9 April 2016

மனைவிக்குத் தெரியாமல் வச்சுக்கலாமா :)

எனக்கொரு சந்தேகம் :)              
               ''சேலை கட்டிய மாதரை நம்பாதேன்னு சொல்றதை நீங்க நம்புறீங்களா ?''
              ''அதையும் நம்ப முடியலே ,இதைச் சொன்னவர் ஔவையார் என்று சொல்லப் படுவதையும் நம்ப முடியலே !''
எம்டனுக்கு எம்டன்கள்:)
           ''பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டுப் போய் ஒரு மாசமாச்சே ,அடுத்து பேசவே இல்லையே ,நியாயமா ?''
           ''அன்னைக்கு ,பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொன்னாதான் டிபன்னு சொன்னீங்களே ,அது மட்டும் நியாயமா ?''
மனைவிக்குத் தெரியாமல் வச்சுக்கலாமா :)
                "ATM ரூமுக்குள்ளே போனாதான் தெரியுது ...பலபேர் , மனைவிக்குத் தெரியாமல் வச்சுக்கிட்டு இருக்காங்கன்னு ........!"
                "எதை ?"
               "பேங்க் பாலன்ஸ்சை தான் !அதை  மறைக்க  பாலன்ஸ் சிலிப்பை கிழிச்சு போட்டுட்டு போயிடறாங்களே! "
ஆண்களுக்கு 'டைம் பாஸ் ' சரி ,பெண்களுக்கு :)
         ''டைம் பாஸ் வார இதழில் ஆண்களுக்கான  'கில்மா ' மேட்டர்தான் வருது ! நாம படிக்கிற மாதிரி இல்லேடி !''
          ''ஒண்ணும் கவலைப் படாதே !அடுத்து பெண்களுக்காக 'மெனோ பாஸ் 'னு வார இதழ் வரலாம்  !''

உயிரே ,உன் விலை என்ன :)
கோழிகளின் கழுத்து அறுபடும் போதுகூட  ஏற்படாத பரிதாபம் ...
'கோழிக் கறி கிலோ ரூ 100,உயிருடன் கிலோ ரூ 80'
என்பதைப் படிக்கையில் ஏற்படுகிறது !
உயிருக்கு என்னதான் மதிப்பு ?

16 comments:

 1. ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ அதான்... யாரும் இப்ப சேலை கட்டுவதில்லையோ...?!

  அன்னைக்கு ‘டிபன்’தான் பிடிச்சிருக்கின்னு இன்னைக்குச் சொல்றீங்களே...!

  ‘படித்ததும் கிழித்து விடவும்...! பணத்தை எடுத்ததும் எண்ணிடம் கொடுத்து விடவும்...!’ சின்னவீடு சொன்னது... சொன்னபடி கேளு... நீ என்னுடைய ஆளு...!

  காலம் கடந்தும் ‘பாஸ்’ பண்ணுவது இதுதானோ...?! எல்லாம் நேரம்...!

  கோழி கூவி பொழுது விடியுதுன்னு யாரும் சொல்லிட்டக் கூடாதின்னு... பெருமுயற்சி...!

  த.ம. 1

  ReplyDelete
  Replies
  1. சேலைக் கட்டிய ஔவையார் எப்படி இப்படி சொல்லி இருக்கக்கூடும்:)

   இப்போ சொல்றோம் ,டிபன் மட்டும்தான் பிடிச்சிருக்கு :)

   வில்லங்கம் இப்படியும் வருமா : )

   எப்படியோ பாஸ் ஆனால் சரி :)

   நல்ல முயற்சி வெல்லட்டும் :)

   Delete
 2. மனைவிக்கு தெரியாம வச்சுக்க கூடாதுதான்
  தெரிஞ்சா பேங்க் பேலன்ஸ் அவ்ளோதான்....
  ஸ்ட்ரா போட்டு ஜூஸ் உறிஞ்சுற மாதிரிதான்
  பேலன்ஸ் அவ்ளோவும் உறிஞ்சப் படும்....

