3 March 2016

புனிதமான காதலின் இலக்கணம் :)

 காயமே இது பொய்யடா :)
               '' கிழிஞ்சு இருக்கிற  என் சட்டை ,பனியனைப்பார்த்தாலே ,என் மனைவியோட கோபம் உனக்கு புரிந்து இருக்குமே?'' 
             ''அட நீ வேற ,நான் படுற ஊமை அடியை  எப்படி  காட்ட முடியும் ?'' 

மனைவியின் உடல் மொழியும்  பேசுமோ  :)
               ''வள்ளுவர் இரண்டு அடியில் புரிய வைப்பார் ,மனைவி ஒரே அடியில் புரிய வைப்பார்னு சொல்றாங்களே  ,உண்மையா ?''
                    ''அதெல்லாம் பொய் ,மனைவி முறைச்சாலே எனக்கு புரிஞ்சிடுதே !''

Maal சென்று தேடினால் இவர் கண்ணில் படுவாரா :)
          ''என் அருமை மவனே... நான் கும்பிடுற முருகன் எங்கே இருக்கார்னு கேட்கிறீயே ,நீ எங்கெல்லாம் தேடுனே ?''
              ''மால் முருகானு நீங்க பாடுறீங்களேன்னு எல்லா MALLலேயும் தேடி பார்த்துட்டேன்பா !''

முதல் ராத்திரியிலாவது விழித்திருந்திருப்பாரா :)
       '' ஆபீஸ் நேரத்திலே ,நான் முடி வெட்டிக்க வந்தா ,உனக்கென்னப்பா  கஷ்டம் ?''
        ''ஆபீஸ் பழக்க தோஷத்திலே தூங்கி வழியுறீங்களே !''

புனிதமான காதலின் இலக்கணம் :)
   காதலன் காதலியை கைவிடக் கூடாது ...
  இதைவிட முக்கியம் ...
  காதலன் காதலி மேலும்  கைவிடக் கூடாது !

14 comments:

 1. அடேடே... அவர் கஷ்டம் தனிக் கஷ்டம்!

  முதல்ல வாங்கின அடி ஞாபகத்துலயே இருக்கே...!

  21 ஆம் நூற்றாண்டின் இணையற்ற மகன்!

  சலூன்ல பாதிப் பேர் தலையில கை வைத்ததும் தூங்கித்தான் போயிடறாங்க...

  ம்ம்ம்ம்....

  ReplyDelete
  Replies
  1. வெளியே காட்டிக்க முடியாம இருக்காரா :)
   மறக்க முடியுமா :)
   அவனுக்கு பிடித்த இடத்தில்தானே தேடுவான் :)
   அதன் ரகசியம் என்னவோ தெரியவில்லை :)
   உண்மையன்றி வேறில்லைதானே:)

   Delete
 2. Replies
  1. கடைசி படத்தையும்தானே :)

   Delete
 3. குடும்பத்துக்குள்ள நடக்கிறது வெளியே தெரியக்கூடாதாம்... ஊமைக்குத்தா குத்துறாய்யா... குத்துறா...உள்குத்து இதுதானா...?

  இதுக்குத்தான் முறைமாமனக் கட்டிக்கிட்டதோ...?

  வள்ளி இருக்கிற இடத்திலயும் காணாம்... தெய்வாணை இருக்கிற இடத்திலயும் காணாம்... கோல்‘மால்’ முருகனை எங்கெல்லாம் தேடுவதோ...?

  தூங்கும் போதும் ஏதாவது... யாராவது... வேலை செய்யனுங்கிற நல்ல எண்ணம் இருக்கிறது தப்பா...?

  காதலிக்கு மேலும் நல்லதுதான்...! காதலன் ஆனா Male-க்கு இது நல்லதா...?

  த.ம. 3

  ReplyDelete
  Replies
  1. சத்தம் வேறு வெளியே போகக்கூடாதாம் :)
   இவள் அல்லவோ உண்மையில் முறைப் பெண் :)
   பழம் கிடைக்காத கோபத்தில் பழமுதிர்சோலைக்குப் போயிருப்பாரோ :)
   அது சரி எல்லோரும் தூங்கிட்டா வேலை நடக்காதே :)
   விஷயம் பொண்ணு வீட்டுக்கு தெரிஞ்சா ,maleளோட மேலுக்கு நல்லதில்லையே :)

   Delete
 4. Replies
  1. இந்த இலக்கணம் சரிதானே ,வாத்தியார் அய்யா :)

   Delete
 5. 01. இவன்பாடு பரவாயில்லையோ செலவு மிச்சம்.
  02. இவனோட அனுபவம் வள்ளுவருக்கு வாசுகி கொடுத்திருக்க மாட்டார்.
  03. அப்ப ரஜினி முருகா...ன்னு பாடினால் ?
  04. வீட்டுல எப்படி ?
  05. உண்மைதான் அப்புறம் காலால் உதை வாங்க வேண்டியது வரும்.

  ReplyDelete
  Replies
  1. சட்டை பனியன் வாங்கினால் போதும் :)
   பாவம் அந்த பத்தினி:)
   தியேட்டரில் தேட வேண்டியதுதான் :)
   எப்படி தூக்கம் வரும் :)
   வயிற்றிலே சிசு உதைக்குமே ,அதுவா :)

   Delete
 6. ஹஹஹஹ் அனைத்தும் ரசித்தோம் அது சரி ஜி நீங்க வாங்கின முதல் அடி கூட நினைவிருக்கா...உங்களுக்கு ஒரு அடியா இரண்டா இல்லை முறைப்பா..ஹிஹிஹி
  ''வள்ளுவர் இரண்டு அடியில் புரிய வைப்பார் ,மனைவி ஒரே அடியில் புரிய வைப்பார்னு சொல்றாங்களே ,உண்மையா ?''// இதை மதுரைத் தமிழனிடம் கேட்டால் தெரியும்.!!!!

  ReplyDelete
  Replies
  1. ஒரு அடி ஸ்கேல் வாங்கியது ஞாபகம் இருக்கு :)

   Delete
 7. காதலனை விட காதலிகள்தான் அதிகமா..கைவிட்டதாக ஒரு புள்ளி விபரம் சொல்லுதே ஜி

  ReplyDelete
  Replies
  1. கல்யாணம் என்று வரும்போது ,பெத்தவங்க வற்புறுத்தலுக்கு பயந்து ,அதிகம் கைவிடுபவர்கள் நீங்க சொன்ன மாதிரி பெண்கள்தான் :)

   Delete