1 April 2016

காதல் சின்னம் உணர்த்தும் பாடம் :)

யார் ஜெயித்தாலும் ,தோற்றாலும் :)       
           ''என்ன சொல்றீங்க ,இந்த  தேர்தலால்  லாபம் அடையப் போறது தேர்தல் கமிஷன்தானா ?''
           ''ஆமா ,அனைத்து தொகுதியிலும் போட்டியிட்டு டெபாசிட் தொகையை பல கட்சிகள் இழக்கப் போவுதே  !''
விடாக் கண்டனும் கொடாக் கண்டனும் :)
        ''உன் கல்யாணம் என்னைக்குன்னு சொல்லு ?''
        ''ஃகிப்ட்  வாங்க  மறந்துறக் கூடாதுன்னு தானே கேட்கிறே ?''
        ''அட நீ ஒண்ணு, ,என்னோட வாழ்த்தை   smsல் அனுப்பலாம்னு  கேட்டா ஏதேதோ கற்பனை பண்றீயே !''
காதல் சின்னம் உணர்த்தும் பாடம் :)
             "மனைவிக்காக தாஜ் மஹாலை கட்டிய ஷாஜஹானை ,சிறை 
வைத்தது அவர் மகன்தானாமே ,இதிலிருந்து என்ன தெரியுது ?"
            "நல்ல கணவனா இருந்தா மட்டும் போதாது ,நல்ல அப்பனாவும்  இருக்கணும்னு  தெரியுது !"  
பொண்ணு பிடிக்கலைன்னு இப்படியும்  சொல்லலாமா :)
              ''இனிமேல் பொண்ணுப் பார்க்க வர்றவங்களுக்கு மட்டமான ஸ்வீட் .காரம் கொடுத்தா போதுமா  ,ஏன் ?''
              ''ஏற்கனவே பார்த்துட்டு போனவங்க 'ஸ்வீட் .காரம் மட்டும்தான் பிடிச்சது 'ன்னு சொல்றாங்களே !''
மழை அளவு குறைவு தரும் பாடம் :)
ஊரிலே ஒரு நல்லவர் இருந்தாலும் மழை பெய்யுமாம் ...
'நான் இருப்பதால்தான் மழை பெய்கிறது 'என 
எல்லோரும் நினைத்துக் 'கொல்' கிறார்கள் !

16 comments:

 1. கமிஷனுக்கே கமிஷனா!

  இப்போ வாட்சாப்ல வாய்ஸ் மெஸேஜ்ல கூட அனுப்பலாம்!

  அது உண்மை.

  இனிமே அதுவும் பிடிக்கலைன்னு சொல்வாங்களோ!

  ம்ம்ம்ம்..

  ReplyDelete
  Replies
  1. பறிமுதல் செய்த தொகையையும் இதோட சேர்த்துக்கலாமோ :)

   அனுப்பலாம் என்றால் ,கஞ்சப் பிசினாறியிடம் நெட்கார்ட் இல்லையே :)

   இதுக்கு சரித்திரக் குறிப்பு இருக்குமா :)

   அப்படி சொன்னால் கூட ஆறுதலாய் இருக்குமோ :)

   இன்றைய இரண்டாவது பாடம் உங்களுக்குப் பிடிக்கலையா :)

   Delete
 2. தோற்றாலும் வென்றாலும் போட்டியில் கலந்து கொண்டோம் என்பதுதானே பெருமை...! கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலன்னு சொல்லிக்க வேண்டியதுதான்... போனால் போகட்டும் போடா... இந்த பூமியில் தேர்தலில் போட்டியிட்டு வாழ்ந்தவர்ன்னு பெயர் எடுத்துட்டோமிலல...!

  என்னோட அன்புதான் பெரிசுன்னு அடிக்கடி சொல்லுவியே... அதைவிட என்னதான் நான் பெரிசாக் கொடுத்திடப்போறேன்... அதுக்காக நீ பிரியாணி போடுறத மட்டும் நிறுத்திடாதே...!

  அப்பா... உலக அதிசயத்த கட்டி நீ மட்டும் பேரு வாங்கினாப் போதுமா...?! இருக்கிற பணத்த எல்லாம் காலி பண்ணிட்டா எ பொண்டாட்டிக்கு நா என்னத்த கட்டுறது...?