  ReplyDelete
  Replies
  1. நீங்க மூணு முடிச்சு போடலைங்கிறதை நம்பவே முடியலே :)

   Delete
 3. Replies
  1. உண்மையே உன் விலையென்ன என்று சோ அவர்கள் கேட்ட மாதிரி உயிரே உன் விலையென்ன என்று கேட்கத் தோணுதா :)

   Delete
 4. 01.நம்புவதற்க்கு கஷ்டமாத்தேன் இருக்கு....
  02. வந்த்தே அதுக்குத்தானே...
  03. மனைவிக்கோர் மரியாதைதான்
  04. வரட்டும் அபுதாபி டாலர் எடுத்துகிறலாமா ?
  05. அதானே கோழிக்கு மதிப்பு கொடுத்து கிலோ 200 ரூபாய்க்கு வாங்குவோமா ?

  ReplyDelete
  Replies
  1. அப்படியல்ல என்று இன்னொரு விளக்கம் சொல்கிறார்கள் ...சேல் அகட்டிய ,அதாவது ஓரக்கண்ணால் பார்க்கின்றப் பெண்ணை நம்பக்கூடாது என்பதாம் !இதுவும் ஆணாதிக்கச் சிந்தனை தான் ,ஆண் எப்படி வேண்டுமானால் சைட் அடிக்கலாம் என்று சொல்வது எந்த வகை நியாயம் :)

   ஓசி டிபனுக்கு அலையுறவங்களா:)

   மரியாதை இப்படி மறைப்பதிலா :)

   ஒண்ணும் அவசரமில்லே ,வரட்டும் பார்த்துக்குவோம் :)

   கொடுத்தா கடைக்காரர் வேண்டாம்னா சொல்லப் போறார் :)

   Delete
 5. ATM ரூமுக்குள்ளே
  கிழிச்சு போட்ட பாலன்ஸ் சிலிப்பை
  கணக்குப் பார்த்தால்
  மனைவிக்குத் தெரியாமல்
  வங்கிக் கணக்கு வைத்திருப்போரை
  கண்டுபிடிக்கலாம் என்கிறியள்!

  ReplyDelete
  Replies
  1. வெளியே வந்து கிழிச்சுப் போடுறவங்க கணக்கை எப்படி எடுப்பது :)

   குப்பைச் சேரக்கூடாது என்பதற்குத்தான் , அந்த மெஷினில் ஸ்லிப் வேண்டுமா என்று தேர்வை வைத்து இருக்கிறார்களோ :)

   Delete
 6. கோழியின் மதிப்பு சிந்திக்க வேண்டிய விஷயம்தான்...
  ஏடிஎம்ல சிலிப்பை கிழிக்காம போட்டா, இருக்க ஜீரோ பாலன்ஸைப் பார்த்து மத்தவனுங்க விஜயகாந்த் மாதிரி துப்பிட்டா... அதான்...

  ReplyDelete
  Replies
  1. ஊரு உலகத்துலே யாருமே துப்பாத மாதிரி ,இந்த விஜய்காந்த் துப்பினது மட்டும்தான் ,உங்களுக்குத் தெரியுதான்னு ,விஜய்காந்தே கேட்கிற நிலைமை வந்திடும் போலிருக்கே :)

   Delete
 7. மனைவிக்குத் தெரிந்து வச்சுருந்தாலும் என்ன ஆகப்போகப்போவுது.... ஃஃஃ

  ReplyDelete
  Replies
  1. அது சரி ,மனைவியோட அருமை பெருமை உங்களுக்குத் தெரியாதே :)

   சே.குமார் ஜி அவர்களிடம் கேட்க முடியாத கேள்வியை உங்களிடம் கேட்கிறேன் ...என் தளத்தில் த ம வாக்களிப்பதில் இடையூறு ஏதும் ஏற்படுகிறதா ?

   Delete
 8. அனைத்தையும் ரசித்தேன் நண்பரே!
  த ம 6

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் கூட 'மெனோ பாஸ் 'இதழை கொண்டு வர முயற்சிக்கலாமே :)

   Delete