8 February 2016

மனைவி இப்படின்னா ..கஷ்டம்தான்:)

 கணக்கிலே புலி ,நம் கேஷியர்:)

                    ''நம்ம கேஷியர் ஒரு மாசம் லீவா ,ஏன் ?''
                     ''தலை வலின்னு ஒரு நாளும் ,கால் வலின்னு ரெண்டு நாளும் லீவு போட்டவர் ,இப்போ பல் வலின்னு லீவு கேட்டிருக்காரே !''

இதுக்குத்தான்  பழகவிடக் கூடாதுன்னு சொல்றது :)

               ''டாக்டர் ,உங்களுக்கும் வயிறு எரியுதா ,பேஷண்ட் எவனும் பீஸ் கட்டாம ஓடிப் போயிட்டானா ?''
          ''சும்மா ஓடியிருந்தாலும் பரவாயில்லே,நர்சையும் தள்ளிக்கிட்டு போயிட்டானே !''  
                                                                                                                                                

மனைவி இப்படின்னா ..கஷ்டம்தான் :)         
         ''உன் மனைவி எப்பவும் உன்னை சந்தேகப்படுறாளா ,ஏன்?''
        ''புரை ஏறும்போது யாரோ என்னை நினைக்கிறாங்கன்னு 
சொன்னா 'நான் இங்கே இருக்கும் போது எந்த சிறுக்கி உங்களை 
நினைக்கிறா 'னு கேட்கிறாளே !''
ஜோதிடருக்கே நேரம் சரியில்லை :)
                       ''சித்த மருத்துவர் ஜோதிடரும் ஆனார் சரி ,ஜெயிலுக்கு ஏன் போனார் ?''
            '' என் புதிய கண்டுபிடிப்பு 'சகல தோஷ நிவர்த்தி மாத்திரை 'ன்னு  மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டாராம்  !'


   1. தலைவலி வரலாம் ,ஆனா வரக் கூடாது :)
   2. தலைவலி வந்தால் நாம 'பாமை 'தடவிக்குவோம் !
    'பாம் வெடிக்கும் 'ன்னா போலீசுக்கு தலைவலி ,

     1. நம்ம எல்லாரையும் தடவ ஆரம்பிச்சுடுவாங்க !

  16 comments:

  1. Replies
   1. முத்துப் போன்ற பல் அழகையும்தானே :)

    Delete
  2. எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்னு சொல்ல முடியலையே...! கேஷியருக்கு கூட்டிக் கொடுங்க... சம்பளத்த...!

   இதுக்குத்தான் அழகான நர்ஸ சேக்காதீங்கன்னு சொன்னேன்...!

   நினைத்தாலே இனிக்கும்...இல்ல...இல்ல... புரை ஏறும்...!

   சித்தன் போக்கு சிவன் போக்குன்னு... கம்பி எண்ண வேண்டியதுதான்...!

   சோதனை மேல் சோதனை போதுமடா... !

   த.ம.2

   ReplyDelete
   Replies
   1. அடி தாங்க முடியாமல் ஓடிப் போயிட்டாரே :)

    நாலு பேர் கிளினிக்குக்கு வர வேண்டாமா :)

    புரை ஏறினால்,பூரிக்கட்டைத் தேடுறாளே மனைவி :)

    அது சரி ,மிஞ்சிப் போனால் பதினைந்து கம்பி இருக்குமா :)

    தொடாமல் சோதனை செய்தால் கூட பரவாயில்லை :)

    Delete
  3. தலைவலி ஹஹஹஹ்

   அந்தச் சித்த ஜோதிடரைப் போலத்தான் இப்போது ...

   ரசித்தோம் ஜி

   ReplyDelete
   Replies
   1. வாயிலே நுழையாத பட்டங்களை வைத்துக் கொண்டு பலரும் சமூகத்தில் உலா வந்துகொண்டே இருக்கிறார்கள் :)

    Delete
  4. அருமை பகவான்ஜி!
   த ம 4

   ReplyDelete
   Replies
   1. பார்த்ததா ,படித்ததா :)

    Delete
  5. பல்வலின்னா 3எ2 நாள் லீவா
   வீட்டு வேலைக்காரியுடன் இப்போது நர்ஸும் சேர்ந்து விடுகிறார் பாவம் அவர்கள்
   மனைவிக்குப் புரை ஏறினா எந்த சிறுக்கன் நினைப்பதாக அர்த்தம்
   சோசியர் சரியாகக் கணிக்க வில்லை. மருத்துவத்தையும் ம்கலந்து விட்டார்
   நம்மைத் தடவி தலைவலி குறைத்துக் கொள்வார்களா

   ReplyDelete
   Replies
   1. அவர் கணக்கு அப்படித்தான் :)
    just fun,take it easy:)
    இதைக் கேட்கும் தைரியம் அவருக்கு இல்லையே :)
    கலக்கலால் அவருக்கு வாய்த்தது ஜெயில்வாசம் :)
    அவர்கள் தலைவலியைக் குறைத்துக் கொள்வார்கள் :)

    Delete
  6. 01. இப்படித்தான் புலியா ?
   02. அவனுக்கு நர்ஸை பிடிச்சிருக்கும் இது தப்பா ?
   03. இதுவும் குற்றமா ?
   04. இவரை முதலில் சோலந்தூர்காரரிடம் பார்க்க சொல்லுங்க ஜி
   05. உண்மைதானே...

   ReplyDelete
   Replies
   1. இதுவும் கணக்குதானே :)
    நர்ஸுக்கும் அவனை பிடித்தால் ,யாரால் தடுக்க முடியும் :)
    அதானே ,மனைவி சந்தேகப் படவுமா கூடாது :)
    வேலூருக்கு பக்கத்தில்தானே சோலாந்தூர் :)
    பாம் புரளியாயிருக்கே:)

    Delete
  7. பாம், கிச்சு...கிச்சு.

   ReplyDelete
   Replies
   1. வெடிக்கும் வரை கிச்சு கிச்சுதான் :)

    Delete
  8. பாவம் கணவர்மார்கள் புரை ஏறினால் கஷ்டம்தான்......

   ReplyDelete
   Replies
   1. உங்களுக்கு இப்படியொரு சந்தோஷமா:)

    Delete