2 March 2016

வீட்டுக்கு வந்த ' நவக்கிரக நாயகி ':)

வாட்டர்தெரபி தலைக்கீழாய் செய்தால் :)
            ''அதிகாலை ஐந்து  மணிக்கு வெறும் வயிற்றில் மூணு லிட்டர் தண்ணீர் குடித்தால்    நோயே  வராதுங்கிறது சரி  ,ஐந்து மணிக்கு எப்படி எந்திரிக்கிறது ?''
            ''இரவு தூங்கிற முன்னாலே மூணு லிட்டர் தண்ணீர் குடிச்சுப் பாரேன் !''

மனைவியின் முன் ஜாக்கிரதை :)
           ''வேலைக் காரி என் ஜீன்ஸ் பேன்ட் .சட்டைப் போட்டுக்கிட்டு  
வர்றாளே ,ஏன் கொடுத்தே ?''
               ''என் சேலையைக் கட்டிக்கிட்டு வந்தா ...நான்னு நினைச்சு 
அவகிட்டே நீங்க ஏடாகூடமா நடந்துக்க  கூடாதுன்னுதான் !''
இதுக்கு ரூம் போட்டு யோசிச்ச மாதிரி தெரியலே !
நகையை அடகு வைச்ச சீட்டை ரொம்ப பத்திரமா வச்சிக்கணும் போலிருக்கு ...
நகை திருப்புறதுக்கு முன்னாடியே மர்ம மனிதர்களிடம் கூட காட்ட வேண்டிய நிலைமை உண்டாகி விட்டது ...
இல்லையில்லை உருவாக்கி விட்டது ...
நான்கு நாட்களுக்கு முன்னால் மதுரை செக்கானூரணியில் ...
மூன்று வீடுகளில் கொள்ளை அடித்து உள்ளார்கள்...
ஒரு வீட்டில் இருந்த பெண்மணியிடம் நகை ,பணத்தைக் கேட்டு மிரட்டி உள்ளார்கள் ...
எதுவும் தன்னிடம் இல்லையென்று சொல்ல ...
கொள்ளையர்கள் நம்ப மறுத்து பாசத்துடன் ...
முறைப்படி திருமணம் நடந்ததா ,ஓடிப் போய் கட்டிகிட்டியா என்று கேட்க ...
முறைப் படிதான் நடந்தது என்று சொல்ல ...
அப்படின்னா ,கல்யாண ஆல்பத்தை காட்டு என ,அதைப் பார்த்து ...
கல்யாண கோலத்தில் அணிந்து இருந்த நகைகள் எங்கே என்று கேட்க ...
அடகு வைத்து இருப்பதாக அந்த பெண்மணி சொல்ல ...
நம்ப மறுத்த கொள்ளையர்கள் ...
அடகுசீட்டை பார்த்த பின்தான் ...
கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓடியிருக்கிறார்கள் !
எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் இந்த கொள்ளைக்காரர்களும் !
வீட்டுக்கு வந்த ' நவக்கிரக நாயகி ':)
            ''உங்க மருமகளை 'நவக்கிரக நாயகி 'ன்னு சொல்றீங்களே ,ஏன் ?'' 
          '' தினமும் கோவிலுக்குப் போன  என் பையன் நவக்கிரகத்தைச் சுற்றுவதற்குப்  பதிலா ,இவளை சுற்றிக்கிட்டு  இருந்திருக்கானே  !''
விவேகானந்தர் சொன்னதில் அர்த்தம் உள்ளது :)
நூறு இளைஞர்கள் என் பின் வரட்டும் 
நாட்டையே மாற்றிக் காட்டுகிறேன் ...
இது ,விவேகானந்தர்  அன்று சொன்னது !
இன்று லட்சம்  இளைஞர்கள் தயார்.. 
ஒரு 'விவேகானந்தரை''காணாம் !

