12 April 2016

'ஈருடல் ஓருயிர் தம்பதி' ஜெயித்தது இப்படித்தான் :)

ஒரு வாக்குறுதி இப்பவே நிறைவேறிடுச்சு take it easy,just fun :)
            ''அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையைப் பற்றி என்ன நினைக்கத் தோணுது ?''
           ''அதான் 'பல்பு 'தருவோம்னு அவங்களே சொல்றாங்களே !''
இதிலுமா கணக்கு பார்க்கிறது :)                
              ''படியிலே தாவி தாவி,மாடிக்கு வந்த பையனை அடி அடின்னு அடிக்கிறார் ...கணக்கு வாத்தியாரை ஏண்டா கட்டிக்கிட்டோம்னு இருக்குடி !''
              ''ஏனாம் ?''            
             ''எதையுமே 'ஸ்டப் பை ஸ்டப் 'பா  செய்யணுமாம் !''
 அன்பார்ந்த வலையுலக உறவுகளே ,
          நேற்றைய ' ஈருடல் ஓருயிர் ' போட்டியின் முடிவைப் பார்த்து விடுவோமா ?
     (அதைப்  படிக்காதவர்கள்  படித்துவர  இதோ லிங்க் ...http://www.jokkaali.in/2016/04/blog-post_11.html
இறுதிச்  சுற்றுப் போட்டி ...
ஒரு ஜோடி தம்பதியரை மறைவிடத்தில் இருக்கச் சொல்லி விட்டு ,இன்னொரு ஜோடியிடம் ,ஒரு சைனா மக் நிறைய ஜிகர்தண்டாவை ஊற்றிக் குடிக்கச் சொன்னார்கள் .ஈருடல் ஓருயிர்  போட்டியாச்சே ,தம்பதிகள் விடுவார்களா ?
கணவர் பாதியை குடித்தபின்  மனைவிக்கு கொடுத்தார் ,அவரும் குடித்து முடித்தார் !
மறைந்து இருந்த ஜோடித் தம்பதிகளும்  வெளியே வந்தார்கள் ,அவர்களும் முதல் ஜோடியைப் போன்றே ,நீ பாதி நான் பாதி என்று குடித்து முடித்து ,முடிவுக்கு காத்திருந்தார்கள் ....
இரண்டாவது தம்பதியர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டவுடன் ,எல்லோருக்கும் ஆச்சரியம் !
முதல் ஜோடி தம்பதியர் கேட்டார்கள் ..
''நாங்கள் குடித்ததைப் போன்றேதானே அவர்களும் குடித்தார்கள் ?எப்படி வெற்றியை முடிவு செய்தீர்கள் ?''
நடுவர் சொன்னார் ''குடித்தது பாதி பாதிதான் ,அதில் ஒன்றும் வித்தியாசமில்லை ...
 ஜிகர்தண்டா  இருந்த 'மக்'கின் கைப் பிடியை நீங்கள் வலது கையால் பிடித்து, குடித்து முடித்ததும் மனைவி கையில் கொடுத்தீர்கள் ,ஆனால் அவர் இடது கையால் 'மக்'கை  பிடித்து குடித்தார் !
இரண்டாவது ஜோடித் தம்பதிகள் இருவருமே வலது கையால் 'மக் 'கைப் பிடித்து குடித்தார்கள் ,இதனால் ,கணவன் 'மக் ' கில் எங்கே வாய் வைத்துக் குடித்தாரோ,அதே இடத்தில் மனைவி வாய் வைத்துக் குடிக்கத் தயங்கவில்லை ..அதுதான் அவர்களின் வெற்றிக்குக் காரணம் என்று அறிவித்த போது ,அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது !
     அன்றே சரியான விடையை சொல்லி ,ரசிக்கும் படியாய் கருத்துரையிட்ட துளசிதரன் ஜி அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள் ..பரிசாக, எச்சில் படாத மக் ஒன்று விரைவில் அனுப்பலாம்னு இருக்கேன் :)
Thulasidharan V ThillaiakathuFri Apr 17, 01:06:00 pm
அந்த விடை எப்படி எங்களுக்கு ஸ்ட்ரைக் ஆச்சுனா....ஒரு கதைல ஒரு காதல் ஜோடிங்க ஆப்பிள் பழத்தைக் கடிச்சு சாப்பிட, முதலில் காதலன் ஒரு கடி கடித்து விட்டுக் காதலியிடம் கொடுத்ததும் காதலி அதே இடத்தில் கடிக்க.....காதலன் கேட்பான்...அதே இடத்துல கடிக்கற அப்படினு....காதலி "உன் உதடு பட்ட இடத்தில்...என் உதடும்.....என்று....
Bagawanjee KAFri Apr 17, 07:03:00 pm
இது கதை மாதிரி தெரியலே,கவிதை மாதிரி இருக்கே :)
கணவன் மனைவி சண்டையில் தலையிடலாமா :)
        ''பக்கத்து வீட்டிலே புருஷன் பெண்டாட்டி சண்டைன்னா...நாம ஒரு தப்பு செய்யலாம் ,ஒரு தப்பு செய்யக்கூடாதா ,என்னங்க சொல்றீங்க ?''
         ''காதை  தீட்டிக்கிட்டு ஒட்டு கேட்கலாம் ,சமரசம் செய்யப் போனாதான் தப்பு !''
சொல்லிக்க நல்லா இருக்காதே :)
           ''பத்து வீடு பார்த்ததில் நடுத் தெருவீடுதான் பிடிச்சிருக்கு ,நீங்க ஏன் வேண்டாங்கிறீங்க ?''
           ''நடுத் தெருவிலே இருக்கேன்னு சொன்னாச் சிரிப்பாங்களேன்னு யோசிக்கிறேன் !''

