29 March 2016

கணவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க :)

பீரோ சாவியை வேண்டுமானால் வாங்கிக்குவாளோ:)
        ''உன் மனைவி ஜென்மத்துக்கும் சமையல் செய்ய மாட்டாள் போலிருக்கா ,ஏன் ?''
        ''காக்கா வலிப்பிலே துடிக்கிறப்போ கூட ,இரும்பு கரண்டியை கையிலே வாங்க மாட்டேங்கிறாளே !''
காதலனை இப்படியா நோகடிப்பது :)
                 ''இவரோட காதலி , இதைப் படித்தால் என்ன வேண்டிக்குவா  ?''
               '''நல்ல வேளை, வண்டிக்கு AK கிடைச்சமாதிரி ,இவன் கைக்கு AK47 துப்பாக்கி கிடைக்காம  இருக்கணும்னுதான் !''
கணவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க :)
             "எதுக்கு இரண்டு தோசைக்கல் வாங்குறே ?"
            "என்ன செய்றது ?உங்களுக்கு சுடச் சுட தோசை வேணும் ,தோசை வேகிற வேகத்தைவிட, நீங்க அதை உள்ளே தள்ளுற வேகம் அதிகமா இருக்கே  !"'
இப்படித் தானே படங்கள் வந்துக்கிட்டிருக்கு :)
              ''அந்த இயக்குனடரோட ஹீரோ ஹீரோயினைப் பற்றி ஒரே வரியிலே எப்படி சொல்லலாம் ?''
              ''ஹீரோவுக்கு 'துணி 'ச்சல் அதிகமாவும் ,ஹீரோயினுக்கு 'துணி 'கம்மியாவும் இருக்கும் !''
பழி ஓரிடம் ,பாவம் ஓரிடம் :)
அடாவடியாய் பேசுவதென்னவோ நீ ...
பாதிக்கப் படுவது மட்டும் நாங்களா ?
முப்பத்து இரண்டு பற்கள் கேட்டன ஒற்றை நாக்கிடம் !


20 comments:

 1. Replies
  1. நடப்பும் அப்படித்தானே இருக்கு :)

   Delete
 2. பாவம்!

  இதுவும் பாவம்தான்!

  அடப்பாவமே... என்னை மாதிரி போலேருக்கு அவர்!

  அடப்பாவி மக்கா!

  ரொம்பவே பாவம்!

  ReplyDelete
  Replies
  1. எல்லா பாவமும் இன்று ஒரே இடத்தில் சேர்ந்து போச்சே :)

   Delete
 3. வலிப்பிற்கு இரும்புக் கரண்டியைப் பிடித்து ஒன்றும் பயனில்லை என்ற உண்மை அறிந்தவரோ...?

  இதுதான் நெத்தியடியோ...?

  வேகம்... வி(We)வேகம் இரண்டும் வேண்டும்... அதான் இரண்டு தோசைக்கல்...!

  ஹீரோயின் 'துணி' கம்மியாகி இப்ப மம்மி ஆயிட்டாங்களாம்...! ‘துணி’வே(ற) துணை...!

  நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்... நாளோடும் பொழுதோடும் உதை வாங்க வேண்டும்...!

  த.ம. 3

  ReplyDelete
  Replies
  1. இப்படியாவது கரண்டியைக் கை மாற்ற நினைக்கிறார் போலிருக்கு :)

   துப்பாக்கி கிடைத்தாலும் நெத்தியில் தான் சுடுவாரோ :)

   ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுக்கமாட்டாரோ :)

   டம்மி ஆகாமல் போனால் சரி :)

   இதுக்குத்தான், நாக்கை ஓட்ட நறுக்கிடுவேன் என்று சொல்கிறார்களோ :)

   Delete
 4. சகோதரா அனைத்து வரிகளும் அருமை.
  சிரிப்பு வருகிறது.
  நன்கு ரசித்தேன்.
  https://kovaikkavi.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. இரண்டு தோசைக் கல்லுக்குப் பதிலா ,ஒரே புரோட்டா கல்லை வாங்கியிருக்கலாமா :)

   Delete
 5. நவீன தொழினுட்ப வளர்ச்சியில் புதுப் பொலிவுடன் மீண்டும் இணையத்தை கலக்க வருகிறது ​தமிழ்BM இணையம். உலக இணையதளப் பெருக்கத்தில் உங்கள் இணையதளங்களை விரைவில் வாசகர்கர் வசப்படுத்த எம்மால் முடியும்.
  ஒருமுறை எமது இணையத்துடன் இணைந்தால் உங்கள் இணையப்பக்கங்களை நூற்றுக்கு மேற்பட்ட வாசகர்கள் பார்வையிடச் செய்ய நாம் தயார்.
  பதிவுகளுக்கு முந்துங்கள்
  எமது இணையம் தொடர்பான பழுதுகள், முறைப்பாடுகளை உடனடியாக பதிவு செய்யுங்கள். 24 மணி நேரத்துக்குள் எங்கள் தொழினுட்ப அலுவலர்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு உதவுவார்கள்..
  நன்றி
  தமிழ்BM
  www.tamilbm.com

  ReplyDelete
  Replies
  1. காலத்தின் தேவை உங்க தளம் ,வளர வாழ்த்துக்கள் !என் பதிவும் இணைந்தால் ,உங்களுக்கு பாதிப்பு ஒன்றும் வராதுதானே:)

   Delete
 6. 01. இது காரியக்கார காக்கா
  02. இவள்தான் மனைவி.
  03. தோசை சாப்பிடக்கூட உரிமை இல்லையா ?
  04. நல்ல வியாபாரிதான்.
  05. ஸூப்பர் ஜி

  ReplyDelete
  Replies
  1. பெண் காக்காவா.ஆண் காக்காவா :)
   மனைவியும் ஆயாச்சா ,இல்லை கழட்டி விட்டாச்சா :)
   இவ்வளவு வேகமா தின்ன உரிமை இல்லை :)
   இல்லைன்னா,சினி ஃபீல்டில் தாக்கு பிடிக்கமுடியுமா :)
   ஒற்றை நாக்கையும் அறுத்து விடலாமா :)

   Delete
 7. தோசை கல் 2 காமெடியா இருந்தாலும் சரியான யோசனை தான்.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு ஆறின தோசைப் பிடிக்காதோ ஜி :)

   Delete
 8. Replies
  1. ஒரு ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ண முடியுமா ?அநியாயத்துக்கு பொய் சொல்றாரே ,இவரை எப்படி ரசீத்தீர்கள் :)

   Delete
 9. நண்பரே ரசித்தேன் சிரித்தேன்

  ReplyDelete
  Replies
  1. #முப்பத்து இரண்டு பற்கள் கேட்டன ஒற்றை நாக்கிடம் !#
   கேள்வியைப் பார்த்து ,நீங்க 32 பல் தெரிய சிரித்தீர்களா:)

   Delete
 10. உள்ளே தள்ளுர வேகம் அதிகமா....??? ஆகா.....

  ReplyDelete
  Replies
  1. அதுக்கு நீங்க ஏன் வாயைப் பிளக்குறீங்க :)

   Delete