15 April 2016

புருசனைத் தாக்க மட்டுமா பூரிக்கட்டை :)

              ''பூரிக்கட்டையை இப்படியும் பயன்படுத்தலாம்னு இன்னைக்குத் தான் தெரிஞ்சுதா ,எப்படி ?''
              ''தீர்ந்து போன டூத் பேஸ்ட்டை ,பிதுக்கி எடுக்கிறதுக்கு பதிலா பூரிக்கட்டையால் உருட்டி எடுத்தாளே என் பெண்டாட்டி !''
         ( பெண்டாட்டி அப்படின்னா 'டாஸ்மாக் அடிமை 'புருஷன்  இப்படித்தான் பூரி மாவை உருட்டியாகணும்..ஹி..ஹி:)
நண்பனின் மனம் அறிந்த நண்பேண்டா  :)
               ''பக்கத்துத் தெருவிலே இருக்கிற அந்த ராசியான மருத்துவமனையின் பெயரும் ,டாக்டரின் பெயரும் ஞாபகத்தில்  வரவே மாட்டேங்குதே.....!''
                ''சரி ,சரி ..நர்ஸோட பெயரைச் சொல்லு,நான் போய் பார்த்துக்கிறேன் !''
ஓடிப் போனா... மனைவி பெயரும் மாறிடுமா :)
            ''உன் மனைவி பெயர் கலாவதிதானே ,காலாவதின்னு ஏன் சொல்றே ?''
           ''ஓடிப் போனவளை வேற எப்படி சொல்றது?''
போலிகள் நிறைந்த உலகமடா :)
      ''நீங்க போலி டாக்டர்னு பேசிக்கிறாங்க ,நீங்க தர்ற மாத்திரையும் போலின்னா ,எப்படி குணமாகும் ?''
     ''ஸ்கேனைப் பார்த்து நான்  சொன்ன நோயும் போலிதான் ,டோன்ட் ஒர்ரி !''
ஒரு தலைக் காதல் ஜெயிக்குமா :)
நீ விரும்புவதோ அவளை ...
அவள் விரும்புவதோ அவனை ...
மூணு சீட்டிலேயே  உன்னால் ஜெயிக்க முடியாது !
முக்கோண காதலில் ...?நோ சான்ஸ் !

24 comments:

 1. 01. ஸூப்பர் ஜோடி
  02. தொட்டில் பழக்கம்
  03. நல்ல பொருத்தம்
  04. நோயாளி நேபாளியா ?
  05. இடையில் நம்மள் நுழையலாமா ?

  ReplyDelete
  Replies
  1. எந்நேரமும் 'பூரி'ப்புடன் வாழ்வார்களோ:)
   மார்ச்சுவரி வரை என்றும் சொல்லலாமா :)
   அவர்களுக்குள் பொருத்தம் இல்லாம போச்சே :)
   நேபாளிகள் என்ன பாவம் செய்தார்கள் :)
   நம்மள்கி அடகு கடையை மூட வேண்டியிருக்கும் ,பரவாயில்லையா :)

   Delete
 2. ஹலோ மதுர இப்படி எல்லாம் வா தலைப்பை வைச்சு பயமுறுத்துறது. தலைப்பை பார்த்ததும் ஒரு கணம் ஆடிப் போய்விட்டேன் என்னடா இவரு பூரிக்கட்டையால் வித்தியசமாக தாக்குவதற்கு ஐடியா சொல்லி அதை என் வூட்டுகாரம்மா படிச்சு அதனால நமக்கு புதுப் பிரச்சனை ஏதும் வந்துவிடுமோ என்று ஒரு கணம் பதறி போயிட்டேன் ஹும்ம்ம்ம்

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹஹஹ அதானே பார்த்தோம் நீங்க கண்டிப்பாக இப்படிச் சொல்லுவீங்கனு தெரியும்..ஹிஹிஹி...நாங்க னினைச்சோம் நீங்க மெர்சலாகிடுவீங்கனு...

