20 April 2016

வீதி வரை மனைவி என்பதையும் பொய்ப்பித்து விட்டார்களே :)

            ''என்னடி சொல்றே ? உன் 'சௌராஷ்டிரா ' தோழி  சாந்திக்கு இருக்கிற கொடுப்பினைக் கூட , என் பெண்டாட்டியான உனக்கு இல்லையா .ஏன் ?''
            ''அவங்க வழக்கப்படி ,புருஷன் செத்தா வாய்க்கரிசி போட சுடுகாட்டுக்கு போவாங்கலாமே !''     
           (நேற்று ,நண்பர் ஸ்ரீ ராம் 'எங்கள் பிளாக்'கில் , திரு .கர்ணன் அவர்களின் உருக்கமான ' கர்பத்துவனி ' கதையைப் படித்தேன் .அதில் வந்த 'எல்லா சமூகத்திலும் பெண்கள் சுடுகாட்டுக்கு வருவதில்லை.  சௌராஷ்டிர சமூகத்தில் மட்டும் பெண்களும் வருகிறார்கள் ' 'என்ற வரிகள்தான் ,மேற்கண்ட மொக்கை போட எனக்கு  உதவியது ,எனவே ,ஸ்ரீ ராம்ஜி ,மற்றும் கர்ணன் ஜி ஆகியோருக்கு நன்றி :) 
             (நன்றி ...நக்கீரன் இதழில் வந்த  'சுடுகாட்டில் பெண்கள் 'படம்  பொருத்தமாய்  தோன்றியதால் போட்டுள்ளேன்,இதில் 'சாந்தி'யை தேடவேண்டாம் : ) 
பரம்பரையா  சொத்து மட்டும் வரலே :)
         ''தாத்தா ,பாட்டியை மறக்கவே முடியாதுன்னு சொல்றே ,அவங்க மேலே  அவ்வளவு பாசமா  ?''
         ''எனக்கிருக்கிற  சர்க்கரை நோய் பாட்டி கொடுத்தது ,அதுக்கு செலவு பண்ற பணம் தாத்தா கொடுத்ததாச்சே !''
நான்வெஜ் சமைக்கத் தெரிந்தாலும் இதை செய்ய முடியுமா :)
           ''வீட்டிலே ஒரு பெருச்சாளி அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருக்குன்னு சொல்றே ,ஆனா ,அதை அடிக்காதீங்கன்னு ஏன் சொல்றே ?''
          ''கொன்றால்  பாவம் தின்றால் போச்சுன்னு சொல்றாங்க ,எலிக்கறியை யாருங்க சாப்பிடுறது?''
              இந்த ஜோக்குக்கு வந்த ..ரசிக்கவைத்த கருத்தும் ,என் மறுமொழியும் ....
Chokkan Subramanian>>.அப்ப நீங்க வீட்டுல எலி எல்லாம் வளர்க்கிறீங்களா?Bagawanjee>>>விலைவாசி தாறுமாறா ஏறிப் போச்சு,உங்களை மாதிரி வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்கு கறி விருந்து வைக்க வேண்டாமா ?
Chokkan Subramanian>>>ஆஹா. முன்னாடியே சொல்லிட்டீங்க. அதனால உங்க வீட்டுக்கு ஒரு பெரிய கும்பிடு.
Bagawanjee>>. அப்படியெல்லாம் சொல்லப்படாது ,அன்பாய் அவுல் கொடுத்தாலும் 'பகுத் அச்சா'ன்னு சொல்லி சாப்பிடுறதுதான் ,நமது பண்பாடுங்கிறதை மறக்கலாமா ?
Chokkan Subramanian>>ஹலோ, அவல் எங்கேயிருக்கு, எலிக்கறி எங்க இருக்கு. உங்களுக்கே இது அநியாயமா தெரியலையா. அதுவும் ஒரு சைவக்காரனிடம் எலிக்கறி சாப்பிடுங்கன்னு சொன்னா எப்படியிருக்கும்??
Bagawanjee>> இந்தப் பாட்டை நீங்கள் கேட்டு இருப்பீர்களே ...
#சைவப் பொருளாய் இருப்பவனே அன்று
ஓட்டல் கறியை கேட்டவனே....
ஹிஹி...பிள்ளைக்கறியை கேட்டவனே...
அதே அதே சபாபதே! அதே அதே சபாபதே!#
அந்த சொக்கனே பிள்ளைக் கறி கேட்டு சாப்பிட்டதா புராணம் இருக்கிறது ,இந்த சொக்கன் எலிக்கறி சாப்பிடக் கூடாதா ?
துரை செல்வராஜூ>>>கறிக் கடைக்கு இவ்வளவு ஆதரவு இருக்கா!...
Bagawanjee >>ஒரு நிமிடம் பறக்கிற ஈசலையே வறுத்து தின்கிற உலகமாச்சே இது ,கறிக்கு சொல்லவா வேணும் ?
பொண்ணு மாப்பிள்ளை மட்டுமா பொருத்தம் :)
          ''இன்ஸ்பெக்டர் அய்யா ,உங்க மக வாழ்க்கைப் படப் போறது வசதியான இடத்தில் தானா ?''
         ''என்ன அப்படி கேட்டுட்டீங்க ,பையனோட அப்பா மாசமானா நமக்கே லட்ச ரூபா மாமூல் கொடுத்துக்கிட்டு இருக்காரே !''

