8 April 2016

குடிகாரங்க சாப்பிட வேண்டியதும் ,வேண்டாதமும் :)

பாட்டிலே கதியேன்னு இருந்தா :)     

            ''தலைவரோட கட்டுப்பாட்டில்  கட்சி இல்லைன்னு தெரிஞ்சு போச்சா  ,எப்படி ?''
           ''அவரே ,அவர் கட்டுப்பாட்டில் இல்லையே !''
இருந்தாலும் இவருக்கு இவ்வளவு  கரிசனம் கூடாது :)           
              ''மேற்கூரையில்   திறக்கிற மாதிரி  மூடி வச்சிருக்கீங்களே ,ஏன்  ?''
              ''கூரையைப் பிச்சுகிட்டுக் கொடுக்கிறக்  கடவுளுக்கு வீண் சிரமம் கொடுக்கக் கூடாதுன்னுதான் ..!
கரண்ட் இல்லேன்னாலும் அவருக்கு காரியம் முடியணும்:)
            ''அய்யா பெரியவரே ,கிராமத்தில் இருந்து வந்து இருக்கீங்க சரி ,மேட்னி  ஷோவுக்கான 'கரண்ட் 'புக்கிங் முடிஞ்சுப் போச்சே !''
           ''அப்படின்னா ஜெனரேட்டர் புக்கிங் ஆரம்பீங்க !''
குடிகாரங்க  சாப்பிட வேண்டியதும் ,வேண்டாதமும் :)
           ''உங்க வீட்டுக்காரர் உடம்பு தேறணும்னா நிறைய பழங்கள் சாப்பிடணும் !''
            ''பழங் 'கள் ' சாப்பிட்டு பாழாப்போன மனுசனுக்குப் புரியுற மாதிரி சொல்லுங்க ,டாக்டர் !''
'கடனே'ன்னு எதையும் செய்யக் கூடாது :)
கொள்ளை,கொலைச் செய்யும் ...
ரௌடிகளுக்கும் கூட  தனித்துவமான அடைமொழி பெயர்கள் !
அவர்களின் பெயரில் மட்டுமே உள்ள  தனித்துவத்தை 
நாம் செயலில் காட்டினால் 
நாமும் இங்கே ஹீரோதான் !

22 comments:

 1. பாட்டிலோட கட்டுப்பாட்டில் இருக்கற மனுஷரும், கூரை வழியே கொட்டப் போகும் செவத்தை எதிர்பார்த்து நிற்கும் மனுஷரும், வித்தியாசமான அறிவோட இருக்கற மனுஷரும், கணவன் மேல் கரிசனமுள்ள மனைவியும் வாழ்கவே! கூடவே தத்துவம் சொன்ன பகவான்ஜியும் வாழ்க வாழ்கவே!

  :))

  ReplyDelete
  Replies
  1. அப்படியே ,பாரத் மாதா கி ஜே சொல்லிடுங்க ,இல்லைன்னா வம்பாயிடும் :)

   Delete
 2. கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டப் போகும் கடவுளுக்கு தொல்லை தரக் கூடாது எனும் நல்ல எண்ணம்! :)) ரசித்தேன்.....

  ReplyDelete
  Replies
  1. நல்ல எண்ணத்துக்காகவாவது கொட்டுகிறதா பார்ப்போம் :)

   Delete
 3. Replies
  1. நாய்தான் நடைமேடையில் படுத்துக்கிடக்குது சரி ,அதை தொந்தரவு செய்யுற நாதாரிப் படத்தை ரசிக்க முடிந்ததா :)

   Delete
 4. அதுக்குத்தான் ‘சுதந்திராக் கட்சி’ன்னு பேரு வச்சசே...! கடமை... கண்ணியம் மட்டுமே கொள்கை... ‘கட்டுப்பாடு’ விலக்கு அளிக்கப்படுகிறது! நல்லாக் குடிங்க...குடிங்க... குடிச்சிக்கிட்டே இருங்க...! தண்ணிய... வெயில் காலத்துக்கு எந்தக் கட்டுப்பாடுமில்லாமக் குடிங்க...!

  கூரையைப் பிச்சுகிட்டுக் கொடுத்தா... அப்புறம் கூரையை வேயனுமுல்ல...! வீண் செலவுதானே...!

  இப்பத்தான் கரண்ட் கட் இல்லேங்கிறாங்களே... சும்மா புருடா விடாதிங்க... ஒரே ஒரு டிக்கட் கொடுங்க... பிளாக்கில இல்ல... வெள்ளையில குடுங்க... கிராமத்தான்னா ஏமாத்தப் பாக்குறீங்களா...?

