2 May 2016

மடியிலே கணவன் ,மனதிலே காதலன் ,சரிதானா :)


 புத்தரோடப்  பல்லை இன்னும்  பாதுகாக்கிற  மாதிரி :)              
                    ''காலமான பெரியவரோட  ஒரு பல் வேணும்னு  பிள்ளைங்க அடிச்சுக்கிறாங்களே,அவர் ஞாபகார்த்தமா வைச்சுக்கப்  போறாங்களா ?''
                  ''அட நீங்க வேற ,அது தங்கப் பல் ஆச்சே :)''
பெரிய தேவ ரகசியம் சொல்லப் போறார் :)        
            ''அம்மா தாயே ,சாப்பிட்டு நாலு நாளாச்சு ,ஏதாவது இருந்தா போடுங்க !''
            ''நாலு நாள் சாப்பிடாம தாக்குப் பிடிக்கிற அளவுக்கு  அப்படியென்ன  சாப்பிட்டே ,அதை முதல்லே சொல்லு !''
கரப்பான் பூச்சியிடம் உள்ள பயம் கூட கணவனிடம் ...?
        ''உங்க மீசையைப் பார்த்தா எனக்கு கரப்பான்பூச்சி ஞாபகம்தான் வருது !''
       ''உங்களுக்கு வருது சரி ,கரப்பான் பூச்சிக்குப் பயப்படுற என் மனைவிக்கு  வர மாட்டேங்குதே !''
மாப்பிள்ளை 'CHEF 'ப்பா இருப்பாரோ ?
           '' கல்யாணமான புதுசுல நான் ,அடிக்கடி  என் பிறந்தகத்துக்கு போவேன் ,நீயேன் வரவே மாட்டேங்கிறே ?''
           ''நான் என்னம்மா  செய்றது ?அப்பா சமையலைவிட அவர் சமையல் அருமையா இருக்கே !''
மடியிலே கணவன் ,மனதிலே காதலனா ?
'ஒன் பை டூ 'டீ கூட 
எனக்கு பிடிக்காதாகையால் ...
என்னை ...என்னை மட்டுமே 
விரும்பும் பெண் தேவை !

18 comments:

 1. ரசித்தேன் ஜி.

  தம இன்னும் சப்மிட் ஆகவில்லை!

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மணம் அடிக்கடி மக்கர் பண்ணுவதை ,ரசிக்க முடியவில்லையே ஜி :)

   Delete
 2. ஹா ஹா அருமை நண்பரே
  சிரித்தேன்,ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. எழுத்தை விட படம் அருமையாய் ரசிக்க வைக்குது ,அப்படித்தானே :)

   Delete
 3. ரசித்தேன் நண்பரே
  முயன்றும் தம சப்மிட் செய்யஇயலவில்லை

  ReplyDelete
  Replies
  1. நம்ம மணவை ஜேம்ஸ் அவர்களின் 'புதிய உடன் படிக்கை 'பதிவுடன் அப்டேட் ஆகாமல் உள்ளது தமிழ்மணம் !நாலுநாள் என் பதிவுடனே நிற்கட்டும் என்று உடன்படிக்கை ஏதும் கையெழுத்து ஆகியிருக்குமோ :)

   Delete
 4. அப்பா சமையல். அவர் சமையல். இதுமாதிரியான கற்பனை பகவான்ஜீக்கு மட்டுமே வரும்.

  ReplyDelete
  Replies
  1. கற்பனை வருகிறது ,சமையல்தான் வர மாட்டேங்குது :)

   Delete
 5. தமிழ்மணம் ஓட்டுப்பட்டை என்ன ஆயிற்று? வந்ததும் மீண்டும் வருவேன்.

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மணம் சரியாக வேண்டுமென்று கூகுள் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்வதைத் தவிர வழியில்லை:)

   Delete
 6. தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ...? அதுனாலதான்... தங்கர்பச்சனின் பல்லிற்காக... போராட்டம்...!

  நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி...சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார்… செல்வாக்கு சேரும் காலம் வீடு தேடி வந்தது…. நல்ல காலம் பொறக்குது... ஜக்கம்மா சொல்றா... அடுத்த வீடு பாரு...!

  அதான் மனைவிய மாத்தி... என்னை ஆக்கிக்கங்க... நான் பயப்படுவேன்...!

  அதான் கேட்ரிங் படிச்ச மாப்பிள்ளை வேணுமுன்னு தேடிக் கட்டிக்கிட்டியா...?

  ‘இதற்காகத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா...?’ இருந்தாலும் ரொம்பத்தான் ஆசைப்படக் கூடாது...! இதற்கூடச் சுதந்திரம் கிடையாதா...?
  ReplyDelete
  Replies
  1. சொத்துக்கு மல்லு கட்டுவார்கள், சொத்தைப் பல்லுக்கா மழு கட்டப் போகிறார்கள்:)

   உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் என்று காதைக் கடிக்க வேண்டாமா :)

   இப்போ இப்படித்தான் சொல்வீக ,தாலி கட்டினாதானே தெரியும் :)

   விரலுக்கு அதுக்குதானே 'ரிங்'கையும் போட்டோம் :)

   இதுக்குகூட ஆசைப் படக்கூடாதா ?எந்த மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம் நாம் :)

   Delete
 7. 01. பாசக்கார புள்ளைக...
  02. அதானே பொய் சொல்லக்கூடாதுதுல...
  03. கரப்பான் பூச்சினு நினைச்சு கட்டையால அடிச்சுடாம...
  04. ரெண்டுமே மதுரை ஆட்(ச்)சி
  05. இதென்ன மாப்பிள்ளை விளம்பரமா ?

  ReplyDelete
  Replies
  1. அதான் இப்படி அடிச்சுக்கிறாங்களோ:)
   பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்கிறதே:)
   அடிச்சிட்டு சமாளிக்க இப்படியும் சொல்லலாம் :)
   நளபாக ஆட்சியும்கூட :)
   எதிர்ப்பார்ப்பதில் என்ன தவறு :)

   Delete
 8. தமிழனாய் பிறந்ததற்கு மாதவம்தான் செய்திருப்போம் போலிருக்கிறது !
  இப்படி சொல்லி உங்க அருமையான ஜோக்குகளை ரசிச்சுட்டு இருக்கிறோம்.நள்றி.

  ReplyDelete
  Replies
  1. அதுவும் ஜோக்காளியின் தினசரி மொக்கைகளைப் படிக்க மாதவம்தான் செய்திருக்கணும் :)

   Delete
 9. என்னை மட்டும் விரும்பும் மணமகள் தேவை என்று சொல்லாமல்..இவ்வளவு சொத்து உள்ளவர்க்கு என்று போட்டால் ..... வரிசையில.. நிற்பார்களா...!!!

  ReplyDelete
  Replies
  1. காதலனைத் துறந்து பலரும் வரிசையில் நிற்கக்கூடும் :)

   Delete