25 March 2016

கைவிடக் கூடாதுன்னு சொன்னது இதைத்தானா :)

 ஆசீர்வாதத்தையுமா  தப்பாய் எடுப்பது :)         
               ''நடிகைக்கு தீட்சை அளித்த குருவுக்கு கண்டனமா ,ஏன்  ?''
              '' முற்றும் துறந்த நிலையை விரைவில் அடைவாய்னு ஆசீர்வதித்தாராமே   !''
கைவிடக் கூடாதுன்னு சொன்னது இதைத்தானா :) 
          ''என்னாலே நம்பவே முடியலே ,டாஸ்மாக் கடையிலே அவ்வையாரின் ஆத்திச் சூடி வரிகளா ?''
           ''ஆமா ,ஊக்க'மது' கைவிடேல்னு எழுதி இருக்காங்களே !''
 ஓரவஞ்சனை செய்வது நியாயமா :)
          ''அனுஷ்காவும் ,ப்ரியாமணியும் தெலுங்கு படங்களில் ஆபாசமா நடிப்பதை  எதிர்த்து  வழக்கு போட்டது சரின்னு சொல்றீங்களே ,நீங்க முற்போக்குவாதியா ?''
         ''அட நீங்க வேற ,தமிழ் படங்கள்லே காட்டாத கவர்ச்சியை அங்கே மட்டும்  காட்டுவது நியாயமான்னுதான் கேட்குறேன் !'' 


தனக்கு தானே தண்டனை அளித்துக் கொள்பவர்கள் :)
கடவுளைக் கும்பிடும்போது 
கன்னத்தில் போட்டுக் கொள்வதற்கு ...
'என் தப்புக்கு நானே கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன் 
நீயும் அறைந்து விடாதே ' என்பதுதான் காரணமா ? 

14 comments:

 1. 01. இது நடிகையோட அன்றாட வாழ்க்கைதானே.. இதுக்குப் போயி அவரைப்போட்டு.... பாவம்
  02. இன்றைய ஆட்சி லட்சணம் அன்றைக்கே தெரிஞ்சு இருக்கு....
  03. அதானே எதுக்கு ஓரவஞ்சனை
  04. இருக்கலாம் ஜி

  ReplyDelete
  Replies
  1. ஏற்கனவே ஆசீர்வாதம் வாங்கியிருக்காரா:)
   அவ்வை தீர்க்கத்தரிசியாய் இருப்பார் போலிருக்கே :)
   தமிழ் ரசிகர்கள் பொங்கி எழவேன்டாமா :)
   அடுத்தவன் கன்னத்தில் போடாமல் இருந்தால் சரி :)

   Delete
 2. ஆஹா... துறவியின் பேராசை! நான் மது என்று யாரோ ஒரு பெண்ணைப் பற்றிச் சொல்லி இருக்கறதா நினைத்தேன்!! அட, எங்க காமிச்சா என்ன? அங்க போய்ப் பார்க்க வேண்டியதுதானே!!! இருக்குமோ!!!!

  இன்று குட்ஃப்ரைடே ஸ்பெஷல். தம வாக்குகள் (எனக்கு) சட் சட்டென விழுந்தன!

  ReplyDelete
  Replies
  1. ஆசையே கூடாதுன்னு சொல்பவரின் பேராசை :)
   அப்படியும் இருக்குமோ :)
   அதானே ,இதுக்கு மொழியென்ன தடையா :)
   இந்த சந்தேகத்தை யார் தீர்ப்பார் :)

   பார்ப்போம் ,இன்றாவது அந்த ஏழாவது வாக்கு விழுகிறதா என்று :)


   Delete
 3. ஆனால் உங்கள் தளம் திறக்க, பின்னூட்டம் இட எல்லாவற்றுக்கும் அநியாய நேரம் எடுத்துக் கொள்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நேற்றே முரளிதரன் ஜி இதை சொல்லியிருந்தார் ,சரி செய்து இருக்கிறேன் ,இப்போ சரியாய் இருக்கா :)

   Delete
 4. ஆடையின்றிப் பிறந்தோமே... ஆசையின்றி பிறந்தோமான்னு சோதனை...! முற்றும் துறந்து பிறவிப்பயன அடைஞ்ச நடிகை... முக்தி அடையட்டும்...!

  ஊக்க மருந்து உட்கொண்டு விளையாடக்கூடாதுங்கிறாங்களே...! அவ்வையாரின் சொல் பேச்சைக் கேட்காதவர்களா...?

  சரிஞ்ச மார்கட்ட தூக்கி நிறுத்த விடமாட்டீங்களே...!

  கடவுளே...! என்ன நம்பாம... உன்ன நம்பி வந்து... பெரிய தப்புக் கணக்கு போட்டுட்டனே...!

  த.ம. 2

  ReplyDelete
  Replies
  1. ஆடையும் ,ஆசையும் 'இடையில் 'வந்ததுதானே ,வந்த வழியே போய்விடும் :)

   இது ஊக்க பானமாச்சே :)

   என்ன செய்தாலும் நடக்காது சரிந்தது சரிந்ததுதான் :)

   இப்போதாவது ஞானம் வந்ததே :)

   Delete
 5. ரசித்தேன்...
  அனுஷ்கா பிரியாமணி ஓரவஞ்சனை ஜி...
  கன்னத்தில் போடுவது இதற்காகத்தான் இருக்கும்...

  ReplyDelete
  Replies
  1. நாம் வேண்டுமானால் இந்த அநீதியை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரலாமா :)

   போடுவது இல்லை ,போட்டுக் கொள்வது என்று சொல்லுங்க ,வம்பாயிடப் போவுது :)

   Delete
 6. குருவின் ஆசீர்வாதம்
  குருவைப் பற்றி
  விளக்கம் தருகிறதே!

  ReplyDelete
  Replies
  1. குருவின் உள்ளத்தில் உள்ளதுதானே நாக்கில் வரும் :)

   Delete
 7. ரசித்தேன் நண்பரே!
  த ம 6

  ReplyDelete
  Replies
  1. நவீன ஆத்திச் சூடி அருமைதானே :)

   Delete