  அதானே...! எதுவுமே பிடிக்கலைன்னு சொல்லனும்...!

  இனிமே யாரும் இதுமாதிரி நினைக்கக் கூடாதுன்னுதான் மழை பெய்யல...!

  த.ம. 3

  ReplyDelete
  Replies
  1. இந்த அற்பப் பெருமை தேவையா :)

   பிரியாணி படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பறேன் ,தின்னுத் தொலை :)

   அதானே ,தாஜ் மகாலா சோறு போடும் :)

   கேவலப் படுத்தவும் ஒரு அளவு வேணாம் :)

   இனிமேலாவது , யாரும் நினைத்துக் கொல்லாமல் இருப்பார்களா :)

   Delete
 3. 01. இது நடந்தால் பகவான்ஜிக்கு ஒரு கிலோ ஸ்வீட் இலவசம்
  02. இனிமேல் இதுதான் நடக்கும்.
  03. உண்மைதான் அவர் அப்பாவாக சரியாக நடந்தாரா ? என்பதை நாம் நினைக்க வில்லையே...
  04. ஸ்வீட்ல உப்பு போட்டு கொடுக்க சொல்லுங்க,.,,,
  05 அவரையும் கொன்னுட்டு ? மழைக்கு என்ன செய்யிற’’தூ ?

  ReplyDelete
  Replies
  1. ஸ்வீட்டுக்கு இப்போதே சொல்லி வைத்து விடுங்கள் :)
   ஆளுக்கொரு திசையில் இருப்பதாலா :)
   சரித்திரமே சொல்லுதே :)
   நல்லாயிருக்குன்னு சொல்வாங்களா :)
   ஏன் கிட்டேயே கேட்கிறீங்களே ....தூஊஊ ,அவரைப் போய் கேளுங்க :)

   Delete
 4. தாஜ்மஹாலை ரசித்தேன்...

  அனைத்தும் அருமை ஜி.

  ReplyDelete
  Replies
  1. எது எப்படி போனாலும் தாஜ் மகாலை ரசிக்காமல் இருக்க முடியுமா :)

   Delete
 5. தெருவுக்கு தெரு..ம்ம்மி சாராயக்கடை இருக்கும்போது எல்லா அப்பன்களாலும் நல்ல அப்பன்ளாக இருக்கமுடியாதே!..

  ReplyDelete
  Replies
  1. கெடுவதற்கு வாய்ப்பு இருந்தும் ,கெடாமல் இருப்பவனே நல்லவன்,நல்ல அப்பன் :)

   Delete
 6. ஹஹஹஹஹ்ஹ...

  எஸ் எம் எஸ் வாழ்த்தும், தாஜ்மகாலையும் ரசித்தோம்...

  ReplyDelete
  Replies
  1. ரசித்ததுடன் நில்லாமல் த ம வாக்களித்தமைக்கு நன்றி :)

   Delete
 7. காதல் சின்னம் உணர்த்தும் பாடம் :)
               "மனைவிக்காக தாஜ் மஹாலை கட்டிய ஷாஜஹானை ,சிறை 
  வைத்தது அவர் மகன்தானாமே ,இதிலிருந்து என்ன தெரியுது ?"
              "நல்ல கணவனா இருந்தா மட்டும் போதாது ,நல்ல அப்பனாவும்  

  சற்றே யோசிக்க வேண்டிய விஷயம்

  ReplyDelete
  Replies
  1. ஷாஜகான் ..புதிய கோணம் என்று யாராவது யோசித்து புத்தகம் போட்டால் நல்லது அஜய் ஜி :)

   Delete
 8. நீங்களே அந்த புத்தகத்தை வெளியிடுங்கள் நண்பரே....

  ReplyDelete
  Replies
  1. இன்று இங்கே மதுரையில் நடக்கும் பேராசான் மீரா விருது வழங்கும் விழாவுக்குப் போறேன் ,சக பதிவர்களிடம் ஷா பு கோ சம்பந்தமாய் ஆலோசனை செய்கிறேன் :)

   Delete