24 comments:

 1. சர்க்கரை நோய் பாட்டி கொடுத்தது,
  அதுக்கு செலவு பண்ற பணம்
  தாத்தா கொடுத்ததாச்சே - அது தான்
  அவங்களை மறக்க முடியல
  வீட்டுக்கு வீடு வாசற்படி...

  http://tebooks.friendhood.net/

  ReplyDelete
  Replies
  1. இரண்டும் கிடைக்காமல் போனால் ,வாரிசு பேறு பெற்றவன் :)

   Delete
 2. இது ஜோக்காக நினைக்க முடியுமா ஜி?

  இனிய பரம்பரை!

  குஜராத்திலோ எங்கோ முன்னர் சில விவசாயிகள் பஞ்சக் காலத்தில் எலிக்கறி சாப்பிட்டதாகப் படித்திருக்கிறேன். ஆமாம்.... சொக்கன் ஸார் எங்கே நீண்ட நாட்களாக ஆளைக் காணோம்?

  மாமூல் ஜோக்!

  ReplyDelete
  Replies
  1. எப்பேர்பட்ட கொடுப்பினை ,மனைவி வருத்தப்படுவது காமெடி இல்லையா :)

   பேருக்குப் பின்னால் இனியா இனியான்னு சேர்த்துக்கலாமா :)

   எலிக்கறி கொடுமை இனியும் வேண்டாமே !
   சொக்கன் ஜி அழைக்கப் படுகிறார் ,மேடைக்கு வரவும் :)

   மாமூல் ஜோக்குக்கு என்றுமே மரணமில்லை :)

   Delete
 3. ‘உயிரோட இருக்கும் போதும் வாய்க்கு ருசியா அரிசிய ஆக்கிப் போடலை... செத்தாலும் விட மாட்டேங்கிறியே...!’ த‌வ‌றுக்கும் த‌வறான‌ த‌வ‌றை புரிந்துவிட்டு தனிப்ப‌ட்டுப் போன‌வ‌ன் ஞான‌ப்பெண்ணே...!

  ‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
  வாய்நாடி வாய்ப்பச் செயல்.’

  வாயையும் வயிறையும் வளர்க்க காய்கறியச் சாப்பிட்டுத்தானே ஆகனும்...! ‘பாம்பு திங்கிற ஊருக்குப் போனா நடுத்துண்டம் எனக்குத்தான்...!’

  அப்பா மாசமானா... மோசமால இருக்கு...!