பெண்களில் மசாலாவும் உண்டு ,'மலாலா 'வும் உண்டு :)
காண்போர் நாணும் அளவிற்கு 
மறைந்துள்ள மச்சத்தையும் காட்டும் 
'மசாலா 'ப் பெண்கள் ஒருபுறம் ...
உரிமைக்கு முன் உயிர்க்கூட துச்சமென 
தோட்டாவைக் கூடத் தாங்கும் 
'மலாலா 'ப் பெண்களும்  இன்னொரு புறம் ...
இருப்பதால்தான் பெண்மை தலை நிமிர்ந்து நடக்கிறது !

20 comments:

 1. ‘இருட்டறையில் உள்ளதடா உலகம்... பல்பு........ பூ இவ்வளவுதானா...?

  எதுவுமே படிப்படிப்படியாகத்தானே அமல் படுத்த முடியும்... சொன்னா நம்ப மாட்டீங்களா...?

  நீ பாதி நான் பாதி கண்ணே...!

  ‘கத்தியத் தீட்டாதே... புத்தியத் தீட்டு...’ன்னு ஏன் இந்தக் கத்து கத்துறீங்க...!

  நடுத் தெருவுலயாவது உயிரோட இருக்கிறோமுன்னு பெருமைப்படுவாங்க...!

  ‘பாஞ்சாலி... மச்சமா... வச்சுக்கோ...’ பெண்‘மை’யின் உண்‘மை’ வாழ்க...! உடல் மண்ணுக்கு... உயிர் பெண்ணுக்கு...!

  த.ம. 2
  ReplyDelete
  Replies
  1. அதுக்குதானா இந்த பல்பு :)

   அந்த தேர்தல் அறிக்கையை தயார்செய்தது இந்த வாத்தியார் தான் போலிருக்கே :)

   ரெண்டு 'ஃகுவார்ட்டர் 'குழந்தைங்க இருக்கே :)

   கத்தி தீர்த்துக்க முடியாதோ :)

   அவர் சாவு வீட்டிலேயும் பொணமா இருக்க விரும்ப மாட்டாரே :)

   உயிரை ,உறவுப் பெண்ணுக்கு மட்டும் கொடுங்க :)

   Delete
 2. Replies
  1. மசாலாவும் உண்டு ,'மலாலா 'வும் உண்டு என்பதையும் ரசீத்தீர்கள்தானே :)

   Delete
 3. ஈருடல் ஓருயிர் ' போட்டியின் முடிவைப் பார்த்து விடுவோமா ?

  முடிவு அற்புதம் நண்பரே...
  கதையோ கற்பனையோ
  உண்மையாகவே அருமை ஜி....

  ReplyDelete
  Replies
  1. இது ஒரு நிஜமான கற்பனை ,அஜய் ஜி :)

   Delete
 4. Replies
  1. மரம் நடுத்தெருவாய் இருந்தால் இன்னும் நன்று :)

   Delete
 5. போட்டி உட்பட அனைத்தையும் ரசித்தேன் நண்பரே!
  த ம 6

  ReplyDelete
  Replies
  1. அவர்களுக்கு பரிசை வழங்கியது சரிதானே :)

   Delete
 6. Replies
  1. எழுத்துபிழை பாமினிக்கு பதில் 99 அடித்துவிட்டேன்.தாங்கள் குழப்பிக் கொள்ளக்கூடாது என்பதற்க்கா்க அழித்துவிட்டேன்...

   Delete
  2. நீங்களும் பாமினி பக்கம்தானா ?நைனைத் தெரியும் ,அதென்ன டபிள் நைன்:)

   Delete
 7. ஈருடல் ஓருயிர் தம்பதி' ஜெயித்தது இப்படித்தானா.........!!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. ஏன் ,உங்களால் நம்ப முடியவில்லை :)

   Delete
 8. கணக்கு வாத்தியார் ஜோக் டாப்.

  ReplyDelete
  Replies
  1. படிப்படியா குறைப்போம் என்பதுதானே இப்போ ஹிட் :)

   Delete
 9. 01. ஹாஹாஹா உண்மையிலேயே பாராட்ட வேண்டும் ஜி
  02. நியாயம்தானே....
  03. டைவோர்ஸ் ஆகாமல் வாழ வாழ்த்துகள்
  04. டைம்பாஸ் பேர்வழி
  05. யோசிக்க வேண்டிய விசயம்தான்.
  06. ஸூப்பர் ஜி

  ReplyDelete
 10. சொன்னதைச் செய்தோம்னு சொல்லிக்குவார்களோ:)
  படிப் படியாத்தானே செய்ய முடியும் :)
  உங்கள் வாக்கு பலிக்கட்டும் :)
  அவனவனுக்குத் நேரமா போதலே ,கொடுத்து வைத்தவர்தான் :)
  நடு ரோட்டில் நிறுக் கொண்டா :)
  மலாலாவின் மனவலிமைக்கு உலகமே தலை வணங்கியது ,சரிதானே :)

  ReplyDelete