20 March 2016

இளம் மனைவிக்கு பிடித்தது :)

                    '' உன் கணவன்கூட  என்னடி சண்டை ?'' 
                    ''அவராவே  ஒரு நாளும் மல்லிகைப் பூ வாங்கி வர மாட்டேங்கிறார் , இட்லி மாவு பாக்கெட் மட்டுமே  வாங்கி வர்றாரே  !''
வயசுப் பொண்ணு ஆடினாதான் நாட்டியமா :)
           ''இந்த வயசுலே ,கோவில்லே  உன்னோட  நாட்டிய அரங்கேற்றம்  வேண்டாம்னு சொன்னேன் ,கேட்டாதானே ?''
            ''இப்போ என்னாச்சு ?''
            '' கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு வந்தா ,இங்கே உண்மையாவே ஒரு கொடுமை ஆடிட்டு இருக்கேன்னு  சொல்றாங்களே !''
ஓமனக் குட்டி மனைவி ஆனதால் கிடைத்த பலன் :)
           '' நான் கேரளப் பெண்ணை கல்யாணம் பண்ணிகிட்டது ,என் பையன் மூலமா உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''
            ''மலையாளம் என் 'தாய் 'மொழி ,தமிழ் என் 'தந்தை 'மொழின்னு அவன் பயோடேட்டாவிலே எழுதி இருக்கானே !''
ஆமை புகுந்த வீடும் 'அ.மீனா ' புகுந்த வீடும் உருப்படாதா :)
         ''மீனாங்கிற என்  மகளோடப் பெயரை மாத்தினாதான் புகுந்த வீட்டுக்குப் போற யோகம் வருமா ,ஏன் ?''
         ''உங்கப் பெயர்  'அ'வில் ஆரம்பிக்கிறனாலே ,பொண்ணுபெயரை அபசகுனமா நினைக்கிறாங்களே !''
இதுக்கு கொசுக்கடியே தேவலையா :)
கடிக்கின்ற நிஜக் கொசுவை அடித்து விட முடிகிறது ...
கடிப்பதுபோல் உணர்ச்சி தரும் மனக் கொசுவை எப்படி துரத்துவது ?

16 comments:

 1. 01. ரெண்டும் ஒண்ணுதான்னு கணக்குப் போட்டானோ ?
  02. அப்படியென்ன வயசு ?
  03. தமிழாளி
  04. ஆமீனாவா ?
  05. கஷ்டம்தான்

  ReplyDelete
  Replies
  1. அதெப்படி,பூவும் ,பூ போன்ற இட்லியும் ஒண்ணாகும் :)
   dd சேனலில் அடிக்கடி ஆட வருவார் ,நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் :)
   அப்படியும் சொல்லிக்கலாமோ :)
   புகுந்த வீடு உருப்படாது என்று சொல்கிறார்களே :)
   இல்லாத ஒன்றை இருப்பது போலவே கற்பனை செய்வதில் மனம் ஒரு கில்லாடி.இல்லையா கில்லர்ஜி:)

   Delete
 2. அப்ப தினமும் மல்லிகைப்பூ வாங்கிட்டு வர்றது... அது உனக்கில்லையா...?

  ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே...?

  ‘சிந்து நதியின்மிசை நிலவினி லே... சேர நன்னாட்டிளம் பெண்களுட னே...’ இவன்தான் ஆதி திராவிடன்...! சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத் தோணிக ளோட்டிவிளை யாடிவரத் துணைதேடி பிள்ளை அலைகிறான்...!

  மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நெஞ்சம் தேனம்மா...! ஆ... மென்...!

  மனமே ஓ மனமே நீ மாறிவிடு...!

  த.ம. 3
  ReplyDelete
  Replies
  1. பூவுக்கு ஒரு வீடு ,மாவுக்கு ஒரு வீடா ,இது அநியாயம் :)

   ஆடுவாங்க ,பார்க்கத்தான் சகிக்காது :)

   அனுபவிக்கப் பிறந்தவன் ,நல்லா இருக்கட்டுமே :)

   மீனா காணாம போனா ,நெஞ்சம் தேளம்மா :)

   கட்டளைக்குக் கீழ்படிய அதென்ன வீட்டு நாயா :)

   Delete
 3. Replies
  1. கிழட்டுக் கட்டைகள் ஆடும் நடனத்தை என்னால் ரசிக்க முடியவில்லையே :)

   Delete
 4. இளம் மனைவிக்கு பிடித்தது என்ன என்று சொல்லும் நீங்க...இளம் மனைவியிடம் உங்களுக்கு பிடித்தது என்ன என்று சொல்லுங்கோன்னா?

  ReplyDelete
  Replies
  1. நன்னா கேட்டேள் போங்கோ ,மனைவியிடம் பிடித்ததுதான் இளம் மனைவியிடமும் பிடித்தது :)

   Delete
 5. அடடா..இளம் மனைவி கேசா......

  ReplyDelete
  Replies
  1. நீங்க வேறென்ன நினைச்சி வந்தீங்க :)

   Delete
 6. Replies
  1. நம் வீட்டிற்கு வராதவரை அமீனாவை ரசிக்கலாம் ,அப்படித்தானே :)

   Delete
 7. கடிப்பது போல் உணர்ச்சி தரும் மனக் கொசுவை எப்படி துரத்துவது?
  அது தான்
  அதிகமாக எண்ணிப்பார்க்கின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. மரணமிலா மனக் கொசுவை விரட்டிவிட முடியும் என்றா நினைக்கிறீர்கள் :)

   Delete
 8. ரசித்தோம் ஜி...அதுவும் இட்லி மாவு பாக்கெட்டை ரசித்தோம்...புவ்வா வாச்சே!!ஹிஹிஹி

  ReplyDelete
  Replies
  1. ரசிக்கலாம் ,நாமும் இட்லி மாவு பாக்கெட்டை வாங்கி போகக்கூடாது :)

   Delete