6 April 2016

நாகரீகம் தெரிந்த காதலன் :)

தண்ணியில்லாம மீனு வாழ முடியுமா :)
           ''நம்ம பையன் எந்நேரமும் தண்ணீயிலேயே இருக்கானே ,என்னங்க பண்றது ?''
           ''அவன் உன் வயிற்றில் வளரும் போது ,மீனை நிறைய சாப்பிடாதேன்னு சொன்னேன் ,அப்பவே கேட்டிருக்கணும் !''
உடைதான் பெண்ணுக்குப் பகையா :)
             ''ஒர்க் ஷாப்பில்  வேலைப் பார்க்கிறதிலே உனக்கு என்னடி கஷ்டம் ?''
             ''டிரஸ்ஸை  லூசா  போட்டுகிட்டா  மெஷினுக்கு பக்கத்தில் போக முடியலே ,டைட்டா போட்டுகிட்டா மேனேஜர்  பார்வையே சரியில்லையே !''
ஆபரண நகையினால் ஆபத்து வரக்கூடாது என்பதற்காக :)
         ''தலைவரே ,நானும் நகைங்களை பாங்கிலே வச்சுருக்கேன்னு  எந்த தைரியத்திலே சொல்றீங்க ?''
         ''அடமானத்திலே இருக்கா ,சேப்டி லாக்கர்லே இருக்கான்னு யாரும் கேட்க மாட்டாங்கிற தைரியத்திலேதான் !''
கந்து வட்டியால், நொந்து போய் ,லந்து பண்றாரோ :)
             ''அடகுக் கடைக்கே  வந்து ,'நீங்க எங்கே அடகு வைக்கிறீங்க 'ன்னு கேட்கிறது நியாயமா ?''
            ''நீங்க மனசாட்சியை அடகு வைத்து விட்டு, அநியாய வட்டி போடுறது  மட்டும் நியாயமா ?''
நாகரீகம் தெரிந்த காதலன் :)
காதலிக்கு ...
நாலு பேருக்கு நடுவில் பரிசளித்து விட்டு 
நன்றியினை மட்டும் 
நாலு சுவருக்கு நடுவில் பெற நினைப்பவன் !

18 comments:

 1. மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா... ஆமா... நம்ம பையன் எந்நேரமும் ‘டாஸ்மாக்’ தண்ணியில இருக்கிறதத்தானே சொல்றாய்... அவனுக்குத் தண்ணியில கண்டமுன்னு ஜாதகத்தில இருக்கு... நம்ம நாட்டுக்கும் அதுலதான் கண்டமாம்... கண்டம் விட்டுக் கண்டம் தாவ வேண்டியதுதான்...!

  இனிமே டிரஸ்ஸை டைட்டா போட்டுகிட்டு மேனேஜர் பக்கத்திலே போகாதே... அவரு லூஸ் மாதிரி இல்ல லூஸ்தான்...! டிரஸ்ஸை லூசா போட்டுகிட்டா மெஷினுக்குப் பக்கத்தில் போகாதே... அதுக்கும் லூஸ்தான் பிடிக்கும்...! பிடித்து... இழுக்கும்...!

  தலைவரே! வெளிநாட்டு வங்கிதானே...! எவ்வளவு நகைங்கிற கணக்கெல்லாம் வந்திருச்சு... இந்தக் கணக்கு சரிதானான்னு... இதப் பாத்துச் சொல்லுங்க...!

  வட்டிமீது வட்டி வந்து உன்னைச் சேரும்... அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் என்னைச் சேரும்...!

  சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றிக் கிடந்தோம்... சிறு துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே நடந்தோம்...!

  த.ம. 2

  ReplyDelete
  Replies
  1. அத்தைப் பொண்ணு மீனாவை அவனுக்கு கட்டிவைச்சா எல்லாம் சரியா போகும் :)

   ஆக ரெண்டுமே பிடித்து இழுக்கும் ,ஜாக்கிரதையாய் இரு :)

   நாலைந்து கணக்கு இருக்கு ,நீ எந்த கணக்கை சொல்றே :)

   நீங்க வட்டிக் கடை தரகரா :)

   தோம் ,தோம் ...டம் டம் கல்யாணத்துக்குப் பிறகுன்னா பிரச்சினை இல்லே :)

   Delete
 2. ஓ... இதற்கு அப்படி ஒரு கரணம் இருக்கோ...!

  ஹா... ஹா... ஹா... இப்படி ஒரு கஷ்டம் இருக்கோ!

  ஓ.. இப்படி ஒரு சமாளிப்பு இருக்கோ!

  ஓ... இப்படி ஒரு கேள்வி இருக்கோ!

  ஓ.. இப்படி ஒரு வழி இருக்கோ!

  இன்று என்னமோ திருநாளாக தமிழ்மணம் ஒரு கிளிக்கில் வாக்களித்து விட்டது!

  ReplyDelete
  Replies
  1. தொட்டில் பழக்கத்துக்கு முன்னாடியே வந்த பழக்கமாச்சே இது ,விடுமா :)

   பெண்ணென்றால் இருக்கத்தானே செய்கிறது :)

   தலைவரா ,கொக்கா :)

   கேள்வியில் நியாயம் இருக்கே :)

   வாலிபத்துக்கு சொல்லியா தரணும்:)

   சில நேரங்களில் த ம ok:)

   Delete
 3. ரசித்தேன் நண்பரே!
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. கர்ப்பத்தில் உண்டான பழக்கம் காலத்துக்கும் தொடரும்தானே :)

   Delete
 4. Replies
  1. தண்ணியில்தானே இருப்பதுதானே மீனோட இயல்பு :)

   Delete
 5. ரசித்தோம் பகவான்ஜி!

  ReplyDelete
  Replies
  1. உங்களின் ரசனைக்கும் ,கருத்துக்கும் நன்றி :)

   Delete
 6. 01. கர்ப்பிணிப்பெண்கள் அவசியம் தெரிந்து கொ’’ல்ல’’ வேண்டியது
  02. ச்சே எல்லா பக்கமும் ஆப்பு
  03. தலைவர் வாழ்க
  04. ஸூப்பர் கேள்வி
  05. தெய்வீக காதலன் இவனே..

  ReplyDelete
  Replies
  1. குங்குமப் பூ சாப்பிட்டா சிவப்பா பிறக்கும்னு சொல்றதை மட்டும் நம்புறீங்களே :)
   பாப்பா என்னாதான் செய்வா :)
   ஏதோ வச்சிருகேன்னு என்றாவது ஒத்துக்கிறாரே :)
   உறுத்த வேண்டியவங்களுக்கு உறுத்த மாட்டேங்குதே:)
   இவன் என்ன கருவறையிலா ,அந்த நல்ல காரியத்தை செய்ய நினைத்தான் :)

   Delete
 7. நாகரீகம் தெரிந்த காதலன் மாதிரி... தமிழ்மணத்திற்கும் நாகரிகம் தெரிந்துவிட்டதோ..ஒரு கிளிக்கில் வாக்களித்து விட்டது!

  ReplyDelete
  Replies
  1. தமிழ்மணம் எனக்கு இன்னும் புதிர்மணமாய் தான் இருக்கிறது :)

   Delete
 8. Replies
  1. உடைதான் பெண்ணுக்குப் பகை என்பதை ரசிக்க முடியுதா :)

   Delete
 9. ரசித்தோம் நண்பரே ....

  ReplyDelete
  Replies
  1. தலைவர் நகையை எங்கே வைத்திருக்கிறார் என்பதை ரசிக்க முடியுதா :)

   Delete