7 April 2016

நடிகைக்கு பிடிக்காத 'பெர்சனல் டச் ' :)

டாக்டரின் சிபாரிசு சரிதானா :)
                ''கண் பார்வை நல்லாத் தெரியணும்னா காரட் சாப்பிடலாம் ,கறி என்ன சாப்பிடலாம் டாக்டர் ?''
               ''காரட்டைச்  சாப்பிடுற முயலைச் சாப்பிடலாமே !''
தேசீய நோயாகி விட்டதே டயாபெடிக்ஸ்  :)         
          '' விருந்து பரிமாறுகிறவர் சொல்ற விஷயத்தை  நம்பத்தான் வேண்டியிருக்கா ,ஏன் ?''
         ''பக்கத்து இலைக்கு பாயாசம் ஊற்று,அப்படியே எனக்கும் ஊற்றுன்னு  இப்போதெல்லாம்  யாருமே கேட்கிறதில்லையாம் !''
மருமகளை இந்த நிலையிலும் நம்பலைன்னா ....?
         ''உன்  மாமியாருக்கு இரக்கமே இல்லைன்னு  ஏண்டி சொல்றே ?''
        ''நான் காக்கா வலிப்புலே துடிச்சாலும்  பீரோ சாவியை என் கையிலே தரவே இல்லையே !''
நடிகைக்கு பிடிக்காத 'பெர்சனல் டச் ' :)
           ''அந்த இயக்குனர் படங்களில் 'பெர்சனல் டச் ' சீன்கள் சூப்பராய் இருக்கும்னு நடிகைகள் தவிக்கிறாங்க ,நீங்க  சான்ஸ்  கிடைத்தும்  ஏன்  விலகிட்டீங்க ?''
           ''பெர்சனல் டச்சை  அவர் படத்தோட நிறுத்திக்க மாட்டாராமே  ..அதான் !''
நதிமூலம் ,ரிஷிமூலம் மட்டுமா பார்க்கக் கூடாது :)
தோழிகளிடம் ...
தோழிகள் கொடுத்த 'டெட்டிபியர் 'கள் !
தோழிகளுக்கு ...
கைகழுவிய 'பாய் ப்ரண்ட்ஸ் 'கள் கொடுத்தது !

16 comments:

 1. முயலைச் சாப்பிடுங்க டாக்டர்... அப்பவாவது உங்களுக்கு கண் பார்வை நல்லாத் தெரியட்டும்...! முயலுங்கள்... வெற்றி நிச்சயம்!

  இப்பெல்லாம்... பாயாசம் ஊற்றுன்னு யாரும் ஆயாசப்படுவதில்லை...! அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளே...!

  நாயகி! உன் நடிப்பெல்லாம் வில்லிக்கிட்ட எடுபடாதடி...!

  'பெர்சனல் டச் ' சீன்ல உண்மையில நீங்க நடிச்சிங்களான்னு சோதனைதான்...!

  இதுக்குத்தான் நாய் பிரண்ட்ஸ்‘கள்’ போதுங்கிறது...!

  த.ம. 2

  ReplyDelete
  Replies
  1. உங்க பார்வையில் விழ ,முயல் என்ன பாவம் செய்ததோ :)

   செயற்கைச் சர்க்கரை வந்த பின் ,உடம்பின் இயற்கை சர்க்கரை டக் அப் வார் ஆரம்பித்து விட்டதோ :)

   வில்லி படு கில்லிதான் :)

   அதையெல்லாம் படத்தோட நிறுத்திக்குங்க :)

   அந்த கள் தரும் போதையால் மட்டும் ஆபத்து இல்லையா :)

   Delete
 2. Replies
  1. கை மாறிய காரணத்தை ரசிக்க முடியாவிட்டாலும் ,டெட்டிபியர் அழகுதானே :)

   Delete
 3. நகைச்சுவைக ள் அருமை நண்பரே
  ரசித்தே சிரித்தேன்....

  ReplyDelete
  Replies
  1. உண்மையைச் சொல்லுங்கள் டெட்டிபியர் அழகா , ஃபிகர் அழகா :)

   Delete
 4. அப்பொறமாட்டிக்கு வாறேன்..... ஹி..ஹி..ஹி..

  ReplyDelete
  Replies
  1. 01. இவரு.. நல்ல டாக்டர்தானே...
   02. எப்படியோ விசயம் அதுதானே...
   03. இவளும் சாவிக்காக நடிக்கிறது உண்மைதானே...
   04. இவரும் ‘’அந்த’’ மாதிரிதானே....
   05. அப்ப இதுகள் வெட்டி பீஸ்கள்தானே...

   Delete
  2. ஆட்டோமேட்டிக்காய் வந்ததுக்கு நன்றி ஹி..ஹி..ஹி :)

   Delete
  3. முயல் கறி சாப்பிடச் சொன்னா கெட்ட டாக்டரா :)
   பாயாசம் வைக்கிற செலவு பாதியாய் குறைந்து விட்டதாமே :)
   சாவிக்குமா இந்த போராட்டம் :)
   எந்த மாதிரியும் இல்லாத புது மாதிரி அவராச்சே:)
   வெட்டி விடப்பட்டதால் இவைகளும் வெட்டி பீஸ்கள் ஆகிப் போச்சு :)

   Delete
 5. 'பெர்சனல் டச் பன்னினால் என்ன ஆகுமுனு தெரிந்த கதைதானே....

  ReplyDelete
  Replies
  1. சம்மதித்தால் நடிகை வயிறு வீங்கும் ,இல்லையென்றால் இயக்குனரின் கன்னம் வீங்கும் :)

   Delete
 6. தவிர்க்க இயலாத காரணத்தால், கடந்த ஒரு வார காலமாக, வலையின் பக்கமே வர இயலாத நிலை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன் இனி தொடர்வேன் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. பிழைப்புக்கு அப்புறம்தானே வலைப்பூ ? உங்களின் 'கியாரண்டி'க்கு நன்றி :)

   Delete
 7. பக்கத்து இலைக்கு பாயாசம் ஊற்று என
  பக்கத்து ஆளும் கேட்க மாட்டாராம்
  தேசீய நோயாகி விட்டதே டயாபெடிக்ஸ்

  ReplyDelete
  Replies
  1. சுவையிலே அதிக சுவை இனிப்புதான் ,அது கூடாதுன்னு சொன்னால் கொடுமை இல்லையா :)

   Delete