26 April 2016

எது நிம்மதி காதலா ,கல்யாணமா,காதல் கல்யாணமா :)

இந்த தகுதி போதுமா ,இன்னும் கொஞ்சம் வேணுமா :)        
               ''உங்களுக்கு எப்படி MLA  சீட் கிடைச்சது ?''
               ''நிமிசத்துக்கு ஆயிரம் ஸ்டிக்கர் ஒட்டி சாதனைப் பண்ணியிருக்கேனே!''
மனைவி கதவை திறக்க கண்டக்டரின் ஐடியாவோ ?
         ''காலிங் பெல் பக்கத்திலே ஒரு விசிலை தொங்க விட்டு இருக்கீங்களே ,ஏன் ?''        
          ''கரண்ட் கட் நேரத்தில் இந்த விசிலை ஊதி அழைக்கவும்னு எழுதி இருக்கேனே ,படிக்கலையா ?''
இந்த காதல் தாலியில் முடியாது என்பதால் வந்த கனவோ ?
           ''டார்லிங் ,நேற்று ஒரு கெட்ட கனவு ...நீயும் நானும் ரயில் தண்டவாளத்தில்  படுத்திருக்கிறோம் !''
            ''அய்யய்யோ ,அப்புறம் ?''          
           ''நீயும்தானே இருந்தே ,அப்புறம் நடந்தது உனக்குத்தான் தெரியுமே !''
வாலாட்ட யோசிக்கும் நாய்கள் :)
          ''டைப்பிஸ்ட் சாந்திகிட்டே யாரும் வாலாட்ட மாட்டேங்கிறார்களே ,ஏன் ?''
         ''அவங்க டைப் 'அடிக்கிற ' வேகத்தைப் பார்த்தே அரண்டு போயிருக்காங்களே !''

எது நிம்மதி காதலா ,கல்யாணமா, காதல் கல்யாணமா :)
    காதலே நிம்மதி என்று ...
   திருமணம் முடிந்த சில நாளிலேயே புரிந்துவிடுகிறது !

18 comments:

 1. இந்த முறை ஸ்டிக்கர் கணக்கையும் சாதனைப் பட்டியலில் எடுத்திருப்பார்களோ!

  அனைத்தையும் ரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. முக்கியமான தகுதி அதுதானே :)

   Delete
 2. Replies
  1. கரென்ட் இல்லாத நேரத்தில் வேலை செய்யும் காலிங் பெல்லையும்தானே :)

   Delete
 3. கல்யாணத்துக்கு அப்புறம் காதலிக்கிறதுதான் நல்லது... நான் சொல்வது மனைவியை அல்ல ஹீஹீ நான் வரட்டா

  ReplyDelete
  Replies
  1. நல்ல யோசனை ,வீட்டில் இருக்கும் பூரிக்கட்டைக்கு வேலை கொடுத்து விட்டீர்கள் :)

   Delete
 4. எம்.எல்.ஏ. கனவு நிமிசத்தில நனவாகமப் போச்சு... வேற ஒருத்தன்... நிமிசத்துக்கு ஆயிரத்து ‘110’ ஸ்டிக்கர ஒட்டி என்னோட சாதனையை முறியடிச்சு... அவன் தட்டிக்கிட்டு போயிட்டான்...!

  விசில் அடிச்சான் குஞ்சுகள்ன்னு நிருபிச்சிட்டீங்க...!

  அப்புறம்... தெரியாத மாதிரி கேக்காதே... ‘தண்டவாளத்தில தலை வச்சு படுங்க... நான் தலை வச்சுப்படுக்க தலையணை எடுத்திட்டு வாறேன்னு...’ ஓடி போயிட்டியே...!

  சாந்தி... ஒரு மாதிரி டைப்... அடிக்குப் பெயர்தான் சாந்தி... உன் அடியினில் ஏதடி சாந்தி...? ஓம் சாந்தி...!

  காதலனுக்குக் காதல் நிம்மதி...! காதிலிக்குக் கல்யாணம் நிம்மதி...! ‘எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
  அங்கே எனக்கோர் இடம் வேண்டும்...!’

  த.ம. 4
  ReplyDelete
  Replies
  1. சபாஷ்,சரியான போட்டி :)

   உண்மையில் அதை விசிலடிச்சான் குஞ்சுகள் உண்டு இல்லைஎன்று ஆக்கி விட்டார்கள் :)

   நீங்களும் ரயில் இன்னைக்கு வராது என்று எழுந்து விட்டீர்களே :)

   சாந்தியிடம் அடி வாங்கியவர் ரத்த வாந்திதான் எடுத்து சாவாரோ :)

   நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடத்தில்தான் உண்மை நிம்மதி :)

   Delete
 5. ஹா ஹா ஹா ரசித்தேன் ஜி

  ReplyDelete
  Replies
  1. கண்டக்டரின் ஐடியாவை ரசிக்க முடிந்ததா :)

   Delete
 6. காதலே நிம்மதி என்று ...
  திருமணம் முடிந்த சில நாளிலேயே புரிந்துவிடுகிறது !----இத்தினி நாளா எனக்குதெரியாம போச்சே...

  ReplyDelete
  Replies
  1. இப்பவும் ஒண்ணும் மோசம் போகலே ,காதல்லே இருந்து ஆரம்பீங்க :)

   Delete
 7. சூப்பர் ஜோக்ஸ்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. கனவும் சூப்பர்தானே :)

   Delete
 8. 01 .அட இதுவும் சாதனையா ?
  02. இவரு கண்டக்டர் வேலை செய்யிறாரோ.... ?
  03. அதானே... இதைப்போயி மறுமடியும் எதுக்கு கேட்கணும்.
  04. எல்லாம் யூகம்தான்
  05. எல்லோருக்குமா ?

  ReplyDelete
  Replies
  1. உலகத்தில் வேறெங்கும் நடக்காத சாதனை :)

   தலைப்பை பாருங்க ஜி :)

   படுத்ததும் கனவு உயிர் பிழைத்ததும் கனவுதானா :)

   விரல்களின் நாட்டியம் கன்னத்திலும் கீறலாய் ஆகிவிடுமோ :)

   உங்களுக்கு அனுபவம் போதாது :)

   Delete
 9. ரசித்தோம் ஜி அனைத்தையும்...

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு நன்றி தெரிவித்து மறுமொழியினை, இன்று இத்தோடு முடித்துக் கொள்கிறேன் ,இன்று நிம்மதியாய் தூக்கம் வரும் :)

   Delete