  த.ம. 3

  ReplyDelete
  Replies
  1. காலம் பூரா அரிசியை சோறாக்கி போட்டவளுக்கு வாய்க்கரிசி போட ஆசை வரக்கூடாதா :)

   சர்க்கரை நோய்க்கு பொருத்தமான குறள்:)

   எலியிலே எந்த கண்டம் நல்ல கண்டம் :)

   அப்படியும் அதிசயம் நடக்குமா :)

   Delete
 4. இறுதிப்பயணத்தின்போது சுடுகாட்டுக்கு வரும் மகளிர் தாங்கள் கூறிய இனத்தவர்களே. நான் கும்பகோணத்தில் நண்பர்களின் துயர நிகழ்வுகளில் அதனை கண்டுள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. அந்த இனத்தவர் செய்வதில் தவறேயில்லைதானே:)

   Delete
 5. இனிய பரம்பரை!!

  எலிக்கறி கூட எப்போதோ எங்கோ மக்கள் சாப்பிட்டதாக நினைவு....

  நண்பர் சொக்கனைக் காணவில்லை...மூன்றாவது ஆண் குழந்தை பிறந்ததில் பிசி போலும்...

  ReplyDelete
  Replies
  1. அப்படியும் சொல்லிக்கலாமோ :)

   இப்போதும் சாப்பிடுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள் :)

   மூணாவதும் சிங்கம் என்றால் சிரமம்தானே :)

   Delete
 6. இங்க வாங்கஜி எலிக்கறி இங்கே இலவசம்...

  ReplyDelete
  Replies
  1. காசு கொடுத்து சாப்பிடச் சொன்னாலும் எனக்கு வேணாம் :)

   Delete
 7. இப்பொழுது பெரும்பாலும் ஒரு குழந்தைகள் இருப்பதால் பெண் குழந்தைகள் கொள்ளி வைப்பதே சாதாரணமான நிகழ்வாகிவிட்டது. நானே மூன்று இறுதி சடங்கில் பெண்கள் கொள்ளி வைப்பதை பார்த்திருக்கிறேன்.
  த ம 7

  ReplyDelete
  Replies
  1. கண்ணதாசனின் 'வீதி வரை மனைவி 'என்பது மாறி விட்டது உண்மைதானே :)

   Delete
 8. 01. ஜி நேற்று நான் அதைப் படித்தவுடன் இதைப்பற்றி பதிவு எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன் தாங்கள் முந்தி விட்டீர்கள்...
  02. நன்றி மறப்பது நன்றன்று
  03. எலிக்கறி நல்லா இருக்கும் (சாப்பிட்டவங்க சொல்லக்கேட்டது)
  04. கொடுத்தது ரிட்டன் ஆகுதோ..

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பாணியில் எழுதலாமே ,காத்திருக்கிறேன் :)
   அதுவும் பரம்பரை நோயை எப்படி மறக்கமுடியும் :)
   நான் அப்படி கேள்வி பட்டதுகூட இல்லை:)
   ஒரே இடத்தில் சேர்ந்தால் ஆபத்தாச்சே :)

   Delete
 9. நல்ல நகைச்சுவை. ஜம்புலிங்கமே ஜடா ஜடா (காசியாத்திரை)பாடலை நினைவுபடுத்தியமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நம்ம சொக்கனுக்கு பொருத்தமா அமைந்த பாடலாச்சே :)

   Delete
 10. Replies
  1. சம்பந்திப் போருத்தம் அருமைதானே :)

   Delete
 11. இரசித்தேன்! எலிக்கறி!

  ReplyDelete
  Replies
  1. ரசிக்கலாம் ,கடிக்க நினைக்கக்கூடாது :)

   Delete
 12. ஏதோ ஒரு பிரச்சினையில் ஆண்கள் எல்லோரும் போலீசுக்கு பயந்து ஊரைவிட்டு ஓடிய நிலையில் இறந்த வயதான ஒருவரை பெண்களே தேரை சுமந்து சுடுகாட்டுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ததாக செய்தி வந்ததே...

  ReplyDelete
  Replies
  1. அதுவும் நடந்தது ,ஆனால் இது .....யாருமற்ற அனாதைப் பிணத்தை பெண்கள் தூக்கி வந்து அடக்கம் செய்யும் காட்சி!

   Delete