12 March 2016

முதல் ராத்திரியிலேயே தெரிஞ்சு போச்சு :)

 பசங்களுக்கு கட் அடிக்க சொல்லியா தரணும்:)               
                  ''நாமதான் வீட்டுப் பாடம் செய்துகிட்டு வந்திருக்கோமே ,ஏண்டா வெளியே எடுக்காதேன்னு சொல்றே ?''
                  ''செய்யாதவங்க  எல்லாம் வகுப்பை விட்டு வெளியே போங்கன்னு வாத்தியார் சொல்றாரே !''

படிச்சா மண்டைக் காயும் ,பரவாயில்லைன்னா படிங்க  :)
                '''எள்ளுதான் காயுது ,எலிப் புழுக்கை ஏன் காயுது ?''
                 ''காய்ஞ்ச எள்ளுலேர்ந்து எண்ணெய் வரும்னு தெரியும்  ,புழுக்கை ஏன் காயுதுன்னு  எலியைத்தான் கேட்கணும் !''

முதல் ராத்திரியிலேயே தெரிஞ்சு போச்சு :)           
                  ''நேற்றுதானே  கல்யாணம் ஆச்சு ?டாஸ்மாக்கில்  வேலைப் பார்க்கிறவரை  கட்டிக்கிட்டது வம்பா போச்சா ,ஏண்டி ?''
                  ''நான் , சரக்கை வேணும்னா  விட்டு கொடுப்பேன் , உனக்காக எதையும்  விட்டுத் தர மாட்டேன்னு சொல்றாரே !''
'புரிந்துணர்வு ஒப்பந்தம் 'னா புரிங்சுக்கிடணும் :)
          ''அந்த காலத்திலே நல்ல நல்ல காரியம் நடந்தது ...இப்போ  எதை எடுத்தாலும் ஊழல் .லஞ்சமுமா இருக்கே ,ஏன் ?''
         ''இது 'புரிந்துணர்வு 'ஒப்பந்தம்  போடுற  காலமாச்சே !''
இதுவும் 'குடிக்காதே 'என்பதை போலத் தானா ?:)
  மக்கள்  தொகையை கட்டுபடுத்த 'கு . க ' திட்டம் கொண்டு வந்த அரசு...
  பாலிதீன்  பை உற்பத்தி தடை சட்டம் கொண்டு வரலாமே ?
  உற்பத்தி செய்வானேன் ?உபயோகப் படுத்தாதே என்பானேன் ?

26 comments:

 1. வாத்தியார் இப்படிச் சொல்லுவார்ன்னு தெரிஞ்சிருந்தா... வீணா...வீட்டுப் பாடம் செய்துகிட்டு வந்திருக்க மாட்டோம்...!

  எலிப் புழுக்கை ஏன் காயுதுன்னு... காயவச்ச ஆளக் கேக்கணும்...! ஒரு வேளை எள்ளுலேர்ந்து எண்ணெய் எப்படி வருதுன்னு அதையும் பாத்துடலாமுன்னு இருக்குமா...?

  சரக்கை வேணும்னா விட்டு கொடுப்பேன்... எடுத்துக்கோ...!

  அன்றைக்கு அரசியல்வாதிங்க தியாகிகளா இருந்தாங்க... இன்றக்கு அரசியல்வாதிங்க ஆதாயவாதிங்களா திகழ்றாங்க...!

  பிள்ளையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலை ஆட்டுவதைப்போல... ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா... நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு...!

  த.ம. 2
  ReplyDelete
  Replies
  1. சரி சரி ,பழம் நழுவி பாலில் விழுந்து போச்சே :)

   புளுக்கையில் இருந்து எதுவும் வருமான்னு ஆராய்ச்சியா:)

   விளங்கிடும் :)

   அரசியல்வியாதிங்க :)

   தடுத்தால் வரவு குறைந்து விடுமே :)

   Delete
 2. ஹிஹிஹி... இப்பவும் இப்படித்தானா!

  ஹிஹிஹி..

  கொடுமை.

  அதானே!

  உண்மைதானே?

