24 March 2016

தூக்கம் கெட்டதே அவளால்தானே :)

இது ஜோக்காளிக்கு மிகவும் பொருந்தும் :)
                  ''வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்னு நம்புறீங்க ,ஆனால் என் ஜோக் புத்தகத்தை ஏன் படிக்க மாட்டேங்கிறீங்க ?''
                  ''சிரிக்கிற மாதிரி எதுவுமே அதில் இருக்காதே  !''
மாத்தி யோசி  என்பது இதுதானோ :)
                   ''டி வி யில் வர்ற தொடர்களை ராத்திரி ஒருமணி வரைப்  பார்ப்பதால் ,தூக்கம் கெடுதுன்னு மனைவியை திட்டிக்கிட்டே இருந்தீங்களே ..இப்போ எப்படி ?''
                      ''நானும் தொடர்களைப் பார்க்க ஆரம்பித்தேன் ,உடனே   தூக்கம்  அருமையா வருதே !''
இந்த தைலம் அவருக்கு நல்ல மாற்றத்தைக் கொடுத்திருக்கு :)
             ''அதோ ,அங்கே வர்ற வழுக்கைத் தலைக் காரருக்கு கரடி மாதிரி உடம்பு பூரா முடியா  இருக்கே ,எப்படி ஆச்சு ?''        
           ''வழுக்கைத் தலையில் முடி வளரும் தைலத்தால் இப்படி சைடுஎபெக்ட் ஆயிடுச்சாம்  !''
இதுவும் ஒரு நல்ல பொருத்த 'மே ':)
           ''நான்  'மே 'மாதத்தில் பிறந்தது ரொம்ப பொருத்தம்னு ஏன் சொல்றே ?''
          ''ரொம்ப லேட்டா வேலை செய்யுற உன்  'ஆட்டு  மூளை 'யை வச்சுத்தான் !''
தூக்கம் கெட்டது அவளால்தானே :)
உன்னைக் கண்டதுமே 
எனக்குப் புரிந்த உண்மையை ...
ஆராய்ச்சியாளர்கள் இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார்கள் ...
சாக்லேட் ஐஸ்கிரீம் இனிப்பு வகைகள் 
தூக்கத்தைக் கெடுக்குமாம் !

12 comments:

 1. நாலு எழுத்து எழுதப் படிக்கச் தெரிஞ்சா... நானும் முதல்வர் வேட்பாளரா ஆயிருக்க மாட்டேனா... ஏங்கக வவுத்தெரிச்சல தூண்டுறீங்க...! சிரிப்பு வருது சிரிப்பு வருது... சின்னப்பையன் செயல (படத்தை)ப்பாத்து சிரிப்பு வருது...!

  ஆண்களுக்கு யார் தொடர் எடுக்குறாங்க...?! யாரும் மாத்தி யோசிக்க மாட்டேங்கிறாங்க... அத நெனச்சாத்தான் அழுகை அழுகையா வருது...!

  இப்ப... இந்தத் தைலத்த தடவுங்க...நிஜமாவே மாறிடுவீங்க...!

  அப்ப... ஆட்டு மூளைய அளந்து வச்சிருக்காங்க சொல்லுங்க...!

  சரியான டியூப்லைட்டா இருக்கீங்க... அதுனாலதான்... சாக்லேட் ஐஸ்கிரீம நான் சாப்பிடுறேன்... ஏன்னா... நீங்க முழிச்சிருக்க... நான் தூங்கிடக்கூடாதில்ல...!

  த.ம. 2
  ReplyDelete
  Replies
  1. யார் சொன்னது ,முதல்வராக நாலு எழுத்து படிக்கத் தெரிய வேண்டுமென்று:)

   ஆண்கள் உட்கார்ந்து தொடர் பார்த்தால் எடுப்பார்கள் :)

   நாலு கால்லே நடக்க ஆரம்பித்து விடுவாரோ :)

   கறிக் கடைக்கு போனா,அதை அப்படித்தானே வாங்குறோம் :)

   அதுசரி ,நீங்க தூங்கவே வேண்டாம் ,தின்னுகிட்டே இருங்க :)

   Delete
 2. தூக்கம் கெடுவதற்கு இப்படி ஒரு வழி இருக்கா............

  ReplyDelete
  Replies
  1. இதில் கெடாமல் வேறெதில் கெடப் போகிறது :)

   Delete
 3. அய்யோ....ஓட்டுப் பெட்டிய காணேமே........

  ReplyDelete
  Replies
  1. இன்னும் கொஞ்ச நேரத்தில் தானாக வந்து விடும் ..தமிழ் மணச் சோதனை இது :)

   Delete
 4. 01. நான் சிரிக்கிறேன் ஹாஹாஹாஹா
  02. சீரியல் பார்த்தால் தூக்கம் தூக்கலா வருமோ... ?
  03. ஒண்ணுக்கு ஒண்ணு ஃப்ரீ
  04. நல்லவேளை நான் மே மாதம் பிறக்கவில்லை.
  05. இவளும் ஐஸ்க்ரீமோ... ?

  ReplyDelete
  Replies
  1. நான் அழுகிறேன் அழுகிறேன் அழுகே வரலே :)
   அப்படி சொக்கும் :)
   நல்ல ஃ ப்ரீதான் ,கரடியாவதா:)
   விதி விலக்காக அவர் பிறந்து விட்டாரே :)
   உருகும் ஐஸ் ,உருக வைக்கும் ஐஸ் கிரீமா :)

   Delete
 5. சீரியஸ் விஷயங்களைத்தான் ஜோக்காக ரசிக்க முடிகிறது. அது நல்லதும் கூட! சிலருக்குப் புத்தகங்கள் படித்தால் தூக்கம் வரும் - என்னைப்போல!! மாத்தி மாத்தி மருந்து தயார் பன்றாங்களாமா!! அதுசரி, பொருத்தமா, பொறுத்தமா!!! ஹா... ஹா... ஹா.. அவள் அவ்வளவு இனிப்பா!

  தமிழ்மணம் வாக்குக் கொடுக்கிறேன். விழுகிறதா என்றுதான் தெரியவில்லை. தலையெழுத்து. இந்த மாதிரித் திரட்டிகளை நம்பித்தான் நாம் இருக்கிறோம்!

  ReplyDelete
  Replies
  1. நகைச்சுவை பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்தானே :)
   தைலம் தடவாத இடத்தில் இப்படியானால் என்ன செய்வது :)
   பொருத்தமாச் சுட்டிக் காட்டினீங்க ,நன்றி :)
   சுகர் கூடாமல் போனால் சரிதான் :)

   த ம விழுந்து இருக்கலாம் ,ஏனென்றால் ,நாலு நாளாவே ஏழாவது வாக்கு விழுவதில் பிரச்சினை :)

   Delete
 6. இன்ட்லி ஸ்க்ரிப்டை நீக்குங்கள் வலைப்பூ திறக்க வெகு நேரம் ஆகிறது.

  ReplyDelete
  Replies
  1. சுட்டியதற்கு நன்றி ,சரி செய்திருக்கிறேன் ,இப்போ சரியாய் இருக்கா சொல்லுங்க ஜி :)

   Delete