரும் போலிருக்கே :)

   நாம் எங்கே வடிக்கிறோம் :)

   Delete
 5. Replies
  1. ஆஹா ,தமிழ் ,தமிழ் :)

   Delete
 6. இடுப்பளவு..ன்னு சொன்னதும் என்னமோ ஏதோன்னு ஓடி வந்தேன்..

  கடைசீல சாமி என்ன கலர்..ங்கிற ஆராய்ச்சில இறங்கிட்டீங்க!..

  சாமி எந்த கலரா இருந்தா என்னங்க!..
  பிரசாதம் ருசியா இருந்தா சரி!?..

  ReplyDelete
  Replies
  1. பல்பை வச்சுக்குங்க ,கிச்சனுக்கு போடா தேவைப்படும் :)

   கோழி குருடா இருந்தால் என்ன ,என்பதைப் போலிருக்கே :)

   Delete
 7. இடுப்பளவு சரியா சொன்னீர்கள்,,,

  சுழி சரியா இருந்தா சரி,

  அனைத்தும் அருமை ஜீ,,

  ReplyDelete
  Replies
  1. போலீசுக்கு இடுப்பளவு என்று சொன்னாலே ,கடுப்பளவு ஏகமா வருமே :)

   முடிச்சு போடும் போதே தெரியாதே :)

   Delete
 8. சமநிலை வேறு சமதளம் வேறு என்று ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறீர்களேபல்பு வாங்கின பையனிடமிருந்து இவரும் பல்ப் வாங்கப் போகிறார் இடுப்பளவு குறைத்தால் டபிள் இன்க்ரிமெண்டா?மனைவியின் எண்ணிக்கை பொறுத்தா சுழிகள்நீங்கள் எந்த சாமியைக் கேட்கிறீர்கள் நிறமே இல்லாதவனுக்கு நிறம் கொடுக்கும் முயற்சியா

  ReplyDelete
  Replies
  1. அகத்தியர் படத்தில் வரும் பாடல் எதைக் குறித்து எழுதப் பட்டுள்ளது என்று யோசித்தேன் ,காட்சிப் படி ,சமதளம் பாரித்தான் பாடி வருவார் :)
   இப்படியே கை மாறுவதுதானே பல்பின் இலக்கணம் :)
   அப்படியும் செய்யலாமே :)
   அவருக்கு அப்படித்தான் :)
   இல்லாதவனுக்கு எது நிறம் :)

   Delete
 9. சுனாமி...படமே பயமுறுத்துது அதுக்குத் தெரியுமா சம்நிலை பற்றி எல்லாம்..

  பல்பு ஹஹ்ஹஹ செம...

  சாமி சூப்பர்!!! நிறமற்றதுதானே சாமி இதெல்லாம் மக்கள் செய்ததுதானே...

  ReplyDelete
  Replies
  1. சீர்காழி அகத்தியர் ,சமநிலை பெற வேண்டும் என்று பாடுவது சரியா :)

   நல்லா எரியுதா :)

   சாமியைப் படைத்ததே மனிதன்தானே :)

   Delete
 10. ரசித்தேன். பகவானே!
  த ம 9

  ReplyDelete
  Replies
  1. இடுப்பளவு ,ரசிக்கும் படியா இருந்ததா :)

   Delete
 11. 01. ஆஹா ஜி....... லைனை பிடிச்சுட்டீங்களே....
  02. அதானே எதுக்கு ரெண்டு செலவு
  03. யோசனை மஞ்சிவாடுதான் ஜி
  04. அப்படீனாக்கா அரபிக்காரங்கே நிறைய சுழி போட வேண்டியது வருமே ஜி
  05. சாமி பழு(ப்)பு நிறமோ ?

  ReplyDelete
  Replies
  1. உலகம் சமநிலை பெற வேண்டும், உயர்வு தாழ்விலா நிலை வேண்டும்நு படத்திலே சமதளம் விரும்பியே பாடுவார் ,உங்கள் பதிவைப் படித்ததும் அது நினைவுக்கு வந்தது :)
   ரொம்ப சிக்கனம்தான் :)
   செயல்படுத்துபவர்கள் யோசிக்கட்டும் :)
   அரபு மொழியில் போட்டுக்கட்டும் :)
   சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு இருந்தால் தான் சாமி ,இல்லைன்னா இல்லைதான் :)

   Delete
 12. அனைத்தும் அருமை.... ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. பாட்டும்தானே:)

   Delete
 13. .இடுப்பளவுக்கு இன்கிரிமென்ட் குறைச்சா...வழியல டூ வீலர் செக்கப்பின் போது பில்ல ஏத்திடுவாங்களே...!!!

  ReplyDelete
  Replies
  1. இல்லைன்னாலும் சும்மா விட்டுடுவாங்களா :)

   Delete
 14. ரசித்தேன்.
  அனைத்தும் அருமை

  உண்மையில் சாமி எந்த நிறம் ?
  எனக்குத்தெரியும்,ஆனால் யாரிடமும் சொல்லகூடாதுன்னு சாமி சொல்லி விட்டாரே!


  ReplyDelete
  Replies
  1. உங்ககிட்டே சொன்னவர் ,என்கிட்டே ஏன் சொல்லலே ,கேட்டுச் சொல்லுங்க :)

   Delete