3 April 2016

சைட் அடிக்க இடம் பொருள் ஏவல் உண்டா :)

 ஞானம் அடைந்த நம்ம DD   :)         
             ''நம்ம DD வலைப் பக்கமே வருவதில்லைன்னு உன் மனைவியிடம் சொன்னது தப்பா போச்சா ,ஏண்டா ?''
              ''அவர் தெளிஞ்சிட்டார் ,நீங்க எப்போ தெளியப் போறீங்களோன்னு கேட்கிறாளே !''

விவரமான பய பிள்ளையா இருக்கானே :)
               ''நொறுங்கத் தின்றால் நூறாண்டு வாழலாம்னு என்று நான் சொல்றதை நம்ப முடியலையா ,ஏண்டா ? ''
               ''ஆமைக்கு பல் இல்லேன்னு சொன்னதும் நீங்கதான் ....அது மனுசனை விட அதிக ஆண்டுகள் உயிர் வாழும்னு சொன்னதும் நீங்கதானே ,ஸார் !''
சைட் அடிக்க இடம் பொருள் ஏவல் உண்டா :)
           ''கோவிலிலே சைட் அடிக்கிறது தப்புன்னு பட்டது, அதனாலே விட்டுட்டேன்!''
          '' எதை?''
           ''கோவிலுக்குப்  போவதை !''

சினிமா /கோவில்னு சொன்னா 'நோ பிராப்ளம் ':)
          ''ஒரு உண்மையைச் சொன்னதாலே ,குடும்பத்திலே குழப்பமா ,ஏன் ?''
           ''FM ரேடியோவிலே ,'நிம்மதி வேணும்னா எங்கே போவீங்க 'ன்னு கேட்டாங்க ,ஆர்வக் கோளாறிலே 'சின்ன வீட்டுக்கு 'ன்னு சொல்லித் தொலைச்சிட்டேன்,அது மனைவி காதுலேயும்  விழுந்துடுச்சே  !''
பாடல் அருமை ,ஆனால் 'லாஜிக் ':)
புருஷோத்தமன் புகழை ...
புல்லாங்குழல்கள் பாடினால் இனிமைதான் !
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்கள் பாடினால் நல்லாவா இருக்கும் ...?

16 comments:

 1. தனபாலன் அண்ணாவ வச்சு இப்படி
  காமெடி பண்ணிட்டிங்களே ஜி....

  சைட் அடிக்க இடம் பொருள் ஏவல் உண்டா....
  அருமை நண்பரே சிரித்தேன் ரசித்தே

  சின்ன வீடுனு சொல்லி பெரிய வீட்டுக்கு
  பிரச்சனை வரதுதான் மிச்சம்...

  ReplyDelete
  Replies
  1. DD வராதது ,பதிவர்களுக்கு பெரும் இழப்புதானே :)

   இதுக்கு மிலிடெரி போலீசும் விதிவிலக்கல்ல :)

   சின்ன நூல் கண்டா நம்மை சிறைப் படுத்துவது :)

   Delete
 2. 1) ஹா.... ஹா... ஹா...

  2) மாத்தி யோசிக்கிறானே பையன்..


  3) சொல்வது ஆனா, பெண்ணா?

  4) சொ.செ. சூ!

  5) இசை!

  ReplyDelete
  Replies
  1. DD அவர்கள் பொருளாதார வளம் பெற்று மீண்டும் வரவேண்டுமென்று விரும்புவதில் தவறில்லையே :)

   அதில் லாஜிக்கும் இருக்கே :)

   சைட் அடிக்கப் படுகிறோம் என்பதையே பெருமையாய் நினைக்கும் பெண்களும் உண்டுதானே :)

   யோசித்தேன் ,மரமண்டைக்கு புரிய மாட்டேங்குது ,அதென்ன சொ.செ.சூ:)

   அந்த பாடலின் இசை எனக்கும் பிடிக்கும் :)

   Delete
 3. பணமா கொண்டு சென்றால் தேர்தல் வலைச்சித்தர்களிடம் சிக்கிக்கொள்ள வேண்டியிருக்குமே...! அதனால் D.D.-யைக் கொண்டு செல்வது உத்தமம் என்று பயணம் தொடர்கிறது...!

  தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்... நூறாண்டு காலம் வாழ்க
  நோய் நொடியில்லாமல் ஆமை... வேகத்திலே வளர்க...!

  கோவிலுக்குள் தெய்வங்கள் இல்லை என்பது நிருபணமாகிவிட்டது... அழகுத் தெய்வங்கள் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ? காவல் தெய்வங்கள்... ‘கடைக்கண் பார்வை பட்டுவிட்டால் மாமலையும் மடுவாமோ...?’

  ‘சின்ன வீடு’ திரைப்படத்துக்குன்னு ஆயிரத்தில ஒரு வார்த்தையை சொல்ல வேண்டியதுதானே...!

  இதுதான் ஆணி வேரையே ஆட்டிப்பார்க்கிறதா...! கரட்டோரம் மூங்கில் காடு, காட்டச் சுத்தி வண்டு பறக்குது,
  ரீங்காரம் போட்டுக்கிட்டு, மூங்கிலையும் வண்டு தொளைக்குது, வண்டு தொளச்ச ஓட்டை வழியே காத்து அடிச்சா,
  ஒரு சத்தமும் கேட்குது, என்ன சத்தம்? அது என்னை இழுக்குது ஆக மொத்தம்!

  த.ம. 2


  ReplyDelete
  Replies
  1. உங்களின் பயணத்தில் நானும் தொடர்கிறேன் :)

   முன்னூறாண்டு காலம் வாழ்க :)

   சாமி பார்க்க வரும் ஆசாமிகள் குறைவோ :)

   இனிமேல் சொன்னால் எடுபடுமா :)

   கற்பனையில் இதெல்லாம் நல்லாத்தான் இருக்கு ,ஒழுங்கற்ற, சத்தம் எல்லாம் இசையாகுமா :)

   Delete
 4. போட்டி..பொறாமை நிறைந்த உலகத்தில்...சைட் அடிக்க இடம் பொருள் ஏவல் உண்டு என்றுதான் தோன்றுகிறது...

  ReplyDelete
  Replies
  1. உண்டு போலத் தோன்றினாலும் உண்மை அது அல்லவே :)

   Delete
 5. 01. முதலில் பிழைப்பு பிறகு வலைப்பு
  02. தேவையில்லாமல் மாட்டிக்கிட்டான்.
  03. தப்பை திருத்திறணும் அதுதான் மனுஷாளுக்கு அழகு
  04. இவனும் தேவையில்லாமல் மாட்டிக்கிட்டான்.
  05. ஹிஹிஹிஹி நான் அப்பொறமாட்டிக்கு வாறேன்

  ReplyDelete
  Replies
  1. எப்படியோ எனக்கு இரண்டு பூவும் ஒத்துழைப்பு கொடுத்துகிட்டிருக்கு :)
   ன் இல்லே ,ர் ,வாத்தியாராச்சே :)
   இவன் செஞ்சது அழகா :)
   தானாட விட்டாலும் சதை ஆடும்னு சும்மாவா சொன்னாக :)
   கரெக்ட்டா சொல்லுங்க எப்ப வர்றீங்க,ஏன் தயங்குறீங்க :)

   Delete
 6. ரசித்தேன்.

  டிடி - முதலில் பிழைப்பு பின்னரே வலைப்பதிவு....

  ReplyDelete
  Replies
  1. படமும் அருமைதானே :)

   பிழைப்புக்கு நடுவே வலைப்பூவும் உண்டுதானே :)

   Delete
 7. வணக்கம்
  ஜி
  இரசித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்.j.ம 7
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. இதுக்காகவாவது, சகோ dd வருவார்ன்னு எதிர்ப்பார்த்தேன் ,அவருக்கும் உங்க வாழ்த்தை சொல்லிவிடுகிறேன் :)

   Delete
 8. Replies
  1. மனது புண்பட்டிருந்தால் மன்னியுங்கள் ஜி !

   Delete