8 March 2016

இப்படி நடந்துக்கலாமா,அப்பன் :)

இந்த கட்சி கரையேறுமா :)          

         ''அந்த புதுக் கட்சியில் நிறைய பேர் சேர்றதுக்கு என்ன காரணம் ?''

         ''முதலில் வரும் 234 பேர்களுக்கு MLA சீட் உறுதின்னு சொல்லி இருக்காங்களே !''

 1. இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 'கூறு கெட்ட அப்பன் 'களுக்கு இந்த ஜோக் அர்ப்பணம் !
  இப்படி  நடந்துக்கலாமா,அப்பன் ?
               ''அடி செருப்பாலே ,என்கிட்டேயே வந்து 'உங்க மகளை காதலிக்கிறேன் ,சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்க 'ன்னு சொல்றீயே ,உனக்கு யார்ரா இந்த தைரியம் கொடுத்தது ?''
               ''உங்க மகதான் ...அவ சம்பாத்தியத்திலே உட்கார்ந்து சாப்பிடுற உங்களுக்கு , கல்யாணம் பண்ணி வைக்கிற எண்ணம் இல்லையாமே !''

  ஐந்தறிவுக்கு உள்ள விசுவாசம் ஆறறிவுக்கு இல்லையே !
  விசுவாசம் மிகுந்தது நாய் மட்டுமல்ல ...
  கிளியும்தான் என்று நிரூபித்து உள்ளது ...
  சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடந்து இருக்கும் ஒரு கொலை சம்பவம் ...
  நீலம்சர்மா என்னும் பெயர் கொண்ட பெண்மணி கொலை செய்யப் பட்டுள்ளார் 
  வீட்டில் இருந்த நகை பணம் கொள்ளை போயுள்ளது ...
  துப்பு கிடைத்த விதம் பற்றி கொலையான பெண்மணியின் கணவர் கூறியது ...
  என் சகோதரி மகன் அசுதோஷ் சர்மாவை (30)வளர்ப்பு மகன் போல் பாவித்து வீட்டில் வளர்த்து வந்தேன் ...
  என் மனைவி கொலை விசாரணைக்காக போலீசார் வரும்போது ...
  என் மனைவி செல்லமாய் வளர்த்து வந்த கிளி ...
  'ஆஷு,ஆஷு 'என்று கத்தியதுடன்..இயற்கைக்கு மாறாக விநோதமாக செய்கைகளுடன் சத்தம்போட்டது ...
  இதை போலீசாரிடம் கூறினேன்...
  அஷுதோசை விசாரித்ததில் குற்றத்தை அவன் ஒப்புக் கொண்டானாம்!
  குற்றம் செய்து தப்ப நினைக்கையில் வீட்டு நாய் குறைத்ததாம் ...
  அதையும் கொன்றிருக்கிறான் 'பசுத்தோல் போர்த்திய புலி 'அஷுதோஷ்!
  ஐந்தறிவு ஜீவன்கள் கூட மனிதனுக்கு விசுவாசமாய் இருக்கின்றன ...
  ஆறறிவு உள்ளவன்தான் வளர்ப்பு மகனாய் இருந்தாலும் ...
  விசுவாசமின்றி கொலையும் செய்து ,கொள்ளையும் அடிக்கிறான் !


  தள்ள வேண்டியதை தள்ளினா....?
              ''புறம்போக்குப் பெட்டிக் கடைக்கு எப்படி கரெண்ட் கனெக்சன்  தந்தாங்க ?''
                ''அட நீங்க வேற ,தள்ள வேண்டியதை தள்ளினா தள்ளு வண்டிக்குக் கூட தருவாங்களே !''

  இந்தியா வல்லரசு ஆவது ஆகாயத்தில் தெரிகிறது !
  விமானத்தில் ஏறி இறங்குபவர்களை விட 
  விமானம் 'ஏறி இறங்கு'வதைப் பார்ப்பவர்களே அதிகம் ...
  வல்லரசு ஆகணும்னா விகிதாச்சாரம் தலை கீழாய் மாறணும் !


29 comments:

 1. நம்பறதுக்கும் ஆள் இருக்காங்க பாருங்க!

  ஐயோ பாவம்!

  அது ஏன் ஐந்தறிவு விசுவாசத்தை ரெண்டு வாட்டி சொல்லியிருகீங்க!

  ஹா... ஹா... ஹா...

  ம்ம்ம்ம்...

  தம இன்னும் சப்மிட் ஆகாததால் அப்புறம்தான் வோட்டுப் போடணும்!

