4 February 2016

லவ் லெட்டரெல்லாம் ஓல்ட் பேஷன்:)

 நீ பாதி ,நான் பாதி கண்ணே :)               

                        

                   ''முதல் இரவிலேயே ,குடி குடியை கெடுக்கும்கிற‌து தெரிஞ்சு போச்சா ,ஏன்  ?''

           
               ''அருமை மனைவி ,பாலுக்குப் பதிலா பீர் பாட்டிலைக் கொடுத்து ,எனக்கும் பாதி மிச்சம் வைங்கன்னு சொன்னாளே!''

 ருசியைத் தேடுதோ நாக்கு :)
                    ''அந்த ஹோட்டல் சாப்பாடு 'ஹோம்லி மீல்ஸ் ' மாதிரியே இருந்ததா ,பரவாயில்லையே !''
             ''அட நீங்க ஒண்ணு,உப்புமில்லை ,உறப்புமில்லைன்னு  சொல்ல வந்தேன் !''மாப்பிள்ளை தங்கக் 'கம்பி 'யாச்சே :)

               ''மாப்பிள்ளைப் பையன் நடத்தை எப்படி ?''

                ''கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தாலும்  நன்னடத்தைக்காக 
ஒரு வருஷம் முன்னாடியே ரிலீஸ் ஆயிட்டார்னா நீங்களே பார்த்துக்குங்க !''
லவ்  லெட்டரெல்லாம்  ஓல்ட் பேஷன்:)
 1.                 ''டாக்டரை ஏண்டா காதலித்தோம்னு இருக்குடி ?''\\
 2.                  ''ஏண்டி ?''
 3.                 ''லவ் லெட்டர்லே என்ன எழுதி இருக்கார்னு புரிய மாட்டேங்குதே !''
 4. ..................................................................................................................................
  பிரசுரித்த குமுதம் இதழுக்கு  நன்றி !
 5. மாற்றம் மனைவியின் உருவிலா ?கணவனின் சலிப்பிலா ?

  1. ரூபாவதியாய்  காட்சி  தந்தவள் ...
   மோகம் முப்பது ,ஆசை அறுபது  நாளுக்குப் பின் ... 
   ரூப அவதியாய் !

22 comments:

 1. குடிமகனே..பெருங்குடிமகனே.. நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு... கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு... பீர்முகமதுக்கு எது கொடுக்கனுமுன்னு தெரியாதா...?

  அதான் யாருக்கும் சொரணை வந்திடக் கூடாதின்னு... அந்த ஹோட்டல்ல எல்லாமே லேடிஸ்தானாம்...!

  பால்ய வயதில செய்த குற்றத்திற்காகச் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில பயின்றவர்... அவரோட நன்னடைத்தையினால வெளிய வந்திருக்காரு...! மற்றபடி மாப்பிள்ளய மேல எந்தக் குற்றமும் சொல்ல முடியாது...!

  புரியாத எழுத்தையே கத்துக்கிட்டீங்க... சீக்கிரம் பெரிய மனுசியா ஆயிடுவீங்க...! அப்ப டாக்டர் அப்பா ஆகப் போறாரு...!

  எல்லாம் ரூபா(ய்) பண்ணற வேலை...!

  த.ம.2


  ReplyDelete
  Replies
  1. பக்கத்து இலைக்கு பாயசம் ஊற்றச் சொல்வது போலிருக்கே :)

   அது சரி வீட்டிலே அப்படிஎன்றால் ,இங்கேயுமா :)

   பால்ய வயதிலேயே ஆரம்பித்து விட்டாரா ,நல்ல வேளை ,சொன்னீங்க :)

   அப்பாவாகப் போறாரா ,ஸ்கேன் பார்த்துடலாமா :)

   அது செய்ற வேலையை யாரும் செய்ய முடியாதே :)

   Delete
 2. Replies
  1. படத்தையும் தானே :)

   Delete
 3. அனைத்தையும் ரசித்தேன். அந்தப் படமும் சுவாரஸ்யம்.

  ReplyDelete
  Replies
  1. பார்த்துக் கொண்டே இருக்கலாம .நல்ல மேஜிக் படம்தான் :)

   Delete
 4. பொருத்தமான படம்......

  ரசித்தேன் ஐயா
  தம.எ

  ReplyDelete
  Replies
  1. பதிவை விட படம் சூப்பர்னும் சொல்லலாம் :)

   Delete
 5. 01. வாழ்க வளமுடன்
  02. பொருத்தமானதுதான்
  03. அப்படினா நல்லவரு வல்லவருதான்
  04. மெடிக்கல் ஷாப்புல கொடுத்து படிக்கச் சொல்ல்லாமே
  05. ரூப அவதி

  புகைப்படம் ஸூப்பர் ஜி

  ReplyDelete
  Replies
  1. பொங்கும் பீர் என்றும் தங்கட்டும் :)
   வெளியில் ஒரு நாள் சாப்பிடவும் நிம்மதியில்லை :)
   வல்லவருக்கு மூன்று முடிச்சு யோகம் உண்டா :)
   லவ் லெட்டரையா:)
   இவர் மட்டுமென்ன ரூப சொரூபனா:)

   உருவாக்கியவரை பாராட்டுவோம் :)

   Delete
 6. படம் அருமை ஜீ,,

  அனைத்தும் அருமை,,

  ReplyDelete
  Replies
  1. தேடினால் கிடைக்கும் என்பதை உறுதி செய்துவிட்டது இந்த படம் :)

   Delete
 7. லவ் லெட்டரெல்லாம் ஓல்ட் பேஷன் என்றால் புது பேசன் எது நண்பரே....???

  ReplyDelete
  Replies
  1. காப்பி ஷாப்பில் ,கடலைப் போட்டு கொண்டிருப்பவர்களிடம் கேளுங்கள் :)

   Delete
 8. குடியொடு குடித்தனம் ஆரம்பித்திருக்கிறார்கள்!
  த ம 8

  ReplyDelete
  Replies
  1. நல்ல வேளை,பாட்டிலை உடைக்காமல் கொண்டு வந்து இருக்கிறார் :)

   Delete
 9. குடிக்கும் போது நீ பாதி நான் பாதி என்று பாட வேண்டியதுதான் அந்த ஹோட்டலில் அன்பையும் பரிமாறினார்களா?மாப்பிள்ளை இரும்புக் கம்பிக்குள் இருந்தவர் தங்கக் கம்பியாய் விட்டாராஅது லவ் லெட்டராக இருந்திருக்காது ஏதாவது ப்ரிஸ்க்ரிப்ஷனாக இருக்கும் ....!ரூபாவதி ரூபவதியாய் இருப்பது சரிதானே

  ReplyDelete
  Replies
  1. வாழ்க்கையில் முக்காலும் காலும் ஆகாமல் போனால் சரிதான் :)
   பாசத்தைப் பிழிந்து நெய்யாய் ஊற்றி விட்டார்கள் :)
   அப்படியோர் ரசவித்தை இருக்காரா :)
   இருக்கலாம் ,படிக்க முடியலியே :)
   காலம் செய்த கோலமா :)

   Delete
 10. டாக்டர் காதல்...ஹஹஹஹ்

  அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. டாக்டர் எழுதுவது புரியவில்லை என்றாலும் ,வலிக்காமல் ஊசி குத்துவார் :)

   Delete
 11. Replies
  1. அழகான ரூபாவதியைதானே :)

   Delete