  திராட்சைப் பழங்‘கள்’ நல்லா ஊறல் போட்டுக் கொடுங்க... ரொம்ப வருஷமா இருந்தா... ரொம்ப நல்லது...!

  கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் கொள்ளை கொலை வேந்தன்...!

  த.ம. 4  ReplyDelete
  Replies
  1. சுதந்திரம் இரா கட்சியில் யார் சேர மாட்டாங்களே !ஆட்சியைப் பிடிச்சா மூடுங்க மூடாம போங்க இப்போ டாஸ்மாக் சரக்கைக் கொடுங்க :)

   அதுக்கும் சேர்த்தும் போடச் சொல்லிடுவோம் :)

   இல்லேன்னு சொன்னாலும் இருக்குதே !வெள்ளை டிக்கெட்ன்னு சொல்றீங்க ,சிகப்பா இருக்கே :)

   அதைக்குடிச்சுதானே இந்த நிலையில் இருக்கார் :)

   ஏன் .மாமூல்னு நோகாம நொங்கு தின்கிறாங்களே என்றா :)

   Delete
 5. தலைவர் குடியோட கட்டுப்(பாட்டில்ல)
  இருக்கார்

  ReplyDelete
  Replies
  1. அப்படின்னா ,சிறப்பா வருவார் :)

   Delete
 6. 01. அப்படீனாக்கா யாரோட கண்ட்ரோல் ?
  02. செலவு மிச்சமானதே கடவுள் கொடுத்த பாக்கியமோ... ?
  03. நியாயம்தானே..
  04. பழய சாரா(யம்) கொடுக்கலாமே ?
  05. ஸூப்பர் ஜி

  ReplyDelete
  Replies
  1. அது தெரியாமத்தானே தொண்டர்கள் முழித்துக் கொண்டிருக்கிறார்கள் :)
   இப்படி ஆளுக்கு ,ஓட்டை மட்டும்தான் மிச்சமாகும்னு படுது :)
   நியாயத்துக்காக அவரோடு சேர்ந்து குரல் கொடுக்க வாங்க :)
   தாராளமா கொடுக்கலாம் ,இருக்கப் போறது சிலநாள் தானே :)
   நீங்களும் வலையுலக ஹீரோதானே :)

   Delete
 7. நாயோடு உறங்கும் உறவா
  தலைவரு - அவரே
  அவர் கட்டுப்பாட்டில் இல்லையே...
  தலைவரின் கோலம்
  இப்படி என்றால்
  கட்சியின் கோலம்
  எப்படி இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. நாயோடு படுத்து இருப்பவரின் மனைவி இதைப் பார்த்தால் என்ன சொல்வார் ?அடச்சீ ,நீஎல்லாம் ஒரு ஆம்பளையா :)
   கட்சி ,அலங்கோலம் ஆகட்டும் ,நாடு ஆகிவிடக்கூடாதே :)

   Delete
 8. ரசித்தேன் ஐயா
  தம 7

  ReplyDelete
  Replies
  1. நாலு கால் மனிதனையும் ,ரெண்டு கால் நாயையும்தானே :)

   Delete
 9. ஜியின் கலக்கல்ஸ்....

  எல்லாம் ரசித்தேன் ஜி....
  முந்தைய பகிர்வுகளையும் வாசிக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. இன்னைக்கு வார விடுமுறையா குமார் ஜி ?
   வளைத்துக் கட்டி,நிறைய பேருக்கு பின்னூட்டம் இட்டு இருக்கீங்களே ,நன்றி :)

   Delete
 10. கூரையைப் பிய்த்துக் கொண்டு..ஹஹஹஹஹ்...

  கரிசனம் மிக்க மனைவி..ஹஹஹ்..

  சரி அந்த நாலுகால் செல்லத்தின் மீது கை போட்டுக் கொண்டு படுத்திருப்பவர் டாஸ்மாக் பிரியர் போல அந்த நாலுகாலும் அப்படியாகிவிட்டதா!!!? ம்ம் பரவாயில்லை டாஸ்மாக் பிரியரானாலும் நாலுகால் பிரியராகவும் இருப்பார் போல...

  ஜோக்காளியின் தத்துவம் ரசித்தோம்...

  ReplyDelete
  Replies
  1. கூரையின் வழியா கொள்ளைக்காரன் வந்து விடப் போகிறான் :)

   Delete
 11. புரிகிற மாதிரி சொன்னாலும் பாழாய் போன மனுசனுக்கு... புரியாவா போகிறது

  ReplyDelete
  Replies
  1. இனி புரிந்து எந்த பிரயோசனமும் இல்லை :)

   Delete