  ReplyDelete
  Replies
  1. முந்துபவர்களுக்கே முதலிடம் ,நல்ல வியாபாரம் :)

   இப்படி அப்பனும் இருக்கத்தானே செய்றான் :)

   சரி பண்ணி விட்டேன் ஜி :)

   வாக்களித்தமைக்கு நன்றி :)

   Delete
 2. Replies
  1. 01. ஆஹா ஸூப்பர் ஐடியா ஜி
   02. கேள்வி...... நியாயமாகத்தான்....... தோணுதூ.....
   03. வேதனையான விடயம்
   04. ஹாஹாஹா ஸூப்பர் தள்ளு.
   05. உண்மையான விடயம் ஜி

   Delete
  2. தேர்தல் வியாபாரம் சூடு பிடிச்சுருச்சு :)
   இதை விட யார் கேட்க முடியும் :)
   ஆறறிவு என்று திருந்துமோ :)
   எங்கேயும் வெல்லும் இந்த தள்ளு :)
   ஆகும்னு படலே:)

   Delete
  3. இதென்ன டபுள் OK:)

   Delete
 3. Replies
  1. பார்த்தேன் ,நன்றி :)

   Delete
 4. முதலில் வருகிறவருக்கு முன்னுரிமைன்னு சொல்லியும்... இன்னும் தொகுதிகள் எண்ணிக்கைக்குக் கூட ஆட்கள் வரலையே...!

  கல்யாணம் பண்ணி வச்சா வீட்டோட மாமனாரா என்னையும் வச்சுக்கிறியா...?

  கிளிப்பேச்சு கேட்க... வா... ஆறறிவு யோசிக்க வேண்டியது...!

  யார் தருவார் இந்த அரியாசனம்...!

  ஏற இறங்க பார்ப்பது ஒழிய வேண்டும்...!

  ReplyDelete
  Replies
  1. ஆளுக்கு இரண்டு தொகுதி கொடுத்துட வேண்டியதுதான் :)

   இதை முன்னாடியே கேட்க வேண்டியதுதானே :)

   சாட்சி சொல்லுமோ கிளியும் :)

   நாமே எடுத்துக்க வேண்டியதுதான் :)

   நாம முதலில் அதை கடைப்பிடிப்போமா :)

   Delete
 5. ரசித்தேன்
  வாக்குஅளிக்கஇயல வில்லை நண்பரே
  சர்வர் எரர் என்றே வருகிறது

  ReplyDelete
  Replies
  1. பொறுத்தார் பூமி ஆழ்வார்ன்னு த ம சொல்லுதே :)
   நன்றி !

   Delete
 6. கூறுகெட்ட அப்பனில்லேஜி..விவரமான அப்பன்.....

  ReplyDelete
  Replies
  1. வீட்டோட மாமன் அப்படித்தானே :)

   Delete
 7. ரசித்தேன் ஐயா
  வாக்கு 6

  ReplyDelete
  Replies
  1. நீங்க பல விமானத்தில் ஏறி இறங்கி இருப்பீங்க ,எகிப்து செல்ல !அந்த அனுபவத்தை எழுதலாமே :)

   Delete
 8. தள்ள வேண்டியதை தள்ளினா////உண்மை....

  ReplyDelete
  Replies
  1. தள்ளு வண்டியில் ,கரண்டுக்கும் வை பை கனெக்சன் தருவார்களோ :)

   Delete
 9. போட்டியிட சீட் தானே உறுதி பதவி இல்லையே
  அப்பன் கல்யாணம் செய்து வைக்க வில்லை என்றால் கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமே
  என்ன சொல்ல வருகிறீர்கள் எக்செப்ஷன்ஸ் ஆர் நாட் ரூல்ஸ்
  தள்ள வேண்டியதைத் தள்ளினா தள்ளு வண்டி வார்த்தை விளையாடல் ரசித்தேன்
  அதிகம் பேர் விமானத்தில் பயணித்தால் வல்லரசு...?

  ReplyDelete
  Replies
  1. அதுக்கே எத்தனை பேர் அலையுறான் தெரியுமா :)
   அதுதான் நடக்கப் போவுதே :)
   விதிவிலக்கை கணக்கில் 'கொல்லக்'கூடாதா :)
   அதை தள்ளுங்க :)
   விமான பயணிகள் பெருகினால் நாடு வல்லரசு ஆகாதா :)

   Delete
 10. அனைத்தும் அருமை! அதிலும் இரண்டாவது ஜோக் செம!
  த ம 7

  ReplyDelete
  Replies
  1. அப்பன்காரன் அடிக்க வரப் போறான் :)

   Delete
 11. Replies
  1. உண்மையான நிகழ்ச்சிதான் இது :)

   Delete
 12. தள்ளு வண்டி ...தள்ள வேண்டிய இடத்துல தள்ளினால்...வார்த்தை விளையாடல்....ஹஹஹ அனைத்தையும் ரசித்தோம்...குறிப்பாக ஐந்தறிவுக்கு உள்ள விசுவாசம் கூட ஆறறிவுக்கு இல்லையே என்பது கூடுதல் போனஸ் க்ருத்து...

  ReplyDelete
  Replies
  1. மனம் கனிந்து தாராளமாய் தந்த போனசுக்கு நன்றி :)

   Delete
 13. என்ன ஜி ஓட்டு போட முடியலியே..ஓட்டு மெஷின்??!!

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மணச் சோதனை என்று தீருமோ :)
   ஆனாலும் விடாமல் போட்ட ஓட்டுக்கு நன்றி :)

   Delete
 14. சிரிக்கவும் சிந்திக்கவும்
  அருமை.அன்பரே

  ReplyDelete