7 February 2016

ரஜினி பாட்டில் எது சரி:)

இப்போ,ஆம்பளைங்க பெரும்பாலோர் இப்படித்தான் :)

                     ''கோவிலும் ,டாஸ்மாக்கும் ஒண்ணுன்னு ஏன் சொல்றீங்க ,அப்பா ?''
                 ''பிரச்சினை வந்தா நாங்க தெய்வத்தைக் கும்பிடப் போவோம் ,இப்போ ,டாஸ்மாக் கடைக்குப் போறாங்களே !''

இவர் சொந்த ஜாதியிலேயே மருமகளைத் தேடுவாரோ  :)
           ''பையனை ஏண்டா வக்கீலுக்கு படிக்க வச்சோம்னு இருக்கா ,ஏன்  ?''
            ''நான் விரும்பிற பெண்ணைக் கட்டி வைங்க ,இல்லைன்னா ,பரம்பரைச் சொத்தை உடனே பிரிச்சுக் கொடுங்கன்னு சட்டம் பேசுறானே !''


மாமியார் கையில் துப்பாக்கி  இருக்குமோ :)

                        ''எனக்கொரு ஜாக்கெட்டை வாங்கித் தரக்கூட உங்க மகனுக்கு 
துப்பில்லைன்னு உன் பெண்டாட்டி புலம்புறாளே ,ஏண்டா ?''
                      ''அய்யோ அம்மா ,அவளுக்கு புல்லெட் புரூப்  ஜாக்கெட் 
வேணுமாம் !''


  1. ரஜினி பாடியதில் எது சரி?
  2.                    ''புதுப் பொண்டாட்டி பின்னாலேயே திரியாதே ,ரஜினி பாட்டைக் கேட்டு திருந்தப் பாருன்னு சொல்றீயே ,ஏன் ?''
  3.                 ''சேலையில் சிக்கிக் கொண்டா சொர்க்கத்தின் வழி ஏதும் தெரியாதுங்கிறாரே !''
  4.                  ''அப்புறமா அவரே  'சேலை சோலையே 'ன்னு பாடினது உனக்குத் தெரியாதா ?''
   கருக் கலைப்பு பாவமா ,சோகமா ?
  5. யான் பெற்ற இன்பம் பெறுக  இவ்வையகம் ..
   என்றிருப்பது பரந்த மனப் பான்மை !
   நான் பெற்ற துன்பம் நீயும் பெற வேண்டாம் ..
   கருக்கலைத்தவளின் கசந்த மனப்  பெண்மை !

20 comments:

 1. Replies
  1. புல்லெட் புரூப் ஜாக்கெட்டையும் தானே :)

   Delete
 2. “நல்ல மனுஷன் சாராயத்தை தொட்டதுமில்லை-அது தொட்டவனை லேசில தான் விட்டதுமில்லை-மனுஷனோட ரத்தத்தை தான் அட்டை குடிக்கும் ஆனா மனைவி மக்கள் குடும்பத்தையே பட்டை குடிக்கும்-“குடிக்காதே தம்பி குடிக்காதே-நீ குடிச்சிருந்தா ஊருலகம் மதிக்காதே,உன் வீட்டை ஒரு கழுதை கூட மிதிக்காதே”ன்னு பாடுனவன் பாட்டைக் கெடுத்தான் எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான்... காலிப் பயலாகி காலி பண்ணுறேன் சாராயப் பாட்டில... காளி பயமாக்கி கோயில்ல தாக்க நிக்கிறா... நமக்கு மதுரை வீரன் சாமிதான்...!

  பரம்பரை சொத்தான அந்த தகரப் பொட்டியவும் கீத்துமட்டை வீட்டையும் பிரிச்சுக் கொடுத்துட வேண்டியதுதானே...!

  துப்பாக்கி படத்துக்கு ஒன்னய கூட்டிட்டு போறேம்மா... அதுக்காக... நீ துப்பாக்கிய மருமகள்ட்ட தூக்கிக் காட்டதம்மா...! அப்பாட்ட வேணுமுனா காட்டு...!

