29 April 2016

மச்சான் நடிகை பிரச்சாரம் வெற்றி தருமா :)

             ''உங்களுக்கு ஆதரவா தேர்தல் பிரச்சாரத்துக்கு 'மச்சான் நடிகை' வந்தே ஆகணும்னு ஒத்த கால்லே நிற்கிறீங்களே ,ஏன் ?''
               ''போன தடவை ,வில்லன் நடிகர்  எனக்காக பிரச்சாரம் செய்ததால்  தோற்ற அனுபவம்தான் !''
எனக்கொரு சந்தேகம் ... உண்மையில்  இவர்கள் ரசிகர்கள்தானா ,நமீதாவை  இப்படி கிண்டல் அடிக்கிறாங்களே :)
அசர வைக்கும்  ஆங்கில அறிவு :)
            ''நடிக்க வந்த சில வருடங்களில் நிறைய வேடங்களில் நடித்து விட்டீர்கள் ,இதுவரை வந்த 'கேரியரில் ' மறக்க முடியாதது எது ?''
           '' மீன் குழம்பும் ,நண்டு  வருவலும்தான் ...தயாரிப்பாளர் எனக்காக ஸ்பெசலா கேரியரில் அடிக்கடி  கொண்டு வர்றாரே  !''
மெண்டல் குடும்பப் பொண்ணுன்னு வேண்டாம் என்றாரோ :)
          ''பொண்ணைப் பிடிச்சிருக்குன்னு  சொல்லிட்டுப் போனவங்க ,இப்ப ஏன் வேண்டாங்கிறாங்க?''
         ''எங்க பரம்பரையைப் பற்றி ,எங்க  ஃபேமிலி மனநல டாக்டர்கிட்டே விசாரித்து தெரிஞ்சுக்குங்கன்னு சொன்னது தப்பாப் போச்சு !''
நாடி ஜோதிடமே ஒரு  ?அதிலும் இரட்டை நாடி ஜோதிடமா :)
      ''உ ன் வீட்டுக்காரரோட நாடி ஜாதகத்தை பார்க்கவே முடியாது போலிருக்கா  ,ஏன் ?''
       ''அவருக்கு இரட்டை நாடி , இரட்டை நாடி ஜோதிடம் யாரும் பார்க்கிறமாதிரி தெரியலேயே !''
நாம் செய்த மாதவம் தமிழராய் பிறந்தது :)
யாரும் இங்கே ராமன் இல்லை ...
கருவாடு மீனாகாது கறந்தபால் மடிபுகாது ...
அவள்  பத்தினியுமில்லை நான் முற்றும் துறந்த முனிவனுமில்லை ...
காலத்தால் அழியாத பொன்மொழிகள் இவை !
தமிழனாய் பிறந்ததற்கு மாதவம்தான் செய்திருப்போம் போலிருக்கிறது !

23 comments:

 1. இப்பத்தான் உங்க பதிவைப் பார்க்கும் வாய்ப்பு கிடைச்சுது.
  உங்க உழைப்பும் படைப்புத் தீவிரமும் பிரமிக்க வைக்குது.

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் மிக்க நன்றி அய்யா !
   உங்களின் 'பல்கொட்டிப் பேயைப்' பயந்துக் கொண்டே ரசித்து வருகிறேன் :)

   Delete
 2. கீழே 'கொடுத்த காசுக்கு அதிகமாகவே கூவிய' ஒரு தொண்டரின் ஸ்டேட்டசும் சிரிக்க வைக்கிறது.

  ஹா... ஹா... ஹா.. அப்போ அப்படி. இப்போ? தமிழையே கடித்துக் குதறிப் பேசும் வெளி மாநில நடிகைகளுக்குத்தான் மவுசு!

  அடப்பாவமே

  ReplyDelete
  Replies
  1. கூவுறதிலும் ஒரு அர்த்தம் வேண்டாமா ?எப்படி அமெரிக்க அதிபர் ஆகமுடியும் :)

   வட நாட்டு நடிகைகள் தமிழைக் கடிச்சுக் குதறுகிறார்கள் என்றால் ,பிளக்ஸ்சில் நம் தமிழர்கள் ,தமிழைக் கடித்துக் குதறி இருக்கிறார்களே ..திரை துரையாம் ,இனைத்தாம்,வாழ்துகிறார்களாம் :)

   Delete
 3. மச்சானைப் பார்த்தீங்களா... மலவாழத் தோப்புக்குள்ளே... மடல்வாழை தொடை இருக்க... மச்சம் ஒன்று அதில் இருக்க... படைத்தவனின் திறமை எல்லாம்... முழுமை பெற்ற அழகி என்பேன்...! ‘மச்சான் மாட்டிக்கிட்டாரு !’

  தயாரிப்பாளர் இப்ப நாடோடி பாட்டுக்காரனா... ‘பிச்சைக்காரன்’ ஆகி மண்டையப் பிச்சுக்கிட்டு அலையிறாராம்...!

  மனநலம் சரியில்லங்கிறது ஒரு பிரச்சனையே இல்ல...! ‘கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருக்கான்னு பாருங்க...!’

