11 April 2016

மேனேஜர் சிடுமூஞ்சியாய் இருப்பதும் முன்எச்சரிக்கைதானா :)

           ''மேனேஜர் எப்ப பார்த்தாலும் சிடுமூஞ்சியாவே இருக்காரே ,ஏன் ?''
          ''சிரிச்சுப் பேசினா  மூஞ்சியை நக்க ஆரம்பிச்சிடுதாமே சில ஜென்மங்க !''
சென்ற வருடம் , சிரிக்க வைக்கிற ஜோக்குக்கு பதிலா சிந்திக்க வைக்கிற ஒரு கேள்வியைக் கேட்டேன் ,பதில் ஞாபகம் வருதா  :)
           ஈருடல் ஓருயிர் என்ற தலைப்பில் சிறந்த தம்பதியரைத் தேர்ந்து எடுக்கும் போட்டி ... கடைசி சுற்றில் இரு ஜோடிகள் ஒரே மதிப்பெண் பெற்று சம நிலையில் இருந்தார்கள் ....
முதல் பரிசுக்கு தகுதி பெற ஒரு போட்டி ....
தம்பதிகளுக்கு ஒன்று வீதம் இரண்டு ,சைனா 'மக்'கில் ஜிகர்தண்டா ஊற்றி ,அதை தம்பதிகள் எப்படி சாப்பிடுகிறார்கள் என்பதைப் பார்த்து ,ஒரு ஜோடியை முதல் பரிசுக்கு தேர்வு செய்தார்கள் ....
இப்போது ...உங்கள் சிந்தனைக்கு ஒரு கேள்வி ...எப்படி முதல் பரிசுக்கு தேர்வு செய்து இருப்பார்கள் ?
             யோசித்து சொல்லுங்க ..விடையை  நாளைக்குப்  பார்க்கலாம் :)
ஒரு க்ளு...'மக் ' !

நடிகைக்கு ஆப்ரேசன்னா கிண்டல் செய்யலாமா :)
        ''அந்த நடிகைக்கு டான்ஸில் ஆப்ரேசன்னு கேள்விப்பட்டு ,டான்ஸ் 
மாஸ்டர்  கமெண்ட் அடிக்கிறாரா,எப்படி ?''
        ''அவர் டான்ஸில்தான் வீக் ,அவரோட டான்ஸிலுமா  வீக்னு கேட்கிறார் !''
மகளின் உள்ளங்கவர் 'கள்வன் 'இதில் தெரிவானா :)
        ''என் பொண்ணைக் காணலைன்னு ,மந்திரவாதியை  போய் பார்க்கலாம்னு சொன்னா ,ஏன்  வேண்டாங்கிறே ?''
        ''மை போட்டு பார்த்தா , கள்வன் தெரிவான்... ஆனா ,உங்க மகளின் உள்ளங்கவர்  'கள்வன் ' தெரிவானா ?''
பிள்ளைப் பேறு, தாமதம் கூடாது :)
பள்ளிக்குப் புறப்படும்  பையன்...
சூ சாக்ஸ் டை சீருடை போட்டுவிடச் சொல்லும் போது..  
வரும் எரிச்சலில் ஒரு உண்மை புரியும்  ...
 பிள்ளைப்பேறில் தாமதம் கூடாதென்று  !

16 comments:

 1. ஏன், அன்பால திருத்த முடியாதா எசமான்?

  போன வருடமே பதில் சொல்லவில்லையா பாஸ்?

  ஹஹ்ஹா... ஹஹ்ஹா...

  மை போட்டுப்பார்த்தா என்ன எல்லாம் தெரியும்னு எனக்குத் தெரியாது பாஸ்... ஆனா அதைச் சொல்லி பயமுறுத்தி ஒரு முறை காணாமல் போன எங்கள் தங்க வளையலை மீட்டு எடுத்தேன்!

  ம்ம்ம்...