  ‘அண்ணல் காந்தி குடிச்சது ஆட்டுப்பாலுங்க’-ன்னு சொல்லிட்டு.... அப்புறமா...
  ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு... எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு... காராம்பசு ஓட்டி வாராண்டி தாய் மாமன்னு... சொல்லலையா... இதெல்லாம் சகஜம்தானே...!

  இன்பமும் துன்பமும் இயற்கையின் நீதி... பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்... பாவி மனிதன் அழித்து வைத்தானே...!

  த.ம.4


  ReplyDelete
  Replies
  1. சாராயத்தைத் தொடாத மதுரை வீரன் சாமியும் உண்டோ :)

   அதான் சொத்து என்றால் பையன் ஏன் மல்லுக்கு நிற்கிறான் :)

   மாமியார் துப்பாக்கிக்கு பயப்படாத மருமகளுக்கு எதுக்கு புல்லெட் புரூப் ஜாக்கெட் :)

   காராம்பசும் பாலைக் குடித்தால் மட்டும் இளமை திரும்பிடுமா :)

   ஆக்கத்தான் முடியாதே ,அழித்து வைப்போமே :)

   Delete
 3. புல்லட் ப்ரூப்...ஹா...ஹா...

  ReplyDelete
  Replies
  1. ஆன் லைன்லே இந்த ஜாக்கெட் மட்டும்தான் வரலே :)

   Delete
 4. ஊஹூம்... ஒத்துக் கொள்ள முடியாது! எனக்குப் பிரச்னை என்றால் இரண்டு இடத்துக்குமே போக மாட்டேன்!

  சொத்தைப் பிரித்துக் கேட்க வக்கீலுக்குப் படித்திருக்க வேண்டுமா என்ன!

  அவருக்கு எதற்கு புல்லட் ப்ரூஃப்?

  அப்புறம் பாடினாரா, முன்னாலேயே பாடியதா அந்த வரிகள்?

  ம்ம்ம்...

  ReplyDelete
  Replies
  1. நல்ல மனுஷனுக்கு இதுதான் அழகு :)

   இது ,காதலால் வந்த வினை :)

   மாமியார் துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவாராய் இருக்கும் :)

   இந்த வரிசைப் படிதான் :)

   தேவையா இவ்வளவு அவசரம் :)

   Delete
 5. ஆஹா மாமியார் கூட வாங்கித் தரச்சொல்லுவாங்களா பகவானே,,

  அனைத்தும் அருமை,,

  ReplyDelete
  Replies
  1. போடுகின்ற சண்டையில் ஒரு சமத்துவம் வேண்டாமா :)

   Delete
 6. நகைப்பணி தொடரட்டும்..
  தம +

  ReplyDelete
  Replies
  1. தொடர்கிறேன் ,தங்களின் ஆதரவால் :)

   Delete
 7. ஹஹஹஹ் அனைத்தையும் ரசித்தோம்

  ReplyDelete
  Replies
  1. பாட்டு எதிர்ப்பாட்டு ரசீத்தீர்களா :)

   Delete
 8. 01. இப்ப, இப்படியாகிப் போச்சா ?
  02. சரியான சந்தர்ப்பம்
  03. இவ என்ன கவுன்சிலரா ?
  04. தத்துவம்தான் ஜி
  05. ஸூப்பர்

  ReplyDelete
  Replies
  1. தமிழ் நாட்டில் 'குடி'மகன்களின் எண்ணிக்கை 49 சதவீதம் ஆகிவிட்டதா ,ஒரு புள்ளி விவரம் சொல்லுதே :)
   மகனே இல்லேன்னு கழட்டி விட்டுடப் போறார் :)
   'கவுன்'சிலருக்குத்தான் இந்த ஜாக்கெட் தேவைப்படுமா :)
   அட இதான் தத்துவமா:)
   கசப்பும் சூப்பர்தானா :)

   Delete
 9. பாராட்டுகிறேன்...
  தமிழ்மணத்தில் வாக்கிட்டேன்...

  ReplyDelete
  Replies
  1. ரசித்ததற்கு மட்டுமல்ல ,வாக்கிட்டமைக்கும் நன்றி :)

   Delete
 10. Replies
  1. ரசித்ததற்கு மட்டும் நன்றி :)

   Delete