  அந்த ஜோதிடருக்கு... இரட்டை நாக்காம்... வாங்க அவரைப் போயி பார்ப்போம்...!

  ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே...!
  கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு... என்னடி பொருத்தம் ஆய என் பொருத்தம் இதைபோல...!
  நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்...? உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்...! "தமிழன் என்று சொல்லடா! தலை குனிந்து நில்லடா"

  த.ம. 1
  ReplyDelete
  Replies
  1. ஒரு பொண்ணுக்கு இத்தனை மச்சான்களா? மச்சான்கள் மாட்டிக்குவாங்களா :)

   நண்டுப் பிடியில் மாட்டிக்கிட்டா இந்த கதிதான் :)

   அதெப்படி ருசியாய் இருக்கும் ?குருட்டுக் கோழி விஷத்தை முழுங்கி இருக்கே :)

   கருநாக்கு இல்லைதானே பார்க்கலாம் வாங்க :)

   அப்படித்தான் ஆகிப் போச்சு ,தலைகுனிந்து நிற்கும் படியா :)

   Delete
 4. Replies
  1. மெண்டல் குடும்பப் பொண்ணை ரசிக்க முடிந்ததா :)

   Delete
 5. மச்சான் ந டி கை பிரச்சாரம் வெற்றி தருமா 

  சந்தேகம் தான்....

  ReplyDelete
  Replies
  1. அவருக்கு தேவையான பணம் கிடைக்கும் ,அதுவே அவருக்கு வெற்றிதானே :)

   Delete
 6. 01. இவங்கே பூராம் அண்ணன்-தம்பிகளா ? காரணம் எல்லோருமே மச்சான் என்று போட்டு இருக்கின்றார்களே...
  02. அவலுக்கு தசெளிஞ்சது இவ்லுதான்
  03. டாக் உளறிட்டாரோ......
  04. நம்ம நாகர்கோவில் நாடிசோதிடர் நாடிமுத்து பார்ப்பாரே...
  05. ஆமாமா... நடிகர் மாதவன் செய்திருப்பான்....

  ReplyDelete
  Replies
  1. இதுக்கு மச்சான்கள் தான் பதில் சொல்லணும் :)
   இன்னும் என்ன தெரியணும்? மீனு கொக்கியில் மாட்டித்தானே ஆகணும் :)
   பரட்டைத் தனமா எதையாவது சொல்லியிருப்பாரோ :)
   இரட்டை நாடி சோதிடமும் தெரியுமா :)
   அவர் செய்த தவத்துக்கு விதவிதமா அனுபவித்துக் கொண்டிருக்காரே :)

   Delete
 7. கானாடு காத்தான் மச்சான் ரசிகர்கள் இருப்பதால் ஹி ஹி ஹி...........

  ReplyDelete
  Replies
  1. கூட்டத்தில் சிக்கினால் ,கானாடு காத்தான்கள்கூட நமீதாவைக் காப்பாற்ற முடியாது ஹிஹிஹி :)

   Delete
 8. கானாடுகாத்தான் பாய்ஸ் வாழ்துகிறோம்ன்னு போட்டுட்டானுங்களே.... வாழ்த்துகிறோம்தானே வரணும்... என்ன இது சிவகங்கை சீமைக்கு வந்த சோதனை....

  கேரியர்... ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீ ராம் ஜிக்கு சொன்ன மறுமொழியில் ,என் கண்ணில் பட்ட தவறுகளைச் சுட்டிக்காட்டி இருக்கிறேன் ,தமிழுக்கு வந்த சோதனை :)

   Delete
 9. தேர்தலில் நடிகைகளும் இறங்கியதால
  மாற்றம் வரலாம் தான்
  காலம் பதில் சொல்லும்

  தங்கள் பதிவுகளை இணைத்து மின்நூல் ஆக்க உதவுங்கள்
  http://tebooks.friendhood.net/t1-topic

  ReplyDelete
  Replies
  1. இதற்கு முன்னாலும் நடிகைகள் பிரச்சாரம் செய்து இருக்கிறார்களே,மாற்றம் நமக்கும் வரலே ,அவங்களுக்கும் வரலே :)

   Delete
 10. Replies
  1. உள்ளேயிருக்கும் சரக்கும் அருமைதானே :)

   Delete
 11. நடிகை மக்களுக்கு பணியாற்ற வந்திருக்கார். அவர் அமெரிக்க அதிபராவதன் மூலம் அமெரிக்க மக்களோடு, அங்கேயுள்ள நம்மாட்கள் நம்பள்கி, முகுந்த் அம்மா, நந்தவனத்தானும் பயனடையட்டுமே!

  ReplyDelete
  Replies
  1. நல்லா அடையட்டும் ,நான் வேண்டாம்னா சொல்லப் போறேன் ?
   நம்ம கானாடு காத்தான் ரசிகர்கள் கூட அமெரிக்க மந்திரிகள் ஆனால் சந்தோஷமே:)

   Delete