12 comments:

 1. Replies
  1. சோதித்தது போதும் கில்லர்ஜி .இதோ வந்துட்டன் உங்க weekly book படிக்க :)

   Delete
  2. 01. எப்படி விடியும்வரை டாய்லெட்டா ?
   02. முன் அனுபவம்தான்.
   03. அடடே இந்தியா தொழில் வளர்ச்சியில் முன்றேற்றப்பாதையில் செல்கிறது.
   05. சுற்றிய வேகத்தில் இவளையும் சுருட்டி விட்டானே...
   06. இப்பொழுதுதான் விவேகமான ‘’ஆனந்தா’’க்கள் பெருகி விட்டார்களே... ஜி

   Delete
  3. வெறும் தண்ணி குடிச்சுகிட்டிருந்தா ,அங்கும் வேலை இருக்காதே :)
   புருஷன்னு அந்த அம்மா ஏடாகூடமா நடந்துக்காம போனால் சரிதான் :)
   தீப் இன் இந்தியான்னு சொல்லலாமா :)
   இன்னும் சில நாளில் இவனே சுருண்டு விழத்தான் போறான் :)
   இந்த 'ஆனந்தா'க்களால் நாட்டுக்கு பெருமை இல்லையே :)

   Delete
 2. படுக்கை ஈரமாகி விட்டால்?

  கவர்ச்சியான ஐடியா!

  விவரமான கொள்ளையர்கள்! ஆடிட்டிங்கில் பயிற்சி பெற்றிருப்பார்களோ!

  ஒன்பது முறையா!

  ராகவா லாரன்ஸ் இருக்காரே!

  ReplyDelete
  Replies
  1. அப்படிப் பட்டவர்கள் ,தண்ணீர் தெரபியை மறந்து விட வேண்டியவர்கள் :)

   இதுக்கு மேலும் வம்பு வராமல் இருக்கணும் :)

   சியே கூட படித்திருக்கக் கூடும் :)

   எண்ணிக்கையா முக்கியம் :)

   அவரோட சேவைத் தொடர வாழ்த்துக்கள் :)

   Delete
 3. வெறும் வயிற்றில் தண்ணீ அடிக்கக் கூடாதின்னு சொல்றாங்களே...! நோயே வராதுன்னா சரி...! ஐந்து மணிக்கு எப்படி? கடை பத்து மணிக்குத்தானே திறப்பாங்க...!

  நீயின்னு நினைச்சு... அவகிட்டே நா ஒன்னும் ஏடாகூடமா நடந்துக்க மாட்டேன்...!

  ஒங்களுக்கு முன்னாடி அடகுக்கடைக்காரன் எங்க நகையெல்லாம் கொள்ளை அடிச்சு வச்சிருக்கிறான்...! இந்தாங்க இந்த சீட்ல உள்ள அட்ரஸ்தான்...! ஒங்களுக்கு என்னென்ன வேணுமோ அங்கே போய் எடுத்துக்கங்க...!

  கிரகம் பிடிச்சிடுச்சிடுச்சுன்னு சொல்லுங்க... கர்ப்பக்கிரகத்துக்குள்ள நுழைந்து விட்டான்...!

  நூறு இளைஞர்கள் என் பின் வரட்டும்ன்னு... கெத்தா அவள் நடந்து போறாளே...! எந்த விவேகானந்தரை அவள் சுயம்வரம் செய்யப் போறாளோ தெரியலையே...!

  த.ம. 2
  ReplyDelete
  Replies
  1. அந்த தண்ணியை அடித்தால் வராத நோய் எல்லாமும் வரும் :)

   அப்படின்னா ,என்னை நினைக்காம .......:)

   அடகு கடையிலேயும் ஒருநாள் நுழையத்தான் போறாங்க :)

   போச்சுடா ,இனி அங்கே தேவதாச லீலைகள் அரங்கேற்றம் ஆகப் போவுதா :)

   அவ கெத்துக்கு நூறு பேர்தானா :)

   Delete
 4. நல்லாவே யோசிக்கிறீங்க ஜி...

  ReplyDelete
  Replies
  1. நல்லா யோசிக்கிற நேரம் ,தமிழ் மண ஒத்துழைப்பு சரியில்லாமல் இருக்கே ,என்ன செய்யலாம் ஜி :)

   Delete
 5. வீட்டுக்கு வந்த ' நவக்கிரக நாயகி..மாமியார்க்கு பிடித்திருக்கான்னு தெரியலையே....ஜி

  ReplyDelete
  Replies
  1. ஏழுக்கும் எட்டுக்கும் இடையில் ஒரு கிரகம் இருக்கே ,அது பிடிக்காமல் போனால் சரிதான் :)

   Delete