22 April 2016

பெண் பேய் என்றாலும் இதுதானே அடையாளம் :)

                 ''என்னங்க ,அந்த இருட்டுப் பங்களாவில் இருக்கிறது பொம்பளைப் பேய்தான்னு எப்படிச் சொல்றீங்க ?''
                ''இடுப்பு சைசைப் பார்த்தால்  அந்த மாதிரியிருக்கே !''
                ''அடச்சீ ,பேயைப் பார்த்தாலும் உங்க கண்ணு இடுப்புக்குத் தான் போகுமா  !''
இவன் அல்லவா  உண்மை நண்பன் :)
             '' எனக்கு நல்லா பால் கறக்கத் தெரியும்னு சொல்லி  ,பாங்கிலே மாட்டு லோன் கேட்டா தர மாட்டேங்கிறாங்க ,ஏன்னு தெரியலே ? ''
             ''பணத்தை உன்னிடமிருந்து கறக்க முடியாதுன்னு அவங்களுக்கும் தெரிஞ்சு போயிருக்கும் !''
கன்னம் என்ன 'இச் ' கொடுக்கவும் ,வாங்கவும்தானா :)
                 ''கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்கக் கூடாதுன்னு அவர்கிட்டே சொன்னது தப்பா போச்சா  ,ஏன்  !''
                ''இதை கப்பல் உரிமையாளர் யாரிடமாவது சொல்ல உனக்கு தைரியம் இருக்கான்னு கேட்கிறாரே !''
சுகர் வந்ததே ரேஷன் அரிசியால்தானோ :)
             ''ரேஷன் கடைலே பிளட் டெஸ்ட் பண்றாங்களா ,ஏன் ?''
            ''குடும்பத்தில் யாருக்காவது சுகர் இருந்தா, சீனி அளவை  குறைக்கப் போறாங்களாமே !''
மனைவி இப்படியும் சோதிக்கலாமா :)
மனைவி என் மேல் நல்ல அபிப்பிராயம் 
வைத்திருப்பது தெரிகிறது  ...
அழகான வேலைக்காரியை வீட்டு வேலைக்கு 
வைத்துக் கொண்டதில் இருந்து !

18 comments:

 1. பேய் இப்படி கவர்ச்சி யா இருந்தால்
  கண்ணு அங்கதான் போகும்...

  ReplyDelete
  Replies
  1. கவர்ச்சி எல்லாம் தோல் மூடியிருக்கும் வரைதான் ,இடுப்பு எலும்புமா கவர்ச்சி :)

   Delete
 2. @அஜய் ...

  :))))

  அனைத்தையும் ரசித்தேன் ஜி...


  ReplyDelete
  Replies
  1. அஜய்க்கு சொன்னதையே உங்களுக்கும் வழிமொழிகிறேன் :)

   Delete
 3. Replies
  1. பேய் மூலமா நான் சொன்ன கருத்தையும்தானே :)

   Delete
 4. கவர்ச்சியான பேயாக இருக்கிறதே!
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. எலும்புக்கூடு பேயும் உங்களுக்கு கவர்ச்சியாய் தெரியுதா :)

   Delete
 5. இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது...! இஞ்சி இடுப்பழகி... தன்னந்தனிசிருக்க தத்தளிச்சு தானிருக்க...! ஹலோ... யாரு... பேயா...?

  நான் என்ன விஜய் மல்லையாவா... சொல்லையா...?

  ‘டைட்டானிக்’ கப்பல் கவிழ்ந்து போச்சுன்னு... கவலையில... அவள் கன்னத்தில் கைவைத்து இருக்கேன்...! என்ன சொல்றீங்க...? கன்னத்தில் கைவைக்கக் கூடாதா...?!

  இனி பிளட் டெஸ்ட் செலவு மிச்சம்...! சீனியைவிட சுகர் டெஸ்ட்க்கு ரேட் அதிகம்தான்... பரவாயில்லையே...!

  கண்ணுக்குத் தெரியாம கேமரா வைத்து சோதிக்கிறது தெரியாதா...?

  த.ம. 5

  ReplyDelete
  Replies
  1. இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது என்று கவிஞர்கள் பாடலாம் ,உண்மை என்னவென்றால் ,பெண்ணின் இடுப்பு எலும்பின் அகலம் ,இடுப்பு எலும்பின் குழியும் ஆணை விட அதிகம் !இதை வைத்துதான் எலும்பு கூடு பெண்ணின் உடையது என்று தீர்மானிக்கிறார்கள் !நீங்க என்னடாவென்றால்,பேயோடு டூயட் பாடுகிறீர்கள் :)

   வங்கிகளை ,அவர் ஏமாற்றிய அளவுக்கு வேறு யாரும் ஏமாற்ற வில்லையா :)

   டைட்டானிக் நாயகி கூட கன்னத்தில் கை வைத்துக் கொள்ளவில்லையே :)

   சுகர் டெஸ்டை ரூபாய் பத்தில் மருந்து கடையிலேயே செய்கிறார்களே :)

   அது வேற நடக்குதா ?நல்ல எச்சரிக்கை செய்தீர்கள் :)

   Delete
 6. 01 .இவன்தான் மனிதன்
  02. ஏற்கனவே பலரும் கறந்துருப்பாங்க....
  03. அவ்வளவு பெரிய ஆளுகளோட பழக்கம் வேணுமே...
  04. நல்ல யோசனை கொடுத்தார்கள் ஜி ஆட்சிக்கு வருகிறவர்களுக்கு....
  05. இது பொய் இல்லையே...

  ஜி ஏதும் மந்திரம் வைத்திருக்கின்றீர்களா ? தமிழ் மணம் நொடியில் ஏற்றுக்கொண்டதே.....

  ReplyDelete
  Replies
  1. மனிதனா ,ஆம்பளையா :)

   முயற்சித்தும் கறக்க முடியவில்லையே :)

   தெரிந்த கப்பல் ஓனர் வ உ சி மட்டும்தானா :)

   இது அமுலானால் ,சீனியில் தன்னிறைவு அடைந்து விடுவோமென நினைக்கிறேன் :)

   உண்மையோ பொய்யோ இது என் அனுபவம் இல்லை :)

   சில நேரம் த ம வாக்கு , இப்படித்தான் என்னாலும் போட முடியுதே !

   Delete
 7. அந்த பங்களா பொம்பள பேய்க்கு படத்தில் இருக்கிற மாதிரிதான் இடுப்பு இருந்திச்சோ.........????

  ReplyDelete
  Replies
  1. இது வள்ளுவர் சொன்ன ...என்பு தோல் போர்த்திய உடம்பு :)

   Delete
 8. என் மனைவி
  இப்படி எல்லாம் சோதிக்க மாட்டாள்
  வேலைக்காரியை வைத்தால்
  கூலி கொடுக்க வசதி இல்லையே!

  ReplyDelete
  Replies
  1. அது சரி,கூலி கொடுக்க வக்கு இருந்தால் தானே வைச்சுக்க முடியும் :)

   Delete
 9. Replies
  1. நீண்ட இடைவெளிக்கு பின் வந்து சிரித்தமைக்கு நன்றி :)

   Delete