  ReplyDelete
  Replies
  1. எப்பவும் இப்படித்தான் :)

   எலி உண்மையைச் சொல்லுமா :)

   வீட்டில் கணவன் செய்வதுதானே :)

   இப்போதானே நமக்கு புரியுது :)

   பிள்ளையைக் கிள்ளி விடும் வேலையை அரசு விடுமா :)

   Delete
 3. ஆஹா இரகசித்தை கண்டுப்பிடிச்சுடீங்களா..!!வகுப்பு கட் அடிக்கறத.
  நம்ம அரசு குடிக் குடியக் கெடுக்கும்-னு எழுதி வைச்சு டெக்னிக்கலா விற்பனை செய்யுதே ஐயா..!!
  ஊழலும் இலஞ்சமும் உருவாக்கியதே நம்ம அருமை மக்கள் தானே..!!நாம் குடுத்தோம் அவன் வாங்கினான்,நாம குடுக்க மாட்டோனு சொன்னோம் அவன் நான் செய்ய மாட்டேனு சொல்றான்.இப்படி தான் ஊழல் உளவி வருகிறது ஐயா.

  அருமை ஐயா.

  ReplyDelete
  Replies
  1. வாத்தியார் பாடு கஷ்டம்தான் :)
   லஞ்சம் ...முதலில் நிறுத்தப்பட வேண்டியதா கொடுப்பதா ,வாங்குவதா :)

   Delete
 4. ஹா ஹா சிரிக்கவும் சிந்திக்கவும்
  உங்கள் நகைச்சுவை .....
  அருமை நண்பரே....

  ReplyDelete
  Replies
  1. சிந்திக்க வைத்தால் கம்பெனி பொறுப்பில்லை :)

   Delete
 5. 01. அவன் நிலை அவனுக்குத்தானே தெரியும்
  02. இது பூனைக்குத்தான் தெரியும்
  03. அய்யோ பாவம்
  04. இப்படியொரு ஒப்பந்தமா ?
  05. நீலப்படங்களில் நடிப்பவர்களை விட்டுப்புட்டு பார்ப்பவர்களை கைது செய்வது போல்தான்.

  ReplyDelete
  Replies
  1. ஜி நேற்றைய பதிவுக்கு நான் ஓட்டுப் போட்டது துபாய் வேர்ல்ட் டவர் 124 வது மாடியின் மேலிருந்து செல்மூலம் ஆகவே கருத்துரை இல்லை

   Delete
  2. சினிமா போறதுக்கு புக் பண்ணியிருப்பானோ :)
   பூனைக்குத்தான் எலி இருக்குமிடம் தெரியுமோ :)
   முதல் நாளிலேயே இப்படியொரு சோதனையா :)
   நடப்பு அப்படித்தானே இருக்கு :)
   நடிப்பவர்கள் 'பிரபலங்கள் 'ஆச்சே :)

   Delete
  3. ஆகா ,இவ்வளவு உயரத்தில் இருந்தா ?பரவாயில்லை த ம வாக்கு விழுந்திருக்கே!இதையே பாலோ பண்ணுங்க ஜி :)

   Delete
 6. Replies
  1. 'புரிந்துணர்வு ஒப்பந்தம் 'னா என்னான்னு புரிந்ததா :)

   Delete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. வணக்கம்
  ஜி

  நகைச்சுவைகள் ஒரு சுவைதான்...படித்து மகிழ்ந்தேன் த.ம 6ஜி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களின் த ம அறுசுவைக்கு நன்றி :)

   Delete
 9. பள்ளியில இப்பல்லாம் அப்படிச் சொல்ல முடியறதில்லை ஜி. கட் அடிச்சுருவாங்கனு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு ஒன்று. மற்றொன்று. வெளிய நிக்கவைச்சா அடுத்த நாளே அம்மா அப்பானு ஒரு படையே வந்துருது..

  ரசித்தோம் அனைத்தையும் ஜி...

  ReplyDelete
  Replies
  1. எப்படித்தான் திருத்துவது ,வாத்தியார் வேலையிலும் டார்ச்சர் கூடி விட்டது:)

   Delete
 10. Replies
  1. இது போதும் ஜி :)

   Delete
 11. Replies
  1. படிச்சா ,மண்டைக் காயலையா :)

   Delete
 12. அய்யோ..பாவம்மே..... முதல் ராத்திரியிலேயே தெரிஞ்சு போச்சா....!!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. போக போகத் தெரிவதை விட இது நல்லதுதானே :)

   Delete