1 May 2016

லியோன் ,லியோனி ,யார் அதிக பிரபலம் :)

 அப்பன் கதியே உனக்கும் வந்திடப் போவுது :)          
                ''எங்கப்பனும் ஒரு குடிகாரன் ,அந்த காலத்துலே வாழைப் பழத் தோலில் வழுக்கி விழுந்து செத்தார் !''
                ''வாழைப் பழத் தோலுக்குப் பதிலா , இப்போ தண்ணீர் பாக்கெட் பை வழியெல்லாம் கிடக்கு,கவனமா காலை வை ! ''
 லியோன் ,லியோனி ,யார் அதிக பிரபலம் :)              
             ''நம்ம லியோனி வாங்கின புது செல் ,எந்த கம்பெனி ?'' 
             ''ஜியோனி தான் !''
ஜாதகம் போலியா ,ஜோதிடர் போலியா :)
        ''தலைவரோட ஆயுசுக் காலம் நாளையோட முடியுதுன்னு எப்படி சொல்றீங்க ,ஜோசியரே ?''
         ''ஜாதகத்தில் ஜனன நேரம் பக்கத்திலே,ஜனகன மன நேரமும் போட்டிருக்கே !''
தங்கம் விக்கிற விலையில் ...:)
          ''நீங்க தெரியாம விழுங்கின மூக்குத்தியைஆப்ரேசன் செஞ்சு எடுக்கணும்னா லட்ச ரூபாய் செலவாகுமே !''
          ''பரவாயில்லை டாக்டர் ,நான் வேற மூக்குத்தியை வாங்கிக்கிறேன் !''
மனித மனம் ஒரு குரங்கு :)
டார்வின் கொள்கைப்படி ...
பரிணாம வளர்ச்சியில் உருவம் மாறிவிட்டாலும் ...
குரங்கின் குணம்மனதிலே மாறாமலே இருக்கிறது ...
சேனலை மாற்றி மாற்றி  தாவிக் கொண்டே இருக்கும்
TV ரிமோட்டே சாட்சி  !

23 comments:

 1. அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. மூக்குத்திப் படத்தையும் தானே :)

   Delete
 2. லியோன் மற்றும் லியோனி -- இந்த இரண்டும் ஒரே அம்மணியின் பெயர் தான். இடம், பொருள், ஏவல் பார்த்து லியோன் அவர்கள் லியோனி ஆவார்!

  மாற்றம் புரிந்தததா?
  புரியாதவர்கள் மறுபடியும் அரிச்சுவடியிலிருந்து படிக்கோணும்!

  ReplyDelete
  Replies
  1. லியோனி லியோனை விட பிரபலம்!

   Delete
  2. இது சம்பந்தமாய் விளக்கமாய் பதிவொன்று நீங்க போடலாமே :)

   Delete
  3. நேயர் விருப்பம்...சரி! உங்களுக்காக அடுத்த பதிவு! சினிமா பகுதிய

   Delete
  4. பதிவு போடுங்க ,அதில் படத்தைப் போட்டுறாதீங்க :)

   Delete
 3. Replies
  1. ஜனகண மன என ஜதி சொல்லும் நேரத்தையும்தானே :)

   Delete
 4. ஹா ஹா மூக்குத்தி காமெடி
  அருமை நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. மூக்குத்தி மின்னல் போல் கண்ணைப் பறிக்குதா :)

   Delete
 5. Replies
  1. டிவி ரிமோட்டையும் தானே :)

   Delete
 6. 01. ஹாஹாஹா ரெண்டும் ஒண்ணுதான்.
  02. நீங்க பெரிய ஞானிதான்
  03. இவரு எந்த ஊரு சோசியரு ?
  04. உள்ளதுதானே உள்ளே இருந்தாலும் திருடன் கைக்கு போகாமல் இருக்கும்
  05. 100க்கு100 உண்மை ஜி

  ReplyDelete
  Replies
  1. காலத்துக்கு ஏற்ற மாதிரி வடிவம்தான் மாறியிருக்கு ,செயல் ஒன்றுதான் :)
   உங்க பூ ஞானியை விடவா :)
   மல்லாங்கி ஜோசியர்தான்:)
   வயிற்றைக் கிழிக்காமல் இருக்கணுமே :)
   இப்போ டச் ஸ்க்ரீனும் அப்படித்தான் :)

   Delete
 7. அனைத்தும் அருமை. கடைசி பஞ்ச் சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. கையிலே ரிமோட் ,இயக்குறது மனசுதானே :)

   Delete
 8. இரண்டுமே பிரபலமாகத்தானே தெரிகிறது....

  ReplyDelete
  Replies
  1. ஒன்று 'செம கட்டை'யால்,இன்னொன்று 'கட்டைக்'குரலால் பிரபலம் ,அப்படித்தானே :)

   Delete
 9. எனக்கு லியோனியைத் தெரியும். அதுயார் லியோன்? (அதிலேயே ஜியோனி என்று வேறு போட்டுக் குழப்பிவிட்டீர்கள்... தலைப்பில் லியோன் என்று வருகிறது, சரி. அப்புறம் நகைச்சுவையின் உள்ளே ஜியோனி என்று வருகிறதே?எழுத்துப் பிழையா? சரிபார்க்கவும்.)

  ReplyDelete
  Replies
  1. உலகத்தை கதி கலங்க வைத்த ஒசாமா பின் லேடனையே ,'பிறந்த மேனியுடன் 'கதி கலங்க வைத்த லியோனை உங்களுக்கு தெரியாதா ?
   ஜியோனி என்பது செல் கம்பெனியின் பெயர் !தலைப்பை இதில் சேர்த்து குழப்பியது ,ஒரு கவர்ச்சிக்காகத்தான் :)

   Delete
 10. தண்ணியில கண்டம் இதுதானோ...?

  செல்லும் இடமெல்லாம் பேசும் செல்லா... ஜியோனி!

  பரவாயில்லை... ஜோசியரே... நாளைக்கு சனிக்கிழமை... சனிப்பொணம் தனியா போகாதுன்னு சொல்லுவாங்க... அதப்பத்தி ஏதும் போட்டிருக்கா...?

  ஒங்கள இலட்சாதிபதியா ஆக்கவேண்டிய இலட்சியம் எனக்கில்ல...!

  மனம் ஒரு குரங்கு... தாவித் தாவிப் பார்க்கிறது...! மனிதக்குரங்கு...!

  த.ம. 9

  ReplyDelete
  Replies
  1. இவர் அதில் வழுக்கி விழுந்தால்,அவருக்கு அது கண்டம்தான் :)

   ஜியோனி ,லியோனி சொல்லும் போதே ஒரு லயம் இருக்கே :)

   இடத்தைக் காலி பண்ணுங்க ,என்னையும் கூட்டிகிட்டு போகும்னு சொல்லுதே :)

   ஏற்கனவே டாக்டர் கோடீஸ்வரர் ஆச்சே :)

   தாவினாலும் பற்றிக்க எதுவும் கிடைக்க மாட்டேங்குதே:)

   Delete