2 April 2016

பெண் காதலிப்பது வீட்டுக்கு தெரிந்தால் :)

வேறெந்த உயிரினத்துக்கும் இல்லாத சிறப்பு :)          
            ''பாம்பை விட  அதிக அறிவுள்ளது  காக்கான்னு எப்படி சொல்றீங்க ? ''                      
         ''பாம்புக்கு பாம்புன்னு  நாமதான் பேர்  வச்சுருக்கிறோமே தவிர ,அது பாம்புக்கே தெரியாது  ,ஆனால் ,கா கா ன்னு கத்தினால் காக்காக்கள் வந்திடுதே !''

எது முக்கியம் ,காதலியா ,கிரிக்கெட்டா :)
          ''காதலில் விழுந்த கிரிக்கெட் வீரருக்கு நேரம் சரியில்லே போலிருக்கா ,ஏன்  !''
           ''பேட்டிங்கா ,டேட்டிங்கான்னு   முடிவெடுங்கன்னு கேப்டன் சொல்லிட்டாராமே  !''
பெண் காதலிப்பது வீட்டுக்கு தெரிந்தால் :)
          "என்னடா சொல்றே , 143 ன்னு சொன்னதுக்கா  ,அந்த பொண்ணுக்கு அவங்க வீட்டிலே 144 ஆ?''
         "என் கிட்டே அவ 'I LOVE YOU'ன்னு சொன்னது தெரிந்ததால் ,வீட்டுக்கு  வெளியே போகக் கூடாதுன்னு அவளுக்கு 'தடை உத்தரவு 'போட்டுட்டாங்களே !"  
விளையாட்டுப் பிள்ளைன்னு முடிவே எடுத்துட்டாங்களா :)
        ''தலைவர் 'மீடியா''க்கள் மேல் ஏன் கோபமா இருக்கார் ?''
       ''அவரோட பேட்டி ,அறிக்கைகளை எல்லாம் விளையாட்டு 
செய்திகளில் சொல்றாங்களாமே !''
இது நடிகைக்கு மட்டுமல்ல ,அனைவருக்கும் !
பணம் சம்பாதிக்க வெட்கத்தை விட்டால் ..
பல வழிகளிலும் பணம் வரும் ...
வெட்கம் வரவே வராது ... 
அது போனது ஒரு வழிப் பாதை என்பதால்  !

20 comments:

 1. காக்கா ஜோக் சூப்பர்ஜி!

  தலைவர் ஜோக்கும்!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பாராட்டு ,நண்பர் முத்துநிலவன் அவர்களையே சேரும் .அவர்தான் 'பாம்புக்கு பாம்புன்னு நாமதான் பேர் வச்சுருக்கிறோமே தவிர ,அது பாம்புக்கே தெரியாது 'என்று கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் அடிக்கடி கூறுவார் என்று தன் பதிவில் கூறியிருந்தார் :)

   Delete
 2. காக்கா பிடிப்பது இப்படித்தானோ...?

  ஆடுகளத்தின் ஹிரோதானே...! ஆட்டம் கண்டு விட்டது...!

  100-க்கு கால் பண்ணி தடையைத் தகர்த்தெறிய வேண்டியதுதானே...!

  தலைவர் பேச்சில் கில்லாடிங்கிறதப் பேட்டியில் சொல்லில் விளையாடி நிருபிச்சிட்டாரே...! மொதல்ல ‘பேட்’டக் கொடுத்து ‘டக்’ன்னு விளையாடச் சொல்லுங்க...!

  நானும் எவ்வளவு முயற்சி செஞ்சு பார்த்தாலும் வெட்கம் வரவே மாட்டேங்கிது... அது எங்கேதான் இருக்குன்னே தெரியல...!

  த.ம. 3  ReplyDelete
  Replies
  1. காக்கா பிடித்து எனக்கென்ன லாபம் ,காக்கா பிரியாணி கடையா நடத்துகிறேன் :)

   எப்போ ஆட்டம் காணும் ,ஆட்டம் போடும் என்று சொல்ல முடியாதே :)

   நூறு ,நூறு சதவீதம் உதவுமா ,அப்ரூவர் ஆகிவிடுமா :)

   ஏன் டக் ஆகிப் போயிடுவாரா :)

   வர மாட்டேன் என்பதை வா வா என்றால் எப்படி வரும் :)

   Delete
 3. அனைத்தும் அருமை நண்பரே!
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு பிடித்தது ..பேட்டிங்கா ,டேட்டிங்கா:)

   Delete
 4. பேட்டிங்கா, டேட்டிங்கா அருமையான கேள்வி....
  அத்தனையும் அருமை நண்பரே

  ReplyDelete
  Replies
  1. மாட்டிக்கலே ,அதனால் கேட்கிறார் போலிருக்கு :)

   Delete
 5. அனைத்தும் அருமை...

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. அதிகம் அருமை 143ஆ ,144ஆ :)

   Delete
 6. ம்.. பரவாயில்லை..கொலை செய்யாமல் 144 தடை போட்டுவிட்டு தப்பித்து சென்ற.பின் கொலை செய்வார்கள்

  ReplyDelete
  Replies
  1. சமீபத்திய நிகழ்வு அப்படித்தான் இல்லையா :)

   Delete
 7. Replies
  1. டெஸ்ட் முடிவை சீக்கிரம் சொல்லுங்க ஜி :)

   Delete
 8. 01. கண்டு பிட்ப்பு அபாரம் ஜி
  02. சோலந்தூர் சோசியரை பார்க்கச் சொல்லுங்க ஜி
  03. 134 ன்னு சொல்லி தப்பிச்சு இருக்கலாம் ஜி
  04. காமெடி தலைவரா ஜி
  05. ஸூப்பர் தத்துவம் ஜி

  ReplyDelete
  Replies
  1. இந்த கண்டுபிடிப்பின் பாதியாளர் மதுக்கூரார் என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே :)
   அவரே ,ஒரு சின்ன வீட்டில் பதுங்கி விட்டாராமே :)
   123 தானே சொல்லுவார்கள் .ஓடும் முன் :)
   காமெடிக்குன்னு தனியா தலைவர் வேற இருக்காரா :)
   நல்ல வேளை,நோ என்டிரியில் போகலே :)

   Delete
 9. Replies
  1. பாம்பு சட்டைப் போட்டுருக்குன்னு சொன்னா நம்புவீங்க ,இதை நம்ப மாட்டீங்களா:)

   Delete
 10. காக்கா....
  பட்டிங் - டேட்டிங்..
  ஐ லவ் யூ
  விளையாட்டுச் செய்தி
  வெட்கம் - பணம் எல்லாமே சூப்பர் சகோதரா.
  https://kovaikkavi.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. பட்டியல் போட்டு பாராட்டியமைக்கு நன்றி :)

   Delete