   கீதா

   Delete
  2. எறிஞ்சா திருப்பி வந்து தாக்கிறமாதிரி பூமராங் பூரிக்கட்டையை அவங்க கையிலே கொடுங்க ஜி :)

   Delete
  3. பதியுலக பூரிக்கட்டை புகழ் ,மெர்சலாகாமல் போவாரா :)

   Delete
 3. பெண்டாட்டியை அவன் புரட்டி எடுத்தாலும், அவள் பேஸ்ட்டை பிதுக்கி எடுப்பதிலிருந்தே விழிபிதுங்கி நிற்கிறான் என்பது தெரிகிறதே...! பரவாயில்லை ‘பீர் முகமது’ பொண்டாட்டிக்குக் கைக்கு உதவியா இருக்கானே...!

  நர்ஸத்தான் டாக்டர் பாத்துக்கிறாரே... நீ வேறயா...?

  கலா!! கலா.!!...கலக்கலா...?

  டாக்டர்... நானும் போலி பேஷண்டுங்கிறத மறந்துட்டீங்களா...? நானும் உக்காந்து உக்காந்து பார்த்தேன்... ஒரு பயலும் வரக் காணோம்...! இன்னைக்கு பேஷண்டா நடிச்சதுக்குக் கூலியக் குடுங்க...!

  முக்கோணக் காதல்தான் குடும்பம் கட்டுப்பாடா இருக்கும்...!

  த.ம. 1

  ReplyDelete
  Replies
  1. மாவில் பீரை ஊற்றி பிசையாமல் இருக்கணுமே :)

   அவராலும் எத்தனை பேரை பார்த்துக்க முடியும் :)

   வயிற்றைக் கலக்கிட்டு போயிட்டாளே :)

   முதலுக்கே மோசமா ஆயிடுச்சே :)

   நாம் இருவர் ,நமக்கு இருவர் என்பதுதானே சரி :)

   Delete
 4. ஆஹா... பூரிக் கட்டைக்கு இப்படியும் ஒரு உபயோகமா!நோயும் போலிதானா.... சூப்பர் போங்க!

  ReplyDelete
  Replies
  1. பாட்டிலும் உபயோகமாவதைப் பார்க்கலையா :)
   நோய் போலியானால் ஜாலிதானே :)

   Delete
 5. Replies
  1. போலிகள் நிறைந்த உலகத்தையுமா:)

   Delete
 6. அருமை நண்பரே
  சிரித்தேன் ரசித்தே...

  ReplyDelete
  Replies
  1. படமும் சிரிக்க வைக்குதே :)

   Delete
 7. ஹஹாஹ்ஹ்...பூரிக்கட்டை உரு மாறுவது பயமாக இருக்கே ஜி.....பூரிக்கட்டையின் புகழை உலகம் முழுக்க பரப்பிய மதுரைத் தமிழன் உங்கள் முதல் ஜோக்கிற்கு மெர்சலாகப்போகிறார்....பாருங்கள் ஜி...பூரிக்கட்டை கூட பரவாயில்லை....பாட்டில் பூரிக்கட்டையானால் பாவம் தமிழன்!!!! (நல்லகாலம் அவங்க வலைப்பக்கம் வருவதில்லை என்று மதுரைத்தமிழனின் தளத்தில் வாசித்த நினைவு!!அஹ்ஹஹ)

  ரசித்தோம் ஜி..அனைத்தும்...

  ReplyDelete
  Replies
  1. எதுக்கும் அவர் ஜாக்கிரதையாய் இருப்பது நல்லது ,அவர் வீட்டிலும் உண்டே இந்த பாட்டில் கட்டை :)

   Delete
 8. ஒரு தலைக் காதல்
  ஒரு போதும் வெல்லாது தான்
  தோற்ற பின் படி!

  இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. இனி படித்து ,என்ன ஆகப் போகிறது :)

   Delete
 9. ஹா... ஹா.... பூரிக்கட்டை சூப்பர் ஜி...
  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் இப்படி ஒரு பூரிக்கட்டை வேண்டுமா :)

   Delete
 10. பூரிக்கட்டை பயன்பாடு..சூப்பர்“தான்..

  ReplyDelete
  Replies
  1. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா ?நாடு ஏன் வல்லரசு ஆக மாட்டேங்குது :)

   Delete
 11. Replies
  1. தண்ணி காட்டிட்டு ஓடிய மனைவியை காலாபாணி என்றும் சொல்கிறாரே ,அதையும் ரசிக்கலாமே அய்யா :)

   Delete