  ReplyDelete
  Replies
  1. முடியாதுன்னு அவர் முடிவெடுத்து விட்டதால் தானே வள்ளுன்னு விழுகிறார் :)

   சொன்னது நினைவுக்கு வரவில்லையா :)

   வீக் ஆனாலே கிண்டல்தானா :)

   சபாஷ் ,அந்த பயம் இருக்கே எடுத்தவர்களுக்கு :)

   முயற்சி தொடர்ந்தாலும் ,பிள்ளைப் பேறு நம்ம கையிலேயா இருக்கு :)

   Delete
 2. நாய் பொழப்பாப் போச்சு...! ம்...ம்... என்னத்தச் சொல்றது...?

  'மக்'கில்... வாயோடு வாய் வைத்துத்தான்...! இப்படி மக்கான கேள்விகளை கேட்கலாமா...? என்ன மக்களே...!

  அந்த நடிகை இதில் மட்டும்தான் வீக்...!

  உள்ளம் கவர் கள்வனா... குறும்புகளின் மன்னனா... மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா... அவன் முகவரி சொல்லு...!

  பெத்தெடுத்தது யாரு... அழகு பேருவச்சது யாரு... பதினாறும் பெற்று பெரு வாழ்வு பெருக... பேறுகால லீவு ஒன்பது மாதம் ஆகப் போவுதாம்...!

  த.ம. 2

  ReplyDelete
  Replies
  1. நாய் பொழப்புதான் .நீங்களாவது சிரிச்ச முகமா இருக்கலாமே :)

   மக்கில் ..வாய் வைத்த இடத்தில் வாய் வைத்து ...முக்கியமான மேட்டர் அதான் :)

   அனுபவசாலிகள்தான் சொல்லணும் :)

   மையிலே,விலாசம் வராதே :)

   ஏற்கெனவே ,மைய அரசு ஊழியர்களுக்கு உள்ளதுதானே :)

   Delete
 3. நன்றாக சிரித்தேன் ஜி உமது ஜோக் படித்து...

  ReplyDelete
  Replies
  1. உள்ளங்கவர் 'கள்வன் 'உங்களுக்குத் தெரிந்தானா :)

   Delete
 4. Replies
  1. சிடுமூஞ்சிகள் அனுபவம் உங்களுக்கும் இருக்குமே :)

   Delete
 5. ஹ்aஹஹஹ் அனைத்தும் ரசித்தோம்...அந்த மக் விடை...முதல் சோடி வலது கை இடது கை...இரண்டாவது சோடி வலது கை...வாய் வைத்த இடம் ...ஹிஹிஹி போன வருஷத்து விடைதான் காப்பி ...மக் இல்லையா அதான் காப்பி..ஹிஹிஹிஹி

  ReplyDelete
  Replies
  1. அப்போதே சரியாக சொன்னவராச்சே நீங்க ,எதுக்கு காப்பி எல்லாம் ?அப்போது ,நீங்க ரசனையான கருத்து இன்றைய (12.04.16) பதிவிலும் வந்தாச்சே :)

   Delete
 6. 01. இது வேறயா ?
  02. பொண்டாட்டி முதலில் குடித்து விட்டு மக்கு புருசனுக்கு மக்கை கொடுத்தாளோ... ?
  03. இது ஓவரு....
  04. நியாயமான கேள்விதான்
  05. உண்மைதானோ...

  ReplyDelete
  Replies
  1. நக்குற ஜென்மம் எதுன்னு தெரியுதா :)
   மக்கு புருஷன் செய்த வேலை உங்களுக்கும் இப்போ புரிந்து இருக்குமே :)
   எத்தனை ஓவர் :)
   அந்த பொண்ணு ,கண்ணுலே மையை மட்டும் வைக்கலே ,பொய்யையும் :)
   அனுபவம் அப்படித்தான் சொல்லுது :)

   Delete
 7. உண்மைதான்.....சிரிச்சுப் பேசினா மூஞ்சியை நக்க ஆரம்பிச்சிடுதாமே சில ஜென்மங்க ........

  ReplyDelete
  Replies
  1. இதுக்குதான் அவர் இவ்வளவு விடப்பாயிருக்காரோ :)

   Delete
 8. Replies
  1. நலம் நலமே !அருமைன்னு சொன்னது என் பதிவையும் சேர்த்துதானே :)

   Delete